15 வருட சமூக சேவை; 250 இறுதிச் சடங்கு; ஆந்திர ‘மக்கள் நாயகன்' வெங்கட்ரமண ரெட்டி!
நீங்கள் ஆந்திராவின் அனந்தபூரில் இருந்தால், நீங்கள் ஒரு இறுக்கமான சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தால் நீங்கள் அழைக்க வேண்டியது, சஞ்சீவானி அறக்கட்டளையின் நிறுவனர் - அறங்காவலர் வெஞ்செட்டி வெங்கடரமண ரெட்டி.
மக்களுக்கு சேவையாற்றவே தனது வாழ்நாளை அர்பணித்தவர். குருதி கொடை, மருந்துவம், கைவிடப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் என எதுவாக இருந்தாலும் முன்னாடி நின்று உதவக் கூடியவர்.
வெங்கடரமணா கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற சேவைகளை வழங்கி வருகிறார். பள்ளிப் படிக்கும்போதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயக்கமின்றி முன்னால் வந்து நிற்பவர். ‘அவர் இல்லை என்றால் நான் வாழ்வதே கஷ்டமாக இருந்திருக்கும்’ என்று அவரால் உதவி பெற்ற பலரும் கூறுவதுண்டு.
வெங்கடரமணனே ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், மற்றவர்களுக்கு உதவுவதில், அவருக்கு வறுமை ஒரு தடையாக இருக்கவில்லை. பள்ளியிலிருந்தே, மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பம் அவருக்குள் இருந்தது, தனக்கு உணவு இல்லை என்றாலும், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை கொண்டவர்.
ஒரு விழாவில் மீதமான உணவை எடுத்துக்கொண்டு, அருகிலிருந்த முதியோர் வீடுகளுக்கும் அரசு மருத்துவமனைகளுக்கும் எடுத்துச் சென்று வழங்கியவர். தற்போது வரை, கைவிடப்பட்ட 250 உடல்களின் இறுதி சடங்குகளை நடத்தியுள்ளார்.
அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், அவரது மனைவி ஒரு அரசு கல்லூரியில் ஒப்பந்த விரிவுரையாளராக உள்ளார். வெங்கடரமணாவின் உதவிகளை அவரின் மனைவி ஒருநாள் கூட தடை செய்தது இல்லை.
வெங்கடரமணாவுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறார். இதனால் இத்தனை வருடங்களாக மக்களுக்காக பம்பரமாக சுழன்று சேவைப் செய்து கொண்டு இருக்கிறார்.
தகவல் உதவி - indiatimes