Sebi-இன் ஒப்புதல் பெற்று ஐபிஓ வெளியிட இருக்கும் 6 இந்திய நிறுவனங்கள்!
விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு!
Nykaa, Adani Wilmar, மற்றும் Star Health & Allied Insurance உட்பட ஆறு நிறுவனங்கள் ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு செபியின் ஒப்புதலுக்கு விண்ணப்பித்திருந்தன. இப்போது ஒப்புதல் கிடைத்திருக்கிறது.
இவை தவிர, பென்னா சிமென்ட் இண்டஸ்ட்ரீஸ், லேடென்ட் வியூ அனலிட்டிக்ஸ் மற்றும் சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களும் நிதி திரட்ட செபியின் அனுமதியை பெற்றுள்ளன. மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் செபியிடம் ஐபிஓ ஆவணங்களை தாக்கல் செய்தன இந்த ஆறு நிறுவனங்கள்.
வரைவு ஆவணங்களின் படி, அழகு சாதன மற்றும் ஆரோக்கியப் பொருட்களின் தயாரிப்பு நிறுவனமான Nykaa-வின் ஆன்லைன் சந்தையை இயக்கும் FSN E-Commerce Ventures Ltd இன் ஐபிஓ,
525 கோடி மதிப்புள்ள பங்குகளின் புதிய பங்குகளை உள்ளடக்கியது. இதன் ஐபிஓ விற்பனை மூலம் ரூ. 3,500-4,000 கோடி வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மதிப்பு 5 பில்லியன் டாலர் முதல் 5.5 பில்லியன் டாலர் வரை இருக்கும்.
அதானி வில்மரின் முன்மொழியப்பட்ட ஐபிஓ ரூ.4,500 கோடி வரை (சுமார் $ 600 மில்லியன்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதானி வில்மர் நிறுவனம் பார்ச்சூன் பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய்களை விற்பனை செய்யும் நிறுவனமாக சமையல் எண்ணெய் தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதானி வில்மர் என்பது அதானி குழுமத்திற்கும் வில்மார் குழுவிற்கும் இடையிலான 50:50 கூட்டு நிறுவனமாகும்.
ஸ்டார் ஹெல்த் அண்ட் அலிட் இன்சூரன்ஸ் கம்பனியின் ஐபிஓ ரூ.2,000 கோடி மதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதுள்ள பங்குதாரர்களால் 60,104,677 பங்கு பங்குகளை விற்பனை செய்வதற்கான சலுகையை உள்ளடக்கியுள்ளது.
நாட்டின் தனியார் சுகாதார காப்பீட்டாளரான ஸ்டார் ஹெல்த், வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் மற்றும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போன்ற முதலீட்டாளர்களின் கூட்டமைப்பிற்கு சொந்தமானது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: பிடிஐ | தொகுப்பு: மலையரசு