50 ஆயிரம் முதலீட்டில் நீங்கள் துவங்கக் கூடிய தேக்க நிலை இல்லாத 6 வர்த்தகங்கள்!
கடினமான பொருளாதார சூழலிலும், ஒரு சில வர்த்தகங்கள் அத்தியாவசியமானதாகவும், தேக்க நிலைக்கு உள்ளாகாதவையாகவும் கருதப்படுகின்றன. ஐம்பதாயிரம் குறைந்த முதலீட்டில் துவங்கக் கூடிய 6 தொழில்களை இதோ!
கடந்த இரண்டு ஆண்டுகள் உலகப் பொருளாதாரத்திற்கு கடினமாகதாக அமைந்துள்ளன. பொருளாதார மற்றும் நிதி நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியில், பொருளாதார சரிவுக்கு மத்தியிலும் பாதுகாப்பாக இருக்கும் வர்த்தகத்தை அமைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாதார சரிவுக்கு மத்தியிலும் பாதிக்கப்படாமல், செழிக்கும் வர்த்தகங்கள் இருக்கின்றன. இத்தகைய ஆறு தொழில்களை நங்கள் பட்டியலிட்டுள்ளோம்.
இந்த தொழில்களை 50 ஆயிரம் ரூபாய்க்குள் துவக்கலாம். இந்தத் தொழில்களுக்கு பெரிய உற்பத்தி வசதியோ அல்லது பெரிய மூலதனமோ தேவையில்லை. ஆன்லைன் அல்லது சிறிய அளவில் துவக்கலாம்.
உணவுத் தொழில்
உணவு; வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. அண்மையில் கோவிட் பொது முடக்கத்தின் போது கூட, ஓரளவு கட்டுப்பாடுகளுடன் அரசு உணவுத் தொழில் இயங்க அனுமதித்தது. ஆன்லைன் டெலிவரிக்காக முதலில் பச்சைக்கொடி காட்டப்பட்டதும் உணவுத் தொழிலுக்கு தான்.
ஐஎம்.ஏ.ஆர்.சி அறிக்கை படி, அதிகரிக்கும் உழைக்கும் மக்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய்க்கு ஏற்ப இந்த சந்தை வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போதுள்ள நிறுவனங்கள் பெரும்பாலும் நாட்டின் நகர்புறங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பல நிறுவங்கள் வளர்ச்சி வாய்ப்புள்ள சிறிய நகரங்களிலும் கவனம் செலுத்துகின்றன.
ஆக, உணவுத்தொழிலை எங்கே துவக்கினாலும் நல்ல வளர்ச்சி காணலாம். உணவுத்தொழிலை சிறிய அளவில் துவக்க்கலாம். உங்கள் பகுதியிலேயே வீட்டு சமயலறை வசதியை அமைக்கலாம். அல்லது ஆன்லைன் டெலிவரிக்கு கிளவுட் கிச்சன் அமைக்கலாம். ஐம்பதாயிரம் அல்லது அதற்குக் குறைவான தொகையில் துவக்கலாம்.
ஆடைகள்
ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனையில் ஆடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆடைகள் தொடர்பான போக்கு மாறிக்கொண்டிருந்தாலும், பொதுவாக எப்போதுமே தேவை இருக்கும்.
இந்தியாவில் ஜவுளி மற்றும் ஆடைகள் துறை, உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்களிப்பு செலுத்துகின்றன.
இந்த பிசினஸ்கள், தொழில் உற்பத்தியில் 7 சதவீதமாகவும், ஜிடிபியில் 2 சதவீதமாகவும், மொத்த ஏற்றுமதி வருவாயில் 15 சதவீதமாகவும் இருக்கின்றன. எனவே, ஆடைகள் தொழில் எப்போதும் வருவாய் தரக்கூடியது.
நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப ஆடைகள் தொழிலை ஐம்பதாயிரம் அல்லது மேற்பட்ட தொகையில் துவக்கலாம். முதலில் குறைந்த கையிருப்பில் துவங்கி பின்னர், அந்த தொகையை கொண்டு வர்த்தகத்தை விரிவாக்கலாம்.
குழந்தைகள் பொருட்கள்
பல்வேறு தரவுகள் அறிக்கைபடி, இந்தியாவில் தினமும் 67,000 குழந்தைகள் பிறக்கின்றன. இந்த தரவுகளே இந்தியாவில், குழந்தைகள் துணிகள், உணவுகள், பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களுக்கான தேவை இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை பெற்று வீட்டில் இருந்தே கூட குழந்தைகள் பொருட்களை விற்கத்துவங்கலாம். சிறு தொழில் துவங்க நீங்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம்.
சுகாதாரப் பொருட்கள்
கோவிட் பெருந்தொற்று நமக்கு சுகாதாரம் பற்றி நிறைய கற்றுத்தந்துள்ளது. முகக் கவசம் அணிவது முதல் சானிடைசர் பயன்படுத்துவது வரை, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதார பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. டிஷ்யூ காகிதம், கையுறைகள் போன்றவற்றின் தேவை அதிகரித்துள்ளது.
2020 உலக சுகாதார சந்தை 55.7 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது. 2021 -26 காலத்தில் இந்து ஆண்டு அடிப்படையில் 5.80 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரப் பொருட்கள் வர்த்தகத்தை துவக்குவது எளிதானது. சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கான தயாரிப்புகளை பெறலாம்.
வாசனைப் பொருட்கள்
இந்தியா பல வகை வாசனைப் பொருட்களுக்கான இருப்பிடமாக திகழ்கிறது. வாசனைப் பொருட்களின் மருத்துவ அல்லது சுகாதார பலன்கள் நன்கறியப்பட்டிருப்பதால், மேற்கத்திய நாடுகள், இந்தியாவின் மஞ்சள், கேசர், சின்னமன் போன்றவற்றை பயன்படுத்தத் துவங்கியுள்ளன.
இந்தியா உலக அளவில் அதிக வாசனை பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள 109 வகை வாசனைப் பொருட்களில் 75 பொருட்களை இந்தியா உற்பத்தி செய்கிறது. உலக வாசனைப் பொருட்கள் வர்த்தகத்தில் பாதியை கொண்டுள்ளது.
எனவே, குறைந்த முதலீட்டில் வர்த்தகம் செய்ய விரும்பினால் வாசனை பொருட்கள் விற்பனையை பரிசீலிக்கலாம்.
சானிட்டரி நாப்கின்கள்
குறைந்த முதலீட்டில் துவங்கக் கூடிய மற்றொரு ஐடியாவாக சானிட்டரி நாப்கின்கள் அமைகின்றன. பெண்கள் சுகாதாரம் தொடர்பன அக்கரை அதிகரித்து, அரசும் இது தொடர்பாக விழிப்புணர்வை உண்டாக்கி வருகிறது.
இ.எம்.ஆர் தகவல்படி, மாதவிடாய் விழிப்புணர்வு அதிகரித்திருப்பது காரணமாக, சானிட்டரி நாப்கின்கள் தேவை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில், அதிக தரம் வாய்ந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவது மேலும் சந்தையை விரிவாக்கியுள்ளது.
சானிட்டரி நாப்கின்கள் வர்த்தகத்தை ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் துவக்கி பின்னர் விரிவாக்கிக் கொள்ளலாம்.
இந்த வர்த்தகங்களுக்காக அரசு, முத்ரா யோஜானா, அன்னப்பூரான போன்ற திட்டங்கள் மூலம் ஆதரவு அளிக்கிறது. எனவே உங்கள் தொழில்முனைவு ஆர்வத்தை தளரவிடாமல் சிறிய அளவில் தொழில் துவங்கவும்.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்