அதிகரிக்கும் கள்ளநோட்டுகள்; ஆர்பிஐ வருத்தம்: 102% வரை உயர்ந்த ரூ.500 கள்ளநோட்டுகள்!
500 ரூபாய் கள்ளநோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ வருத்தம் தெரிவித்துள்ளது.
2021-22 ஆம் நிதியாண்டில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதாக ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. நாணய மேலாண்மை தொடர்பான அறிவிப்பில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பணப் புழக்கம் குறித்த முழுத் தகவலையும் ஆராய்ந்து சேமிப்பதே இந்த நாணய மேலாண்மை தொடர்பான அறிவிப்பாகும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,
நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்து விட்டதாகவும் குறிப்பாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
101.9 சதவீதம் வரையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளும், 54.16 சதவீதம் வரையிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகளும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நாட்டில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்திருப்பதை ஆர்பிஐ வெளிப்படையாக தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில்,
ரூ.2000 நோட்டுகள் எண்ணிக்கை 214 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக வெளியான அறிக்கையில் ரூ.2000 நோட்டுகள் 274 கோடி அளவில் புழக்கத்தில் இருந்தது. அதேபோல், புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.12,437 கோடியாக இருந்த நிலையில் தற்போது மார்ச் மாத கணக்குப்படி ரூ.13,053 கோடியாக இருக்கிறது.
ரூ.500 மதிப்புள்ள நோட்டுகள் படிப்படியாக புழக்கத்தில் அதிகரித்து வருகிறது. கள்ள நோட்டுகளில் ரூ.500 மதிப்புள்ள நோட்டுகள் கட்டுக்கடங்காத வகையில் புழக்கத்தில் இருக்கிறது. மார்ச் 2020ல் வெளியான தகவலின்படி, 25.4 சதவீதமாக இருந்த ரூ.500 நோட்டு புழக்கம் தற்போது 60 சதவீதம் முதல் 73.3 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 2021-22 ஆண்டறிக்கையில், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி ரூபாய் நோட்டுகள் அதிகரித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கூறியுள்ளது. குறிப்பாக ரூ.500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் அதிகளவு புழக்கத்தில் இருப்பது கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.500 போலி நோட்டுகள் 101.9 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 54 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இருப்பினும், 97 சதவீத இந்தியர்களால் போலி ரூபாய் நோட்டுகளை சரியாகக் கண்டறிய முடியும் என அறிக்கை தெரிவித்துள்ளது.