Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'ஃபிலிம்பேர் ஓடிடி விருதுகள்' : 2019-20ன் சிறந்த வெப் சீரிஸ், நடிகர், நடிகை யார் யாருக்கு?

2020 ஃபிலிம்பேர் ஓடிடி விருதுகள்... யார் யாருக்கு?!

'ஃபிலிம்பேர் ஓடிடி விருதுகள்' : 2019-20ன் சிறந்த வெப் சீரிஸ், நடிகர், நடிகை யார் யாருக்கு?

Monday December 21, 2020 , 2 min Read

முதன்முறையாக ஓடிடி தளத்துக்கான ஃபிலிம்பேர் விருதுகள் 2020ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று மும்மையில் நடந்த இந்த விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கபட்டுள்ளன.


2019 ஆகஸ்ட் முதல் 2020 ஜூலை 31ம் தேதி வரையிலான வெப்சீரிஸ்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இதில் நவாசுதீன் சித்திகி, மனோஜ் பாஜ்பாய், மவுனி ராய், ஜெய்தீப் அஹ்லாவத், ஜெனிபர் விங்கேட், ராஜ்கும்மர் ராவ், திரிப்தி டிம்ரி, டிஸ்கா சோப்ரா, அம்ருதா கான்வில்கர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


2020ம் ஆண்டு பிலிம்பேர் ஓடிடி விருதுகள் பட்டியல்:


சிறந்த வெப்சீரிஸ் - பாதால் லோக் (Paatal Lok)


சிறந்த இயக்குநர் (வெப் சீரிஸ்) - அவினாஷ் அருண் மற்றும் புரோசித் ராய் (Paatal Lok)


சிறந்த வெப்சீரிஸ் (விமர்சன ரீதியாக ) – தி பேமிலி மேன் (The Family Man)

ஓடிடி விருதுகள்

சிறந்த இயக்குநர் (விமர்சன ரீதியாக): கிருஷ்ணா டி.கே மற்றும் ராஜ் நிடிமோரு (The Family Man)


சிறந்த நடிகர் (ஆண்): ஜெய்தீப் அஹ்லவத் (பாதால் லோக்)


சிறந்த நடிகர் (பெண்): சுஷ்மிதா சென் (ஆர்யா)


சிறந்த நடிகர் (விமர்சகர்கள்): மனோஜ் பாஜ்பாய் (The Family Man)


சிறந்த நடிகை (விமர்சகர்கள்): பிரியாமணி (The Family Man)


நகைச்சுவைத் தொடரில் சிறந்த ஆண் நடிகர்: ஜிதேந்திர குமார் (Panchayat)


நகைச்சுவைத் தொடரில் சிறந்த பெண் நடிகர்: மிதிலா பால்கர் ((Little Things Season 3)


நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகர் (விமர்சகர்கள்): துருவ் சேகல் ((Little Things Season 3)


நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகை (விமர்சகர்கள்): சுமுகி சுரேஷ் (Pushpavali Season 2))


வெப்சீரிஸின் சிறந்த துணை நடிகர் (ஆண்) : அமித் சாத் (Breathe: Into The Shadows)


வெப்சீரிஸின் சிறந்த துணை நடிகர் (பெண்): திவ்யா தத்தா (Special OPS)

ஓடிடி விருதுகள்

நகைச்சுவைத் தொடரில் சிறந்த துண நடிகர் ஆண் : ரகுபீர் யாதவ் (Panchayat)


நகைச்சுவைத் தொடரில் சிறந்த துண நடிகர் பெண் : நீனா குப்தா (Panchayat)


சிறந்த புனைகதை அல்லாத தொடர்: டைம்ஸ் ஆஃப் மியூசிக் Times of Music


சிறந்த நகைச்சுவை தொடர் – பஞ்சாயத் (Panchayat)


சிறந்த ஓடிடி திரைப்படம் – ராத் அகேலி ஹை (Raat Akeli Hai)


சிறந்த பின்னணி இசை - அலோகானந்த தாஸ்குப்தா, (Sacred Games Season 2)


தகவல் உதவி: பிலிம்பேர் | தொகுப்பு: மலையரசு