Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘லடாக் கார்டுங் லா’ கணவாயை பைக்கில் அடைந்த 56 வயது மினி அகஸ்டின்!

மினி அகஸ்டின், லடாக்கில் உள்ள கர்துங் லா கணவாய்க்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இந்தியப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தவர்.

‘லடாக் கார்டுங் லா’ கணவாயை பைக்கில் அடைந்த 56 வயது மினி அகஸ்டின்!

Friday March 04, 2022 , 2 min Read

மினி அகஸ்டின், லடாக்கில் உள்ள கர்துங் லா கணவாய்க்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இந்தியப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தவர்.

56 வயதான மினி அகஸ்டின் வயது என்பது வெறும் நெம்பர் தான் என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளார்.

யார் இந்த மினி அகஸ்டின்?

வாழ்க்கையில் அடுத்து வெற்றிகளை குவிப்பவர்களை பர்த்து “Born to win” என்பார்கள், அந்த வகையில் பார்த்தால் மினி அகஸ்டினை “Born to ride” என அழைக்கலாம். ஏனென்றால் 27 வயதில் இருந்தே தனது ராயல் என்பீல்டு பைக்குடன் பல பயணங்களை மினி அகஸ்டின் மேற்கொண்டுள்ளார்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கனரா வங்கியின் ரீஜினல் அலுவலகத்தில் 56 வயதான சீனியர் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அதைவிட மினி அகஸ்டின் தான் ஒரு நல்ல ரைடர் என்பதில் தான் மிக்க பெருமை கொள்கிறார். வயதான பிறகு யாரும் சாகங்களில் ஈடுபட மாட்டார்கள், குறிப்பாக பெண்கள் விஷயத்தில் சாகங்களுக்கு எல்லாம் வழியே கிடையாது என்ற நிலையை மாற்றியவர்.
Mini

2017 ஆம் ஆண்டில் தனது ராயல் என்பீல்டு பைக்கில் லடாக்கில் உள்ள கர்துங் லா கணவாயை அடைந்த வயதான பெண்மணி என்ற சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் ராஜஸ்தானுக்கு 2600 கிமீ பயணத்தை மேற்கொண்டது சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் பேசு பொருளாகியுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கேரளா முதல் ராஜஸ்தான் வரையிலான 2 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் பயணத்தை மினி அகஸ்டின் வெற்றிகரமாக முடித்துள்ளார். இதில் மினி உட்பட மாநிலம் முழுவதும் 27 ரைடர்களை பாரம்பரிய சுற்றுலாவிற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் அழைத்துச் சென்றுள்ளது.

9 நாட்களில் 2,600 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் உட்பட சுமார் 61 ரைடர்கள் இந்த பயணத்தில் பங்கேற்றனர். இதில் 5 பேர் உடல் நலக்குறைவு மற்றும் பைக்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பயணத்தை முடிக்கமுடியாமல் போயுள்ளது. ஆனால், குரூப்பிலேயே சீனியரான மினி அகஸ்டின் வெற்றிகரமாக பயணத்தை முடித்துள்ளார்.

பிரபல பத்திரிகை ஒன்றிற்கு மினி அகஸ்டின் பேட்டியில்,

"பயணத்திற்குச் செல்வதற்கு முன் நான் ஒரு வருடம் என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். நான் சூரிய நமஸ்காரம் செய்தேன் மற்றும் ஒரு வருடம் ஜாகிங் செய்தேன்,” என பயணத்திற்கு தயாரானது குறித்து விவரித்துள்ளார்.

செங்குத்தான மற்றும் குறுகிய சரிவுகளில் ஆரம்பித்து, இருண்ட மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் வரை, மினி மற்றும் அவரது பைக் இப்போது கிட்டத்தட்ட அனைத்து நிலப்பரப்புகளிலும் பட்டையை கிளப்பியுள்ளது.

Mini

28 ஆண்டுகளாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வரும் மினி அகஸ்டி,

“கடைசியாக ராஜஸ்தானுக்கு பயணித்துள்ளேன். பைக் எங்களை மாநிலம் முழுவதும் பாரம்பரிய சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றது மற்றும் கலாச்சார கலைப்பொருட்களைக் காணக்கூடிய பயணமாக இருந்தது. என்னுடன் 27 ரைடர்கள் இருந்தனர், கடந்த ஆண்டு டிசம்பர் 17 முதல் 26 வரை 2,600 கிலோமீட்டர் சாலைப் பயணத்தை மேற்கொண்டோம். நான் ஒரு ‘கிளாசிக்’ மாடல் புல்லட்டை வாடகைக்கு எடுத்தேன், வாகனத்தை சரியாக ஓட்ட எனக்கு சிறிது நேரம் பிடித்தது,” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ராஜஸ்தான் பயணம், அவரது உறுதியான விருப்பத்திற்கும், அவரது பயணத்தின் மீதான ஆர்வத்திற்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது. பெண்கள் ரைடர்ஸ் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வாதிடும் மினி, அடுத்ததாக வடகிழக்கு நோக்கி ஒரு பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

தொகுப்பு: கனிமொழி