Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இணைய பிரச்சாரத்தில் கட்சிகளை விஞ்சும் தேர்தல் ஆணையம்!

இணைய பிரச்சாரத்தில் கட்சிகளை விஞ்சும் தேர்தல் ஆணையம்!

Friday April 22, 2016 , 3 min Read

தற்காலத்தில் திருவிளையாடல் தருமி இருந்து, அவர் ஈசனிடம் பிரிக்க முடியாதவை எவை எனக் கேள்வி எழுப்பியிருந்தால் தேர்தலும்.. பிரச்சாரமும் என்றுகூட அந்த ஈசன் பதிலளித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அந்த அளவுக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என எந்த தேர்தல் என்றாலும் பிரச்சாரம் என்பது அவ்வளவு முக்கியம். சரி கட்சிகள் ஓட்டுக்காக பிரச்சாரம் செய்கின்றன... காலம் மாறிவிட்டதால் கணினி வழியிலும் பிரச்சாரம் செய்கின்றன... ஆனால் இந்த பிரச்சார யுத்திக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் என்ன சம்பந்தம் என கேட்கீறீர்களா?

ஒன்று 'போடுங்கம்மா ஓட்டு' ரகம், மற்றொன்று 'ஓட்டு உங்கள் உரிமை, அதை அளிப்பது உங்கள் கடமை' என்பதை உணர்த்தும் ரகம். இந்த பிரச்சாரத்தில்தான் இணையதளத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

image


வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்துக்கு 'நோட்டுக்கு ஓட்டு' சர்வ வல்லமை பொருந்தியதாக இருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரே கருத்து தெரிவித்த பின்னர், தமிழகத்தில் நேர்மையாக, நியாயமாக தேர்தல் நடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவால் என்றால் அது சற்றும் மிகையாகாது.

தங்கள் பொறுப்பை செம்மையாக செய்ய தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்த உத்திகளில் ஒன்று இணையதள பிரச்சாரம்.

கவனிக்கத்தக்க ஹேஷ்டேகுகள்...

#TN100PERCENT இப்படி ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி இதைத்தான் கவர் ஃபோட்டாவாகவே வைத்திருக்கிறது தமிழக தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கம் https://twitter.com/tnelectionsceo | ஃபேஸ்புக் பக்கம் https://facebook.com/TNElectionsCEO

தமிழக தேர்தல் ஆணையத்தின் முதல் பிரச்சாரம் அனைவரும் தங்கள் வாக்களிக்கும் ஜனநாயகக் கடைமையை நிறைவேற்ற வேண்டும் என்பதே. அதற்காகவே இந்த #TN100PERCENT ஹேஷ்டேக்.

இன்னொரு கவனிக்கத்தக்க ஹேஷ்டேகும் இருக்கிறது. அது, #DontSellYourVote. உங்கள் ஓட்டை விற்பனை செய்யாதீர்கள். உங்களை கடமையை செய்ய பணம் கேட்காதீர்கள் என்பதை வலியுறுத்துவதற்கு. "ஒரு தடவ நீங்க வாங்கினா 5 வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி" இப்படி சினிமா பாணி டயலாக் நிறைய இருக்கு.

image


இதுமட்டுமல்ல. அட எப்ப பார்த்தாலும் அட்வைஸ் என்றால் நம்ம இளைஞர்களுக்கு சற்று சலிப்பு தட்டி விடுமே. அதான், விநாடி-வினா நடத்தி வின்னர்ஸ் லிஸ்ட்டையும் அறிவிக்கிறாங்க. அதுக்கும் ஒரு ஹேஷ்டேக் இருக்கு. அதுதான் #TNEQ. இந்த ஹேஷ்டேக்கின் கீழ் விதவிதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. தேர்தல் நடைமுறைகள், சட்டப்பேரவை தொடர்பாக பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளும் இதில் இடம் பெறுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கும் ட்விட்டராட்டிகளை பாராட்டி அவர்கள் ட்விட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு அந்த நபர் அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் (எபிக்-EPIC) எண்ணை [email protected] என்ற இணையதளத்துக்கு அனுப்புமாறு குறிப்பிடப்படுகிறது. இவை சிறு பரிசும் ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும்தானே. அதுமட்டுமல்ல 5, 10 நிமிடங்கள் கூகுள் செய்தாவது விடையைத் தேடி பதில் அளிக்கும் இளைஞர்களுக்கும் அறிவை தீட்ட ஒரு வாய்ப்பு அல்லவா இது.

மீம்களுக்கு பஞ்சமில்லை...

ஹேஷ்டேக் ஒருபுறம் இருக்கட்டும் இணையவாசிகளின் இன்றைய டிரெண்ட் மீம்ஸ். அந்த நாடித்துடிப்பை சரியாக கணித்த தேர்தல் ஆணையம் பல்வேறு மீம்ஸகளை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் சில..

* கண்ணா நீ எங்க எப்படி ஓட்டுப்போடுவன்னு தெரியாது. ஆனா ஓட்டு போடுரு நேரத்துல வாக்காளர் பட்டியல்ல பேரு கரெக்டா இருக்கணும் (இது யார் ஸ்டைல் என்று யாரும் சொல்லத் தேவையில்லைதானே)
* உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று செக் செய்யவும் - இதற்கான டீஸர் 'நடுவுல கொஞ்சம் பேர காணோம்'
18 வயதினிலே உங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியும் (இதுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது 36 வயதினிலே பட ஸ்டில் ஸ்டைல்)

கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ் - இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபவம் என திருமண அழைப்பதிழ் போன்று வாக்களிக்க அழைப்பிதழும் இருக்கிறது.

கேஸ், பால்பாக்கெட், சூப்பர் மார்க்கெட் கவர்...

அடேங்கப்பா என வியக்கும் அளவுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை தேர்தல் ஆணையம். ஆவின் பால் பாக்கெட், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர், சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வழங்கப்படும் பைகள் என அனைத்திலும் மே 16-ல் தவறாமல் வாக்களிப்பீர் என்ற பிரச்சாரம் இடம் பெற்றுள்ளது. சில நேரங்களில் ஸ்டிக்கர் நல்லது என்பதற்கு இந்த விளம்பரங்கள் உதாரணம்.

வீடியோ வடிவிலும் அசத்தல்...

வீடியோ வடிவிலும் அவ்வப்போது சுவராசியமான விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகிறது தேர்தல் ஆணையம். நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, சித்தார்த், கிரிக்கெட் வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், அஸ்வின் முதலானவர்களைக் கொண்டு குட்டி வீடியோக்களில் சுவாரசியங்களுடன் விழிப்புணர்வு தகவலை மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகிறது. சாம்பிளுக்கு சில வீடியோக்கள்...


சூர்யா...


சித்தார்த்...


அஸ்வின்...


வித விதமா ட்வீட்டு.. கேட்பதெல்லாம் உங்கள் ஓட்டு!

இப்படி வித விதமா ட்வீட்டு, போஸ்ட், மீம்ஸ், வீடியோஸ் போடுவதெல்லாம் நீங்கள் உங்கள் ஜனநாயக கடமையை நேர்மையாக மனசாட்சியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே. சிந்திப்பீர்.. செயல்படுவீர்!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

நெட்டிசன்களை வசப்படுத்தும் முனைப்பில் தமிழக கட்சிகளும் தலைவர்களும்! 

சமூக ஊடகங்களில் லைவில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் கேரள அரசியல்வாதிகள்! 

இந்திய தேர்தல்களின் நவீனமயமாக்கலும், பிகார் தேர்தல் கற்றுத்தர இருக்கும் பாடமும்!