ஆன்லைனில் உங்கள் தகவல்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

ஃபேஸ்புக் டேட்டா லீக்!

ஆன்லைனில் உங்கள் தகவல்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

Friday March 23, 2018,

2 min Read

கடந்த சில நாட்களாக விவாதிக்கப்படும் முக்கியமான செய்தி, முகநூல் நிறுவனத்தில் இருந்து அதன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை கேம்பேரிஜ் அனலிட்டிக்கா என்ற நிறுவனம் தவறாக பயன்படுத்தியது தான். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் முற்றிலுமாக தகவல் திருட்டை தவிர்க்க முடியாது. ஆனாலும் ஒரு சில முறைகள் மூலம், ஒரு அளவிற்கு தகவல் திருட்டை தடுக்க முடியும்.

image


மற்ற இணையதளம்

ஒரு இணையதளத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் அல்லது ஒரு மொபைல் அப்ளிகேஷனில் இணைய வேண்டும் என்றால் பலரும், தங்கள் முகநூல் கணக்கு வழியாக இணைத்துக் கொள்கின்றனர். இதன் மூலமாக அந்த இணையதளம், நம்முடைய ஃபேஸ்புக் தகவல்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியும். எனவே இதை தவிர்ப்பது நல்லது. இதுவரைக்கும் எந்த எந்த இணையதளத்திற்கு முகநூல் கணக்கை பயன்படுத்துகின்றோம் என்பதை Settings இல் காணலாம்.

image


வினோத அப்ளிகேஷன்கள்

சமீபகாலமாக பலரும் தங்களை பற்றி சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள, முக நூலில் வலம் வரும் ஆப்-பை பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு, முன் ஜென்மத்தில் நீங்க என்னவாக இருந்தீர்கள்? நீங்கள் எந்த நடிகரை போல் உள்ளீர்கள்? போன்ற வினோதமான கேள்விகளுக்கு அந்த அப்ளிகேஷன் பதில் கூறும். அதை பலரும் தங்கள் ஃபேஸ்புக்-ல் பகிர்ந்து கொள்ளவார்கள். பொதுவாக அந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்த நாம் நம் முகநூல் கணக்கை பயன்படுத்த வேண்டும். இந்த இணைப்பு மூலமாக அந்த ஆப், நம் தகவல்களை எடுத்துக்கொள்ள முடியும். எனவே அது போன்று ஆப்-களை தவிர்ப்பது நல்லது.

அனுமதி இலவசம் ஆனால் ஆபத்து

முகநூல் மட்டும் இல்லமால், வாட்ஸ்-அப் மூலமாக வரும் தெரியாத இணையதள முகவரிகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலும், ஒரு அப்ளிகேஷனை மொபைலில் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்யும் போது எந்த எந்த தகவல்களை நாம் அனுமதிக்க வேண்டும் என்று யோசித்து ஓகே சொல்ல வேண்டும். சரி என்று கொடுத்துவிட்டு, பின்னர் வருத்தப்படுவதில் எந்த ஒரு பலனும் இல்லை.

image


மேலே சொல்லி இருக்கும் தகவல்கள் மூலம் ஒரு அளவிற்கு தான் தகவல் திருட்டை தடுக்கலாம். முழுமையாக தடுக்க முடியாது. முகநூலில் மட்டும் தான் தகவல் திருட்டு இருக்கின்றது என்று கூறுவதை ஏற்க முடியாது. பல நிறுவனங்கள் இதை நமக்கு தெரியாமலே பல விதங்களில் செய்கின்றனர். எனவே தகவல் திருட்டை ஒரு போதும் தடுக்க முடியாது. 

நம் தகவல் திருடப்படாமல் இருக்க வேண்டும் என்றால், அந்த தகவலை டிஜிட்டல் உலகத்தில் இணைக்காமல் இருப்பது தான் நல்லது. ஆனால் இன்றைய நிலையில் அது முடியாத ஒன்றாகும். பெரும்பாலும் பிரைவேட் ஸ்பேசில் இருக்க வேண்டியதை, பொது வெளியில் பதிவு செய்யாமல் இருந்தால் இது போன்ற தகவல் திருட்டை பற்றி கவலை படவே வேண்டாம்.  

கட்டுரையாளர்: பிரவீன் குமார், ஒரு மென்பொறியாளர் மற்றும் பேச்சாளர். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். யுவர்ஸ்டோரி அதற்கு பொறுப்பேற்காது.