Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இந்தியா முழுவதும் 200 மையங்கள்; ஓலா நிறுவனம் அறிவிப்பு!

ஓலா எலக்ட்ரிக் ஏற்கனவே 20 மையங்களை இயக்கி வரும் நிலையில், மார்ச் 2023 இறுதிக்குள் மேலும் 200 அனுபவ மையங்களைத் திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா முழுவதும் 200 மையங்கள்; ஓலா நிறுவனம் அறிவிப்பு!

Monday September 19, 2022 , 2 min Read

ஓலா எலக்ட்ரிக் ஏற்கனவே 20 மையங்களை இயக்கி வரும் நிலையில், மார்ச் 2023 இறுதிக்குள் மேலும் 200 அனுபவ மையங்களைத் திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மக்களது கவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது திரும்பியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

Ola store

ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலமாக வாடிக்கையாளர்களிடம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“அனுபவ மையங்கள் மூலமாக ஓலா எலெக்ட்ரிக் தயாரிப்புகளை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும். ஓலா எலக்ட்ரிக் ஏற்கனவே 20 மையங்களை இயக்கி வரும் நிலையில், மார்ச் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இது போன்ற மேலும் 200 இடங்களை திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” எனக்குறிப்பிட்டுள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மையான ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த சம்பவமும், சஸ்பென்ஷன் கோளாறுகள் தொடர்பான புகார்களும் விற்பனையை வெகுவாக சரிந்துள்ளன. சமீபத்திய கணக்கெடுப்பின் படி, ஆறுமாதத்திற்கு ஒருவர் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புவது தெரியவந்துள்ளது.

தற்போதைக்கு, நிறுவனம் அதன் இரண்டு முதன்மையான இ-ஸ்கூட்டர் மாடல்களான S1 மற்றும் S1 Pro தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. எஸ்1 விலை ரூ.99,999 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ரூ.1,39,000. இந்த ஸ்கூட்டர்களை ஓலா ஆப் மற்றும் ஓலா எலக்ட்ரிக் இணையதளத்தில் வாங்கலாம்.

Ola S1 ஆனது 3 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ARAI- சான்றளிக்கப்பட்ட முழு சார்ஜில் 141 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. இது ஸ்போர்ட்ஸ், எக்கோ, நார்மல் என மூன்று ரைடிங் மோடுகளுடன் வருகிறது.

ஆகஸ்ட் 2022ல், நிறுவனம் தனது முதல் முழு-எலக்ட்ரிக் காரை 2024ல் அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரானது நான்கு வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் (வெறும் 62 மைல் வேகம்) வரை செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட உள்ளது.

தமிழில்: கனிமொழி