கடுகு தோட்டத்தில் பயிற்சி செய்து சர்வதேச மைதான கோல்ஃப் வீரர் ஆன ஷுபம் ஜக்லனின் பிரமிப்பூட்டும் பயணம்!
கடுகுத் தோட்டங்களில் இருந்து சர்வதேச மைதானங்களுக்கு – ஷுபம் ஜக்லனின் பிரமிப்பூட்டும் பயணம்!
இரண்டு வாரத்தில் இரண்டு கோல்ஃப் போட்டிகளில் வென்றிருக்கிறார். ஒன்று ஜூலை 17, 2015 அன்று நடந்த IMG அகாடமி கலிஃபோர்னியா வெல்க் ரிஸார்ட் மைதானத்தில் நடந்த போட்டி. இதே போட்டியில் போன வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார். அந்த வெற்றிக்கு அணி சேர்க்கும் விதமாக ஜூலை 23, 2015 ல் நடந்த IJGA(சர்வதேச இளையர் கோல்ஃப் அகாடமி) லாஸ் வேகாஸில் நடத்திய வேர்ல்ட் ஸ்டார் ஆஃப் ஜீனியர் கோல்ஃப் போட்டியிலும் வென்றார்.
ஹரியானாவின் விவசாய நிலங்களில் இருந்து உலகளாவிய கோல்ஃப் மைதானங்களுக்கு பயணித்த இந்திய இளைஞர் கோல்ஃப் நட்சத்திரமான ஷுபம் ஜக்லனின் கதை இது.
ஜூலை 1 2005 அன்று ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தின் இஸ்ரானா கிராமத்தில் பிறந்தார் ஷுபம். தந்தை பால்காரராக இருந்தாலும் ஷூபம் மல்யுத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கோல்ஃபுடன் ஷுபமுக்கான பழக்கம் முழுக்க முழுக்க யதேச்சையானது. வெளிநாடுவாழ் இந்தியரும், தீவிர கோல்ஃபருமான கபூர் சிங் அவரது பூர்வீக கிராமமான இஸ்ரானாவில் ஒரு கோல்ஃப் மைதானம் தொடங்க நினைத்து, அந்த முயற்சி சரிப்படாததால் விட்டு விட்டார். போகும் முன் தன் கோல்ஃப் மட்டைகளை ஷுபமின் தந்தையிடம் விட்டுச் சென்றார்.
ஐந்து வயதான ஷூபம் தானாக அந்த கோல்ஃப் மட்டைகளை எடுத்து தன் தாத்தாவின் ஊக்குவிப்பினால் கோல்ஃப் பந்துகளை கடுகு வயலுக்குள் அடித்து அடித்துப் பழகினார். யூட்யூபில் கோல்ஃப் விளையாட்டு சம்பந்தமான காணொளிகளைப் பார்த்து விளையாட்டின் நெளிவு சுழிவுகளை கற்றுக்கொண்டார். கர்னலில் இருக்கும் மதுபன் கோல்ஃப் மைதானம் இவரது திறமையை பார்த்து தங்கள் மைதானத்தில் விளையாட சிறப்பு அனுமதி அளிக்த்தது. கோல்ஃப் ஃபவுண்டேஷனின் திறன் தேடு நிபுணரும், முன்னாள் இந்திய கோல்ஃபருமான நோனிட்டா லால் க்வர்ஷிதான், ஷூபத்தின் திறமையை கண்டுகொண்டிருக்கிறார். தற்போது இந்திய கோல்ஃப் கழகத்தின் தலைவரும், முன்னாள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவரும், அர்ஜுனா விருது பெற்றவருமான அமித் லுத்ராவிடம் டெல்லியில் வசித்து வரும் ஷூபம் பயிற்சி பெறுகிறார். இங்கு தான், பிறப்பிலேயே அதீத திறன்பெற்ற, அனேகத் திறமை கொண்ட சிறுவன் ஷுபம், இன்று உலகத்தரம் வாய்ந்த இளைய கோல்ஃப் நட்சத்திரமாக மாறினார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இப்போது வரை சுமார் 100 பந்தயங்களில் வென்றிருப்பார். அவற்றில் 2012 ல் வென்ற நியூயார்க் US கிட்ஸ் சேம்பியன்ஷிப்பும், நியூஜெர்ஸியின் US கிட்ஸ் சேம்பியன்ஷிப்பும் முக்கியமானவை. ஆனால் இரண்டு முறை இரண்டாம் பரிசு பெற்று 2013ல் எட்டு வயதில் அவர் வென்ற பெருமைமிக்க டெய்லர்மேட்-அடிடாஸ், உலக இளையர் கோல்ஃப் பந்தயம்தான் இவற்றிற்கெல்லாம் திருப்புமுனை.
2013ல் NDTV யின் "வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்" விருதையும், "மார்கதர்ஷன்" விருதையும் ஷுபம் பெற்றார்.
அவருடைய ஆதார்ஷ வீரர்களாக, சீவ் பல்லெஸ்டிரோஸையும், தான் சந்தித்த கேரி பிளேயரையும் சொல்கிறார். டைகர் வுட்ஸிற்கும் இந்திய வீரரான ஷிவ் கபூருக்கும் ரசிகன் எனச் சொல்கிறார்.
யாருமே அறியாத ஹரியானவின் கிராமத்து கடுகு வயல்களில் இருந்து உலகின் சிறந்த கோல்ஃப் மைதானங்களுக்கு நொனிட்டாலால்க்வர்ஷியால் ஒரு அமைதியான சிறுவனாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஷுபம் திறன்வளர்த்துக் கொண்டே பயணப்பட்டிருக்கிறான். அவருடனேயே போட்டிகளுக்குப் பயணிக்கும் ஜக்பால் ஜக்லனை அப்பாவாக பெற்றது அவருடைய அதிர்ஷ்டம்.
கோல்ஃபிங் இந்தியன் பத்திரிகைக்கு பேட்டியளிக்கையில் “தொழில்முறை கோல்ஃபராக, 18 கோல்ஃப் பரிசுகளையும் வென்ற அமெரிக்க கோல்ஃபர் ஜாக்நிக்லாஸைப் போல் ஆகவிரும்புகிறேன்” எனக்கூறினார்.
ஷுபம் தற்போது டில்லியில் லக்ஷ்மண் பப்ளிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறார்.