எல்லா செயலிகளையும் ஒரே இடத்தில் பயன்படுத்த உதவும் புதிய செயலி
மது மற்றும் உத்கர்ஷ் அபூர்வா ஆகிய இருவரும் எப்போதும் பெரிதாக எதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் தொடர்ந்து இணைந்திருப்பவர்கள். 2012ம் ஆண்டு கிடார்ஸ்ட்ரீட் நிறுவனத்தை துவங்கியபோது இருவருக்குமே அது ஒரு நல்ல தொடக்கமாக பட்டது.
ஒருமுறை பெங்களூரின் ப்ரிகேட் ரோடில் உள்ள பிரசித்தி பெற்ற காஃபி ஷாப்பில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது தான் அந்த எண்ணம் உதித்தது. பல்வேறு செயலிகளை ஒரே இடத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு செயலி உருவாக்கினால் என்ன என்பதே அந்த எண்ணம்.
நிறுவனத்தின் இணை இயக்குனரான உத்கர்ஷ் பேசியபோது "தினமும் வேலை சார்ந்து பல்வேறு செயலிகளை பயன்படுத்துகிறோம். ஜிமெயில், எவர்நோட், கூகிள் கேலண்டர், ஸ்லாக், ட்ரெல்லோ போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு தொழில்நுட்பம் தேவைப்படுவதை உணர்ந்தோம். எனவே தான் இந்த முயற்சி” என்றார்.
ஜூன் 2014ம் ஆண்டு ஆடோகஸ் என்ற நிறுவனம் உதயமானது. ஆடோமேடட் கஸ்டமர் என்பதன் சுருக்கமே நிறுவனத்தின் பெயரானது. ஃபிப்ரவரி 2015ம் ஆண்டு குரோம் நீட்சி ஒன்றை வெளியிட்டார்கள். தரவுகளை ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு மாற்ற உதவக்கூடியது. உதாரணமாக உங்கள் மெயிலிலிருந்து ட்ராப்பாக்ஸுக்கு ஒரு ஃபைலை அனுப்பவதை போன்றது.
இப்போதைக்கு க்ளஸ்டோ என்ற புது தயாரிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது அலுவலக பயன்பாட்டிற்கான செயலிகளிலிருந்து தகவல்களை எடுத்து ஒரே இடத்தில் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை கொடுத்து பார்க்கவேண்டிய வேலைகளையும் தெரியப்படுத்தும்.
மேலும்
"மற்ற ஒருங்கிணைப்பு கருவிகளும் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை. பயனர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் இல்லை. க்ளஸ்டோ மூலமாக நாங்கள் அதை செய்கிறோம்” என்றார் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர்.
புதிதாக ஒரு பொருளை பற்றி யோசிப்பதென்பது எளிது. ஆனால் அதன் உருவாக்க பின்னணியில் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனைகளை கையாள்வது தான் சவாலே. இந்த இடத்தை பூர்த்தி செய்யவே அனுபப் பண்ட்யோபாத்யாய் என்பவர் மூன்றாவது இணை நிறுவனராக இணைந்தார்.
தொழில்நுட்ப அங்கங்கள்
இந்த தொழில்நுட்பத்தை இணையம் மற்றும் செயலி மூலமாகவும் பயன்படுத்த முடியும். நான்கு கட்டமைப்புகளை உள்ளடக்கியது. ஒருங்கிணைப்பு, தரவரிசை, ஆட்டோமேசன் மற்றும் தரவேற்றம்.
ஒருங்கிணைப்பு கட்டத்தில் மற்ற செயலிகளிலுள்ள எல்லா தரவுகளும் சேகரிக்கப்பட்டு க்ளஸ்டோவில் சேகரிக்கப்படுகிறது. க்ளஸ்டோவில் இருந்தபடியே எல்லா வேலைகளையும் செய்துகொள்ள முடியும். ஒவ்வொரு தளத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. வேலை முடிந்தவுடன் அது சார்ந்த தரவுகள் அது சம்பந்தப்பட்ட செயலிக்கு அனுப்பப்படுகிறது.
தரவரிசை என்பது இரண்டாம் கட்டமாகும் இது பயனர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் வகைபடுத்தக்கூடிய தொழில்நுட்பம் ஆகும். கொடுக்கப்படும் தகவல்கள் அடிப்படையில் வகைபடுத்தி சரியான நேரத்தில் அதை காட்டக்கூடியது ஆகும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு கூட்டம் இருக்கிறதென்றால் அதை முக்கியத்துவப்படுத்தி காட்டும்.
இறுதியாக ஆட்டோமேசன் மற்றும் தரவேற்றம் இவை இரண்டும் தொடர்ச்சியான வேலை தேவைப்படும் ஒன்றாக இதன் இணை நிறுவனர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக உங்கள் குழு ட்ரெல்லோ என்ற செயலியை பயன்படுத்திக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம் நீங்கள் டுடூ லிஸ்டில் இருக்கிறீர்கள் ட்ரெல்லோவில் இருந்து வரும் செய்திகளையும் க்ளஸ்டோ கணக்கில் இருந்த படியே பார்த்துக்கொள்ள முடியும். எதுவும் உங்கள் கண்ணில் படாமல் போகாது.
இப்போதைக்கு க்ளஸ்டோ செயலியானது தனிப்பட்ட சோதனைக்காகவே வெளியிடப்பட்டுள்ளது. 300 பயனர்கள் இதை பயன்படுத்த காத்திருக்கிறார்கள். சோதனை ஓட்ட அடிப்படையில் இப்போதைக்கு 25 பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன் இன்னும் இந்த செயலியை வெளியிடவில்லை என இதன் நிறுவனர்களிடம் கேட்டபோது "நாங்கள் இதை மெருகேற்ற வேண்டி இருக்கிறது. இது முதிர்ச்சியடைய வேண்டும். முழுமையடையாத ஒன்றை வெளியிட நாங்கள் விரும்பவில்லை. காரணம் அதில் இருக்கக்கூடிய சின்ன சின்ன பிரச்சனைகள் கூட மோசமான பெயரை பெற்று தந்துவிடும்” என்றனர்.
ஜனவரி 2016ம் ஆண்டு இந்த செயலியை வெளியிடும் திட்டமிருப்பதாக தெரிவித்தார்கள்.
ஜேஎஃப்டிஐ ஆசியா
இந்த செயலியின் ஆரம்பக்கட்ட நிலைக்காக மதுவும் உத்கர்ஷும், ஜேஎஃப்டி ஆசியா எனப்படும் சிங்கப்பூர் சார்ந்த முதலீட்டு நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் உதவியால் தான் இன்று இந்த நிலையை எட்ட முடிந்திருப்பதாக தெரிவித்தார்கள். அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்ததன் மூலமும் பயனர்களின் தேவைகளை புரிந்துகொண்டதன் மூலமுமே முதல்கட்ட செயலியை உருவாக்கியிருக்கிறார்கள்.
இது தங்கள் வாழ்க்கையையே மாற்றியதாக தெரிவிக்கிறார்கள். செலவளித்து உருவாக்கப்பட்ட பணிச்சூழலும் தனிமனிதர்களும் மிக உன்னிப்பாக பணியாற்ற உதவியதாக தெரிவிக்கிறார். முதலீட்டாளர்கள் சிறு முதலீட்டாளர்களோடு ஒரு இணைப்பை ஏற்படுத்தவும் உதவியதாக தெரிவிக்கிறார்கள்.
இப்போதைக்கு இந்த நிறுவனம் இண்டியன் விசி நிறுவனத்தோடு முதலீடு தொடர்பான உச்சக்கட்ட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் விரைவில் அது இறுதிகட்டத்தை எட்டும் எனவும் தெரிவிக்கிறார்கள்.
பாதுகாப்பு மற்றும் அந்தரங்க காப்பு
”ஆரம்பத்தில் இணைபவர்கள் இது பற்றி மிகத்தெளிவாகவே பேசுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சின்னதான எதிர்ப்பு தான் இருந்தது. சிலர் எதிர்கேள்வி எழுப்பவே இல்லை. காரணம் சமீபகாலமாக மக்கள் ஜி+ மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்தி மற்ற செயலிகளை பயன்படுத்துகிறார்கள். எங்களுடையதும் அது போன்றது தான்” என்கிறார் இணை நிறுவனர்.
எனினும் பாதுகாப்பு பற்றி தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். பயனர் கணக்கோடு இணைந்த பல அடுக்கு பாதுகாப்பு கொண்டது அது கருவியோடு இணைப்பு கொண்டது. அடிப்படையில் கடவுச்சொல் ஏதும் பயன்படுத்த தேவையில்லை. முதல் முதலில் ஒரு கருவியை பயன்படுத்தி உள் நுழையும் போது கருவியோடு இணைந்த கடவுச்சொல் ஒன்று உருவாக்கப்படுகிறது. எல்லா தொடர்புகளும், தொடர்புடைய விசைகளை குறியாக்கப்பட்டு சேமிக்கபடுகிறது. எனவே தரவு இழப்பு என்பது மிகக்குறைவே. ஒருவேளை இவர்கள் பயன்படுத்தும் கருவி தொலைந்துவிட்டால் வேறு ஒரு கருவியின் மூலம் இந்த செயலியை தடை செய்துவிடும்.
பணம் பண்ணுதல்
தொழில்முனைவோர்களையும் சிறு நிறுவன முதலாளிகளையும் மையப்படுத்தியே தற்போது இயங்குகிறார்கள். இப்போதைக்கு இலவச சேவை வழங்கவே விரும்புகிறார்கள். குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் வசூலித்துக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்கள்.
விளம்பரங்களின் மூலம் பணம் பண்ணும் எந்த திட்டமும் தங்களுக்கு இல்லை என தெரிவிக்கிறார். வேறு எதேனும் வழிகளில் பணம் பண்ணிக்கொள்ளலாம் என்கிறார்கள்.
ஆய்வுமுடிவு
மார்ச் 2014ம் ஆண்டு விசன்மொபைல் வெளியிட்ட அறிக்கையின் படி பிசினஸ் மற்றும் உற்பத்தி சார்ந்த செயலிகளுக்கான சந்தை, ஆப் ஸ்டோருக்கு வெளியே முக்கியமாக கவனிக்கப்படுகிறது. மொத்த ஆப்ஸ்டோர் விற்பனையில் உற்பத்தி சார்ந்த செயலிகளின் விற்பனை வெறும் பத்து சதவீதம் மட்டுமே. இது ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலானது. இது 2016ம் ஆண்டு 6 பில்லியன் டாலர் அளவிலான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2013ம் ஆண்டு வணிகம் மற்றும் உற்பத்தி சார்ந்த செயலிகளுக்காக 28 பில்லியன் டாலர் வரை செலவளித்திருக்கிறார்கள். இது 2016 ஆம் ஆண்டு 58 பில்லியன் டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது க்ளஸ்டோவுக்கு உற்பத்தி சார்ந்த துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இது ஏற்கனவே பி2பி சந்தையை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆப் ஸ்டோரில் இதை எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள் என்பது தான் நம்முன் இருக்கும் பெரிய கேள்வி .
இணையதள முகவரி: Clus.to