Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய 20 தொழில் யோசனைகள்!

குறைந்த முதலீட்டில் எத்தனையோ தொழில் தொடங்கலாம் என்றாலும் அதிக லாபம் தரக்கூடிய 20 தொழில் யோசனைகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய 20 தொழில் யோசனைகள்!

Friday April 01, 2022 , 5 min Read

தொழில்முனைவில் ஆர்வம் இருப்பவர்கள் தங்கள் மனதில் தோன்றும் சிறு யோசனையை ஒரு பிரம்மாண்ட தொழிலாக மாற்றிவிடுகின்றனர். இந்த யோசனைதான் ஆரம்பப்புள்ளியே. ஆனால் இது அனைவருக்கும் சரியாக அமைந்துவிடுவதில்லை. பலருக்கு தொழில் தொடங்க ஆர்வம் இருந்தாலும் சரியான யோசனையும் வழிகாட்டலும் இருப்பதில்லை.

சரியான தொழில் யோசனையுடன் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வழிகாட்டலும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம் வசமாகும்.

சிறியளவில் தொழில் தொடங்க விரும்புவோர் குறைந்த முதலீட்டுடன் தொடங்கவே விரும்புவார்கள். மிகக்குறைந்த முதலீடாக 20,000 ரூபாய் முதல் முதலீடு செய்து நீங்கள் தொழில் முயற்சியைத் தொடங்க உதவும் 20 யோசனைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

காட்டன் பட்ஸ்

1

சந்தை தேவை: தனிநபர் வருவாய் அதிகரிப்பு, மக்கள்தொகை அதிகரிப்பு, சுகாதாரத்தில் காட்டப்படும் அக்கறை இப்படி பல காரணங்களால் காட்டன் பட்ஸ் சந்தைத் தேவை அதிகரித்துள்ளது.

மூலப்பொருட்கள்: ஸ்பிண்டில்/ஸ்டிக், உறிஞ்சக்கூடிய பொருள் (காட்டன்), பேக்கிங் பொருட்கள், காட்டன் பட் தயாரிக்கும் இயந்திரம்.

முதலீடு: 20,000-40,000 ரூபாய் முதலீட்டில் காட்டன் பட்ஸ் உற்பத்தியைத் தொடங்கிவிடலாம்.

கைகளால் தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள்

1

சந்தை தேவை: மெழுகுவர்த்திக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். வழிபாட்டிற்கு மட்டுமின்றி அலங்காரத்திற்கும் மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இதற்கான தேவை அதிகமிருக்கும். ரெஸ்டாரண்டுகளில் மக்களைக் கவரும் வகையில் சூழலை ஏற்படுத்த நறுமணத்துடன்கூடிய மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

மூலப்பொருட்கள்: மெழுகு, திரி, அச்சு, நூல், நறுமண எண்ணெய், மெழுகுவர்த்தி தயாரிக்கும் இயந்திரம், மெல்டிங் பாட், தெர்மாமீட்டர்.

முதலீடு: வீட்டிலிருந்தே 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை முதலீடு செய்து மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிலைத் தொடங்கலாம்.

ஊறுகாய்

1

சந்தை தேவை: ஊறுகாய் இல்லாத உணவு உண்டா என்ன? இப்படி கேள்வியெழுப்பும் அளவிற்கு ஊறுகாய் உணவுத் தட்டில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இந்த பாரம்பரிய உணவு வகையின் மவுசு என்றுமே குறையாது.

மூலப்பொருட்கள்: நீங்கள் தேர்வு செய்யும் ஊறுகாய் வகைக்கு ஏற்ப மூலப்பொருட்கள் மாறுபடும்.

முதலீடு: வீட்டிலிருந்தபடியே 20,000-25,000 ரூபாய் முதலீட்டில் ஊறுகாய் தொழில் தொடங்கலாம்.

தேங்காய் எண்ணெய்

1

சந்தை தேவை: மக்கள் இயற்கையான பொருட்களைத் தேடி வாங்கும் காலம் இது. ஆரோக்கியத்திற்கான தேவையாகட்டும் அழகியலுக்கான தேவையாகட்டும் தரமான தேங்காய் எண்ணெய் வாங்க அதிகம் செலவிடவும் மக்கள் தயாராக இருக்கின்றனர்.

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் வாங்கி தயாரித்து விற்பனை செய்யலாம் அல்லது நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கி விற்பனை செய்யலாம்.

முதலீடு: இயந்திரம் வாங்குவதற்கு 1 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யவேண்டும்.

ஊதுபத்தி

1

சந்தை தேவை: இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஊதுபத்திக்கான தேவை அதிகரித்துள்ளது. தியானம் செய்யும்போது ஊதுபத்தி பயன்படுத்தப்படுவதால் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

மூலப்பொருட்கள்: மூங்கில் குச்சிகள், நறுமண எண்ணெய், ஊதுபர்த்தி தயாரிக்கும் இயந்திரம்.

முதலீடு: மொத்தமாக தயாரிப்பதற்காக ஆட்டோமேடிக் அல்லது செமி ஆட்டோமேடிக் இயந்திரம் வாங்க 50,000-க்கு மேல் முதலீடு செய்யவேண்டும்.

பட்டன்

1

சந்தை தேவை: ஜவுளித்துறையில் பயன்படுத்தப்படுவதால் பட்டன்களுக்கான தேவை எப்போதும் இருக்கும். பிளாஸ்டிக், ஸ்டீல் என பல வகைகளில் கிடைக்கின்றன.

முதலீடு: அறையை வாடகைக்கு எடுத்தோ அல்லது வீட்டிலேயோ 30,000 – 40,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கலாம்.

டிசைனர் லேஸ்

1

சந்தை தேவை: ஆடைகளிலும் கைவினை வேலைப்பாடுகளிலும் டிசைனர் லேஸ் பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய ஃபேஷன் உலகில் வெவ்வேறு வகையான டிசைனர் லேஸ்களின் தேவை அதிகரித்துள்ளது. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

பாபி மிஷன்கள் மூலம் கைகளால் வடிவமைக்கலாம். அல்லது முழுமையாக கணிணிமயமாக்கப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தலாம்.

முதலீடு: 25,000 – 50,000 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழில் தொடங்கலாம்.

ஷூ லேஸ்

1

சந்தை தேவை: காலணி தயாரிப்பில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. ஸ்போர்ட்ஸ், கேஷுவல், ஃபார்மல் என பல வகையான ஷூக்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஷூ லேஸ் தயாரிப்புகளுக்கு தேவை அதிகமுள்ளது. இது லாபகரமான தொழில் முயற்சியாகக் கருதப்படுகிறது.

மூலப்பொருட்கள்: லேஸ், Aglet (லேஸின் நுனிப்பகுதி), லேஸ் பின்னும் இயந்திரம்.

முதலீடு: நீங்கள் வாங்கும் இயந்திரத்தின் வகையைப் பொறுத்து 25,000 ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கலாம்.

ஐஸ்கிரீம் கோன்

1

சந்தை தேவை: ஐஸ்கிரீம் எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு வகை. குறிப்பாக கோன் ஐஸ்கிரீம் அதிகம் விற்பனையாகிறது. இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முதலீடு: சிறியளவில் ஐஸ்கிரீன் கோன் தயாரிப்பிற்கு சுமார் 1 – 1.5 லட்ச ரூபாய் முதலீடு செய்யவேண்டும்.

சாக்லேட் தயாரிப்பு

1

சந்தை தேவை: சாக்லேட் சாப்பிடுவோர் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. சாக்லேட் நம் மனதை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை போக்குகிறது. இதனால் பலர் சாக்லேட்டுகளை விரும்பி சுவைக்கின்றனர்.

முதலீடு: மூலப்பொருட்கள், பேக்கேஜிங் என 40,000-50,000 ரூபாய் வரை முதலீடு செய்யவேண்டியிருக்கும். அதேசமயம் பெரியளவில் தொழில் செய்ய விரும்பினால் அதற்கேற்ப 2-3 லட்சம் வரை முதலீடு தேவைப்படலாம்.

பப்படம்

1

சந்தை தேவை: மொறுமொறுவென்று இருக்கும் மெல்லிய பப்படம் இந்தியர்களின் உணவு தட்டில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். விழாக்கள், கொண்டாட்டங்கள், பார்ட்டி போன்ற இடங்களில் தவறாமல் பயன்படுத்தப்படுவதால் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும்.

மூலப்பொருட்கள்: கோதுமை மாவு, மசாலாக்கள், எண்ணெய்.

முதலீடு: சிறியளவில் தொடங்க 30,000-40,000 ரூபாய் முதலீடு செய்யலாம்.

நூடுல்ஸ்

1

சந்தை தேவை: நூடுல்ஸ், குறிப்பாக இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதைத் தயாரிப்பது மிகவும் எளிது.

மூலப்பொருட்கள்: மாவு, ஸ்டார்ச், சோடியம் பைகார்போனேட், நூடுல்ஸ் தயாரிக்கும் இயந்திரம்.

முதலீடு: குறைந்த திறன் கொண்ட நூடுல்ஸ் தயாரிக்கும் இயந்திரம் 40,000 ரூபாய் முதலீட்டில் வாங்கலாம். 1.5 லட்ச ரூபாய் வரை இயந்திரங்கள் கிடைக்கின்றன.

டிஸ்போசபிள் தட்டுகள், கப்கள்

1

சந்தை தேவை: நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் போன்ற இடங்களில் மட்டுமல்லாது சுற்றுலா செல்லும்போதும் பயன்பாட்டிற்குப் பிறகு அப்புறப்படுத்தக்கூடிய ஃபுட் கிரேட் தட்டுகள் மற்றும் கப்கள் அதிகம் உபயோகிக்கப்படுகின்றன. எனவே இதற்கான சந்தை தேவையும் அதிகம்.

மூலப்பொருட்கள்: பேப்பர், பேப்பர் தட்டுகள், கப்கள் தயாரிக்கும் இயந்திரம்.

முதலீடு: உற்பத்தித் திறனைப் பொறுத்து இயந்திரங்களை 50,000 ரூபாய் முதல் முதலீடு செய்து வாங்கலாம்.

சணல் பைகள்

1

சந்தை தேவை: பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதில் அரசாங்கம் தீவிர முனைப்புடன் செயல்படும் சூழலில் சணல் பைகள் இதற்கு சிறந்த மாற்றாகும். எளிய முறையில் வெவ்வேறு வகையான பைகளைத் தயாரிக்கலாம்.

முதலீடு: 50,000 – 1,00,000 ரூபாய் முதலீட்டுடன் இந்த தொழிலைத் தொடங்கலாம்.

ஸ்டேப்பிள் பின்

1

சந்தை தேவை: பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் ஸ்டேப்பிளர் பின் அதிக பயன்பாட்டில் இருக்கின்றன. வொயிட் கேல்வனைஸ்ட் இரும்பு வயரில் ஸ்டேப்பிளர் பின் தயாரிக்கப்படுகின்றன.

முதலீடு: 3.5 லட்ச ரூபாய் முதலீட்டில் நிமிடத்திற்கு 350 பின் தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கலாம்.

பேப்பர் தயாரிப்பு

1

சந்தை தேவை: உலகமே டிஜிட்டலுக்கு மாறிக்கொண்டிருந்தாலும்கூட பள்ளி, கல்லூரிகள் முதல் கார்ப்பரேட் அலுவலகங்கள் வரை பேப்பர் பயன்பாடு தவிர்க்கமுடியாததாக உள்ளது. போக்குவரத்து செலவைக் குறைக்கும் வகையில் சரியான இடத்தைத் தேர்வு செய்தால் சிறப்பாக லாபம் ஈட்டலாம்.

முதலீடு: கிட்டத்தட்ட 2-2.5 லட்ச ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலில் ஈடுபடலாம்.

ஆர்கானிக் சோப்பு

1

சந்தை தேவை: அனைவருக்கும் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் பொருட்களில் ஒன்று சோப்பு. இன்று ஆர்கானிக் சோப்பு வகைகளை பலர் விரும்பி வாங்குகின்றனர். சோப்பு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கத்தின் தரப்பில் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

மூலப்பொருட்கள்: கிளிசரின், மூலிகைகள், நறுமண எண்ணெய், அச்சு, மைக்ரோவேவ்.

முதலீடு: 1.5 – 2 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யவேண்டியிருக்கும்.

ஸ்மார்ட்போன் டெம்பர் கிளாஸ்

1

சந்தை தேவை: இந்தியாவில் ஸ்மார்ட்போன் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. ஸ்மார்ட்போன் ஆக்சசரிகளில் ஒன்றான டெம்பர் கிளாஸ் தேவையும் அதிகரித்துள்ளது.

முதலீடு: 75,000-1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்து டெம்பர் கிளாஸ் தயாரிக்கும் இயந்திரம் வாங்கவேண்டும்.

என்வலப் மற்றும் ஃபைல்

1

சந்தை தேவை: இன்றைய டிஜிட்டல் உலகிலும் பேப்பர் போன்றே என்வலப், ஃபைல்கள் போன்றவற்றிற்கான தேவை அதிகமுள்ளது. டிபார்ட்மெண்டல் ஸ்டோர், சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்கமுடியும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் தேவை அதிகமுள்ளது.

முதலீடு: என்வலப் தயாரிக்கும் இயந்திரம் 1.5 லட்ச ரூபாய் முதல் 11 லட்ச ரூபாய் வரை கிடைக்கின்றன

பேப்பர் பேக்

1

சந்தை தேவை: மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு இன்று பலரைச் சென்றடைந்துள்ளது. பிளாஸ்டிக் பைகளை மக்கள் புறக்கணித்து வரும் நிலையில் அதற்கு சிறந்த மாற்றாக இருப்பது பேப்பர் பேக்.

மூலப்பொருட்கள்: பேப்பர் ஷீட், இங்க், பிரிண்டிங் கெமிக்கல், டேக்.

முதலீடு: ஆட்டோமெடிக் பேப்பர் பேக் தயாரிக்கும் இயந்திரத்தின் ஆரம்ப விலை 1.5 லட்ச ரூபாய்.

ஆங்கில கட்டுரையாளர்கள்: பலக் அகர்வால் & ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா