'கனவும் கற்றலும்' - தொழில்முனைவோர் பின்பற்ற வேண்டிய கலாமின் 5 பாடங்கள்!
கலாமின் வாழ்க்கை தரும் பாடங்களும், அவர் கடைபிடித்த கொள்கைகளும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு தொழில் உலகில் நுண்ணறிவுகளை வழங்கும்.
‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், எப்போதும் தொழில்முனைவோர்களை ஊக்கமளிக்கும் நபர். அவரின் கடின உழைப்பு, புதுமைகளை கண்டுபிடிப்பது ஆகியவை போட்டி நிறைந்த வணிக உலகில் நுழைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும் ஒளியாக செயல்படுகிறது.
கலாமின் வாழ்க்கை தரும் பாடங்களும், அவர் கடைபிடித்த கொள்கைகளும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு தொழில் உலகில் நுண்ணறிவுகளை வழங்கும். அந்த வகையில், அப்துல் கலாம் உரைத்த தொழில்முனைவோருக்கான 5 பாடங்கள் இதோ:
1. தொலைநோக்கு சிந்தனை
தொலைநோக்கு சிந்தனையே வெற்றிக்கு முக்கியம் என்று அப்துல் கலாம் உறுதியாக நம்பினார். அவரின் இந்த தத்துவம், இலக்குகளின் மீது தெளிவான பார்வையை கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
“கனவு காணுங்கள்... கனவுகள் எண்ணங்களாகவும், எண்ணங்கள் செயலாக மாறும்.”
- இது அப்துல் கலாம் உரைத்த பொன்மொழி.
தொழில்முனைவோருக்கு சவால்களை சமாளிக்க கனவு மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அந்த கனவு தான் அவர்களை இலக்கை நோக்கி ஊக்குவிக்கும். தங்களின் தொலைநோக்கு பார்வையில் கவனம் செலுத்துவதன் மூலம், தொழில்முனைவோர் தங்கள் கனவுகளை செயல்திட்டங்களாக மாற்ற முடியும். இது வெற்றிக்கு வித்திடும்.
2. கடின உழைப்பில் கவனம்
“நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்.”
“அர்ப்பணிப்பும், கடின உழைப்பே வெற்றிக்கு அடித்தளம்.”
- இது கலாமின் அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் இருந்து நாட்டின் உயர் பதவிக்கு தான் வந்த ஊக்கமளிக்கும் கதையை கலாம் அவ்வப்போது பகிர்ந்துகொண்டார். அவரின் கதையில், பயணத்தில் விடாமுயற்சிக்கான முக்கிய அங்கம் வகித்திருக்கும்.
இவை தொழில்முனைவோருக்கு சக்திவாய்ந்த ஊக்கமளிக்கும் கதை. வெற்றி என்பது வெள்ளித்தட்டில் நம்மை தேடிவராது. அப்படி வந்தால், அது அரிதாகவே வரும். மாறாக, வெற்றிக்கு தளராத முயற்சியும் அர்ப்பணிப்பும் தேவை.
3. நேர்மையுடன் வேலை செய்யுங்கள்
“ஒரு தலைவரை வரையறுங்கள். அவர் தொலைநோக்கு பார்வையும் ஆர்வமும் கொண்டிருக்க வேண்டும், எந்த பிரச்சினைக்கும் பயப்படாமல் இருக்க வேண்டும். மாறாக, பிரச்சினையை எப்படி தோற்கடிப்பது என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். மிக முக்கியமாக, அவர் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.” - அப்துல் கலாம்.
வணிக உலகில் நேர்மையை எப்போதும் பேரம் பேச முடியாது. கலாமின் தனிப்பட்ட வாழ்க்கையோ, அல்லது தொழில் வாழ்க்கையோ சரி, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு சான்றாக இருந்தது.
அதேபோல், தொழில்முனைவோர்கள் தங்களின் பங்குதாரர்கள் - ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையுடன் நேர்மையை வளர்ப்பது வெற்றிக்கும், தொழிலில் நற்பெயருக்கும் வழிவகுக்கும்.
4. தொடர்ந்து கற்பவராக இருங்கள்
கலாம் வாழ்நாள் முழுவதும் கற்பதில் ஆர்வம் காட்டியவர். இப்படி கற்பதன் மூலம், அறிவை நாடிச் செல்ல அவர் மற்றவர்களை ஊக்கப்படுத்தினார். புதிய திறமைகளை வளர்த்து கொள்வதன் அவசியத்தை எப்போதும் வலியறுத்தினார் அவர். மேலும், மாற்றங்களை ஏற்க எப்போதும் தயாராகவே இருந்தார் கலாம். ஏனென்றால், மாற்றங்களே இன்றைய வேகமான வணிகச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது.
“நம் அனைவருக்கும் சமமான திறமைகள் இல்லை. ஆனால், நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளது.” - அப்துல் கலாம்.
தொழில்முனைவோர்களுக்கு வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றில் இருந்து பாடம் கற்பிக்க உதவுகிறது. தற்போது உள்ள சூழலில் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது போட்டிகள் நிறைந்த பிசினெஸ் உலகில் நாம் நிலைத்து நிற்க உதவும்.
5. திரும்பக் கொடுக்கும் ஆற்றல்
“இன்றைய தினத்தை நாம் தியாகம் செய்வோம். அதனால் நம் குழந்தைகள் நல்ல நாளைப் பெற முடியும்.” - அப்துல் கலாம்.
சமூக மேம்பாட்டுக்கு அப்துல் கலாம் காட்டிய அர்ப்பணிப்பு தொழில்முனைவோருக்கு ஒரு முக்கிய பாடமாகும். ஒருவரின் வெற்றியானது மற்றவர்களை முன்னேற்ற பயன்படுத்த வேண்டும் என்பதை கலாம் நம்பினார்.
ஸ்டார்ட்அப் உரிமையாளர்கள் தங்கள் பிசினஸ்களில் சமூகப் பொறுப்பை கொண்டுவருவதன் மூலம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும். சமூக முன்முயற்சிகள் மூலம், சமூகத்துக்கு திருப்பிக் கொடுப்பது ஒரு நேர்மறையான மரபை உருவாக்கி நல்லெண்ணத்தை வளர்க்கும்.
டேக் அவே...
அப்துல் கலாமின் பணிகள் மற்றும் கொள்கைகள் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கின்றன.
கனவு காண்பது, தொடர்ச்சியாக கற்பது ஆகிய கலாமின் கொள்கைகள் நியூ ஜெனரேஷன் கண்டுபிடிப்பாளர்களையும், தலைவர்களையும் நிச்சயம் ஊக்குவிக்கும்.
கலாமின் கொள்கைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தொழில்முனைவோர்கள் வெற்றி என்பதை தாண்டி, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும்.
பெரும் சவால்கள் நிறைந்த உலகில், கனவு காணவும் உருவாக்கவும் துணிந்தவர்களுக்கு கலாமின் மரபு நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதலின் கலங்கரை விளக்கமாக உள்ளது.
பெரும் சவால்கள் நிறைந்த உலகில், கலாமின் கொள்கைகள், கனவு காணவும் அதனை மெய்ப்பிக்கவும் துணிந்தவர்களுக்கு நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதலின் கலங்கரை விளக்கமாக உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.
மூலம்: ஆஸ்மா கான்
பெப்சி நிறுவனத்தை வழி நடத்திய இந்திரா நூயி அளிக்கும் தலைமைப் பதவி பாடங்கள்!
Edited by Induja Raghunathan