Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

தினம் 1,20,000 மீட்டர், 1500 கோடி டர்ன்ஓவர்; திரைச்சீலையில் வெற்றியை செதுக்கிய சகோதரர்கள்!

தாராபூரில் 5 தொழிற்சாலைகளுடன் அபார வளர்ச்சி அடைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய திரைச்சீலை நிறுவனத்தின் கதை!

தினம் 1,20,000 மீட்டர், 1500 கோடி டர்ன்ஓவர்; திரைச்சீலையில் வெற்றியை செதுக்கிய சகோதரர்கள்!

Monday August 03, 2020 , 5 min Read

அஜய் அரோரா, சஞ்சய் இருவரும் சகோதரர்கள். இவர்கள் தங்களது குடும்ப வணிகமான ஜவுளி வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆனால் அந்த சமயத்தில் கோடிக்கணக்கில் மதிப்புடைய சந்தை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


90-களில் மும்பையைச் சேர்ந்த இந்த சகோதரர்கள் பெண்கள் ஆடைகளுக்கான துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் குறைந்த விலையில் பாலிஸ்டரில் இமிடேஷன் சில்க் விற்பனை செய்து வந்தனர்.


புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து வந்த அஜய், சிறப்பாக விற்பனை செய்யப்படும் துணிகள் மற்றும் டிசைன்களை ஆராய்ந்து வந்தார். வீட்டு அலங்காரப் பொருட்கள் பிரிவில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர்ந்தார். வீட்டு அலங்காரப் பொருட்கள் துறையில் துணிகளுக்கான தேவை அதிகம் இருந்தது. குறிப்பாக சர்வதேச சந்தைகளில் அதிகளவில் தேவை காணப்பட்டது. இந்தத் தேவைகளை பூர்த்திசெய்யும் அளவிற்கு போதிய நிறுவனங்களும் இந்தப் பிரிவில் செயல்படவில்லை.

“1997-ம் ஆண்டு ஃப்ராங்ஃபர்ட் பகுதிக்கு பயணித்து ஐரோப்பாவின் மிகப்பெரிய Heimtextil ஜவுளி கண்காட்சிக்கு சென்றேன். அங்கிருந்து டிசைன் நிறுவனங்களைப் பார்வையிட கோமோ, இத்தாலி ஆகிய இடங்களுக்குச் சென்றேன். இவ்வாறு பல மாதங்கள் செலவிட்டு வீட்டு அலங்காரப் பொருட்கள் துறையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தேன். பின்னர் நானும் என் சகோதரர் சஞ்சயும் குடும்ப வணிகத்தை விட்டுவிட்டு வீட்டு அலங்காரப் பொருட்களுக்குத் தேவையான துணிகளை சொந்தமான உற்பத்தி செய்யத் தொடங்கினோம்,” என்று எஸ்எம்பிஸ்டோரி-இடம் தெரிவித்தார்.
1

1999-ம் ஆண்டு மும்பையில் இவர்கள் தொடங்கிய வணிகத்திற்கு D'Décor என பெயரிட்டனர். ஐரோப்பிய தரத்துடன்கூடிய தயாரிப்புகளை இந்திய விலையில் விற்பனை செய்வதில் இந்த சகோதரர்கள் கவனம் செலுத்தினர். இந்த முயற்சி சிறப்பாக பலனளித்து உச்சத்தை எட்ட வைத்தது.


இன்று D’Décor திரைச்சீலைகள், விரிப்புகள் போன்றவற்றை நெய்யக்கூடிய உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ளது.

1,500 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டுள்ள இந்நிறுவத்தின் ஐந்து தொழிற்சாலைகள் இந்தியாவில் தாராபூரில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 1,20,000 சதுர மீட்டர் வரை உயர்தர துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

D’Décor தயாரிப்புகள் 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, யூகே, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவை இதன் மிகப்பெரிய சந்தைகளாகும். ஷாருக்கான், கௌரி கான் ஆகியோர் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆதரித்துள்ளனர். இந்நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

வணிக சவால்கள்

D’Décor வெற்றி ஒரே நாளில் கிடைத்ததல்ல. இந்நிறுவனம் பல்வேறு சவால்களைக் கடந்து வந்துள்ளது. உற்பத்தியாளர் குழு, பொருத்தமான டிசைன், வாடிக்கையாளர் தொடர்பு போன்றவை அமையவில்லை. இந்த நிலையில் சர்வதேச வணிகத்தில் ஈடுபடுவது ஆரம்பத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

“இன்றிருப்பது போல் எளிதாகத் தகவல்களைப் பெறமுடியாத காலகட்டம் அது. வர்த்தகக் கண்காட்சிகள் போன்றவற்றில் அதிகளவில் பங்கேற்பதன் மூலமாகவும் இத்தாலிக்கு பயணிப்பதன் மூலமாகவும் சர்வதேச விற்பனையாளர்கள், டிசைனர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோர்களைத் தொடர்புகொண்டோம்,” என்றார்.

2008-ம் ஆண்டு உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோது இந்நிறுவனத்தின் ஏற்றுமதி வணிகம் வெகுவாக பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் D’Décor-ன் 65 சதவீத வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்காவை மையமாகக் கொண்டு நடந்து வந்தது. இதனால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.


பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வது ஒரு நிறுவனத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதை சமாளிக்க ஐரோப்பா, இந்தியா என வெவ்வேறு பகுதிகளில் செயல்படத் தீர்மானித்தோம். இந்த முயற்சி பலனளித்தது. வளர்ந்த நாடுகளில் சிறப்பாக செயல்படத் தொடங்கினோம்,” என்றார் அஜய்.

2

தயாரிப்பு மற்றும் சில்லறை வர்த்தகம்

திரைச்சீலைகள், விரிப்புகள் போன்றவற்றிற்கான துணிகள் இந்நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்புகள் ஆகும். D’Décor 2010-ம் ஆண்டு பி2சி வணிகத்தில் ஈடுபடத் தொடங்கியபோது படுக்கைக்கான துணிகள், டவல், விரிப்பு போன்றவற்றை தயாரிக்கும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டது. பிளைண்ட்ஸ், தரைவிரிப்புகள் போன்றவற்றையும் இந்நிறுவனம் இணைத்துக்கொண்டது.


இவர்கள் பி2சி வணிகத்தைத் தொடங்குவதற்கு முன்பு மிகப்பெரிய விநியோகஸ்தரை கையகப்படுத்தினர். அத்துடன் ‘சாம்பிள் புக்’ வணிக மாதிரியையும் அறிமுகப்படுத்தினர்.


இந்த வணிக மாதிரியின்படி சில்லறை வர்த்தகர்கள் சாம்பிள் புத்தகங்களை வாடிக்கையாளர்களிடம் காட்டி ஆர்டர்கள் பெறுவார்கள். பிறகு அவர்களுக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட அளவை மட்டும் D’Décor நிறுவனத்திடம் தெரிவிப்பார்கள். இதனால் இருப்பு வைக்கவேண்டிய அவசியமில்லை. இது குறித்து அஜித் விவரிக்கும்போது,

“கிட்டத்தட்ட அமேசான் போன்ற செயல்முறையில் சில்லறை வர்த்தகர் D’Décor டிஜிட்டல் தளத்தில் ஆர்டர் செய்வார்கள். ஆர்டர் பெற்றதும் எங்களது ரோபோடிக் கிடங்கில் ஆர்டர் அளவிற்கேற்ப துணி கட் செய்யப்பட்டு பேக் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். 48 மணி நேரத்தில் டெலிவர் செய்யப்படும். இதனால் செயல்பாடுகள் திறம்பட மேற்கொள்ளப்படுவதுடன் சில்லறை வர்த்தகர்களின் செயல்பாட்டு செலவும் குறைகிறது,” என்றார்.

D’Décor 2016-ம் ஆண்டு D’Assist என்கிற செயலியை அதன் சில்லறை வர்த்தகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சில்லறை வர்த்தகர்கள் D’Décor ஒட்டுமொத்த தயாரிப்புகளை உள்ளடக்கிய கேட்டலாக் மற்றும் மார்க்கெட்டிங் உள்ளடக்கங்களையும் அணுகலாம்.

“எங்களது ஒட்டுமொத்த தயாரிப்புகள் அடங்கிய லைப்ரரி டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. எஸ்கேயூ அல்லது தயாரிப்புகளின் தொகுப்பை உடனடியாக கண்காணிக்க உதவும் வகையில் எங்களது ஐடி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது,” என்று அஜய் விவரித்தார்.

D’Décor நீர்புகாத தன்மை, எளிதில் தீப்பிடிக்காத தன்மை, வைரஸ் எதிர்ப்புத் தன்மை, காற்றை தூய்மையாக்கும் தன்மை போன்றவற்றைக் கொண்டுள்ள துணிகளை புதிதாக அறிமுகப்படுத்தியது. அதாவது இந்தியாவின் வீட்டு அலங்கார துணி உற்பத்தியில் பல புதுமையான தயாரிப்பு வகைகளை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.


D’Décor இன்று இந்தியாவின் 250 நகரங்களில் 20,000 எஸ்கேயூ-க்கள் மூலம் சில்லறை விற்பனை செய்கிறது. 1,000 மல்டி-பிராண்ட் அவுட்லெட்களில் பங்களிக்கிறது. 30-க்கும் மேற்பட்ட பிரத்யேக பிராண்ட் ஸ்டோர்கள் செயல்படுகிறது. அத்துடன் மிகப்பெரிய சில்லறை வர்த்தகங்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறது.

கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் வருங்காலத் திட்டங்கள்

D’Décor தயாரிப்புகள் அத்தியாவசியப் பொருட்கள் பிரிவில் அடங்காது என்பதால் கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வணிக நடவடிக்கைகள் குறைந்தது. எனினும் நுகர்வோர் வீட்டில் இருந்து பணிபுரியும் வாழ்க்கை முறைக்கு மாறியுள்ளதால் வணிக வாய்ப்பும் உருவாகியுள்ளது.

“மக்கள் வீடுகளில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் வீட்டு அலங்காரத் துணிகள், படுக்கைப் பொருட்கள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வீட்டை மேம்படுத்தும் பொருட்கள், ஃபர்னிச்சர், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றின் தேவையும் அதிகரிக்கும். எனவே வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கி சிறப்பாக உதவவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார் அஜய்.

அதேசமயம் துணியைப் பொருத்தவரை மக்கள் தொட்டுணர்ந்து வாங்குவதே வழக்கம். இதனால் தயாரிப்புகளை வாங்குவதற்கு முன்பு D’Décor தயாரிப்புகளை நேரடியாக தொட்டுணர்ந்து அதில் கிடைக்கும் அனுபவத்தைப் பெற வெளியே வருவதற்கு மக்கள் தயங்குவார்கள்.

3

டிஜிட்டல் செயல்பாடுகள்

இதற்குத் தீர்வுகாணும் வகையில் D’Décor தயாரிப்புகள் குறித்த அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க டிஜிட்டல் ரீதியாக இந்நிறுவனம் செயல்படுகிறது.

“வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக இணைந்திருக்க 3டி தொழில்நுட்பத்திலும் டிஜிட்டல் தளங்களிலும் முதலீடு செய்து வருகிறோம். சில்லறை வர்த்தகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக உதவும் வகையில் எங்களது சொந்த தளத்தை உருவாக்கி வருகிறோம்,” என்றார்.

இந்நிறுவனமும் அதன் பார்ட்னர்களும் வாடிக்கையாளர்களிடம் தயாரிப்புகளைக் கொண்டு சேர்க்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் ஆன்லைன் தளங்களையும் பயன்படுத்திக்கொள்ள உதவும் வகையில் டிஜிட்டல் சேவை பிரிவை அமைப்பதில் ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் இந்த சகோதரர்கள்.

“நாங்கள் 3டி அசெட் உருவாக்குகிறோம். இது ஃபோட்டோரியாலிஸ்டிக் டிஜிட்டல் மாடல்கள் மற்றும் தயாரிப்புகளின் படங்களை உள்ளடக்கியது. பல்வேறு சூழல்களில் பயன்படுத்தக்கூடியது,” என்றார் அஜய்.

வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கூடுதல் சுகாதாரத்துடன்கூடிய பாதுகாப்பான தயாரிப்புகளை உருவாக்குவதில் இந்த பிராண்ட் கவனம் செலுத்தி வருகிறது. HeiQ என்கிற புதுமையான ஜவுளி தயாரிப்புகளில் கவனம் செலுத்தும் ஐரோப்பிய நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த இணைப்பின் மூலம் திரைச்சீலைகள், விரிப்புகள், படுக்கைகள் போன்றவற்றிற்கான வைரஸ் தடுப்பு மற்றும் காற்றை தூய்மைப்படுத்தும் துணிகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

“எங்களது தயாரிப்புகளின் தொகுப்பை உருவாக்குவதிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை சேவையாக வழங்குவதிலும் எங்களது உள்ளடக்கங்களையும் மார்கெட்டிங் செயல்பாடுகளையும் விரிவுபடுத்த தொழில்நுட்ப பார்ட்னர்களுடன் இணைவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கைகள் மூலம் வாடிக்கையாளர்களின் அனுபவங்களை அடுத்தகட்டத்திற்கு மேம்படுத்த உள்ளோம்,” என்றார்.

வாடிக்கையாளர்களுக்கும் சில்லறை வர்த்தகர்களுக்கும் மதிப்பை வழங்குவதில் கவனம் செலுத்தும் இந்த சகோதரர்களின் வணிகம் இந்தப் பிரிவில் சந்தையில் முன்னணி வகிக்கிறது. இந்தியாவில் வருவாய் அதிகரிப்பு, கட்டுமானப் பிரிவின் வளர்ச்சி ஆகியவையே ஆடைகள் அல்லாத துணிகளுக்கான தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. திறன்மிக்க தொழிலாளர்கள், உற்பத்தி ஆகியவை தொடர்புடைய செலவும் இந்தியாவில் குறைவு.


கோவிட்-19 நெருக்கடியை சிறப்பாக எதிர்கொண்டு உலகளவில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டால் இந்தச் சகோதரர்கள் ஜவுளி துறையில் புதுமை படைத்து தொடர்ந்து மென்மேலும் வெற்றியடைவார்கள்.


ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா