Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ஒரே நாளில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புக்கிங்: அசத்தும் OLA S1

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புக்கிங்: அசத்தும் OLA S1

Friday September 02, 2022 , 2 min Read

Ola S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே நாளில் 10 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான பயன்பாடும், தேவையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடை காலத்தில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அரங்கேறின. இதனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அடுத்தடுத்து அதிகரித்து வருகிறது.

OLA

தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ் 1 மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே நாளில் 10 ஆயிரம் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த ஆர்டர்களுக்கான பான் இந்தியா டெலிவரிகள் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓலா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று மேம்படுத்தப்பட்ட ஓலா எஸ் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. 3 KWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்ட ஓலா எஸ் 1 ஆனது நார்மலாக 101 கிலோ மீட்டர் வேகத்திலும், ஈக்கோ மோடில் 128 கிலோ மீட்டர் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடியில் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் செயல்படக்கூடியது.

இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ.99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் விலை 1,39,999 ரூபாய் ஆகும்.

இதில் ஆரம்ப கட்ட மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 128 கிலோமீட்டர் வரை பயணிக்கூடிய ஓலா எஸ் 1 ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிலோ மீட்டர் ஆகும். "ஹைப்பர் மோட்" பொருத்தப்பட்டுள்ள ஃபிளாக்ஷிப் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 170 கிலோமீட்டர் தூரமும், அதிகபட்சமாக மணிக்கு மணிக்கு 116 கிலோ மீட்ட வேகமும் கொண்டது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக ஓலா எஸ் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஓலா எஸ் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா ஆப் மற்றும் ஓலா எலக்ட்ரிக் இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

ஆங்கிலத்தில் - தருதர் மல்ஹோத்ரா | தமிழில் - கனிமொழி