Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

2018ல் ’யுவர்ஸ்டோரி தமிழ்’ வெளியிட்டு வைரல் ஆகிய 5 கட்டுரைகள்...

2018ல் ’யுவர்ஸ்டோரி தமிழ்’ வெளியிட்டு வைரல் ஆகிய 5 கட்டுரைகள்...

Wednesday December 19, 2018 , 3 min Read

image


ஒவ்வொரு ஆண்டும் பல நினைவுகளை சுமந்துக்கொண்டு அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். சில நினைவுகள் வியக்கும் வகையிலும் சில நினைவுகள் கசப்பாகவும் நமக்கு அமைந்திருக்கும். அந்த வகையில் 2018ல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி நமது நினைவில் இடம் பிடித்த மற்றும் நெட்டிசன்களை கவர்ந்த யுவர்ஸ்டோரி தமிழ் வெளியிட்டு வைரல் ஆகிய 5 கட்டுரைகள் இதோ...

1. கிரிஹலக்ஷ்மி இதழ் வெளியிட்ட பெண் தாய்ப்பால் கொடுக்கும் அட்டைப்படம்

கிரிஹலக்ஷ்மி கேரள இதழ் ஒன்று பொது இடங்களில் பாலூட்டுவது இயல்பு என காட்டும் நோக்கில் ஒரு தாய் குழந்தைக்கு பாலூட்டும் வகையில் தனது மார்ச் மாதப் பதிப்பின் அட்டைப்படத்தை வெளியிட்டு பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இது இயற்கைக்கு புறம்பானது எனவும், பாலூட்டும் அந்த பெண் நிஜ தாய் அல்ல, பெண்ணின் மார்பகம் தெறிவது ஆபாசமாக உள்ளது என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து, இந்த இதழை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தனர்.

image


ஆனால் இதனை ஆதரித்து பல பெண்கள் குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இது இயல்பானது மற்றும் எங்களின் உரிமை எனக் குரல் கொடுத்து வந்தனர்.

இந்த துணிச்சலான கதையைப் பற்றி மேலும் படிக்க: கிரிஹலக்ஷ்மி

2. கருவாடு முதல் கம்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் பல்லாவரம் சந்தை

பூ சந்தை, ஆட்டுச் சந்தை,கோழிச் சந்தை, வாரச் சந்தை, உழவர் சந்தை என அனைத்தும் ஒரு சேர அமைந்திருக்கிறது பல்லாவரம் சந்தை. நீங்கள் ஆசைப்படும் அத்தனையும் கிடைக்கும் பிரம்மாண்ட சந்தை இது. 1815 ல் மாட்டுச் சந்தையாக தன் அடையாளத்தை தொடங்கிய பல்லாவர சந்தை இன்று மல்டி ஸ்பெஷாலிட்டி மார்கெட்டாக விளங்கி வருகிறது.

image


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுட்டெரிக்கும் வெயில், புழுதி மண், என எதைப்பற்றியும் கவலைப்படாமல் காலை 4 மணிக்கு தொடங்கி நள்ளிரவு12 மணி வரை இங்கே வியாபாரம் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

இச்சந்தையைப் பற்றிய சுவாரசிய தகவல்களை அறிய: பல்லாவரம் சந்தை

3. அம்பானி வீட்டின் ஆடம்பரக் கல்யாணம்

பிரபலங்கள் வாழ்வில் அதிக ஈடுபாட்டை காட்டும் நாம் அவர்கள் வீட்டுத் திருமணம் என்றால் கண்ணில் விளக்கெண்ணையை விற்று பார்ப்போமே. பில்லியனர் என்றாலே ஆடம்பரம் தான் என்பதுபோல் முகேஷ் அம்பானியின் மூத்த மகனின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து நமது பார்வையை அவர்கள் பக்கம் ஈர்த்தது. 

மணமக்களின் ஆடையில் தொடங்கி, ஆபரணங்கள், பார்ட்டி, சாப்பாடு, கலை நிகழ்ச்சி என பலநூறு கோடிகளுக்கு மேல் செலவு செய்யப்பட்ட இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக இது அமைந்துள்ளது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியே மெஹந்தி, சங்கீத், நிச்சயம் என்று மூன்று நாள் கொண்டாட்டமாக நடந்தேறியது

image


அதனைத் தொடர்ந்து அம்பானியின் மகள் இஷா அம்பானியின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பெரும் திருவிழாவாக நடந்து முடிந்தது. 3லட்ச ரூபாய் கல்யாண பத்திரிக்கையில் துவங்கி 720 கோடி ரூபாய் செலவில் பல பிரபலங்களுடன் இந்நிகழ்வுகள் அரங்கேறியது.

ராஜா வீட்டுக் கல்யாணம் போல் நடந்து முடிந்த இந்த சுப நிகழ்வுகளை பற்றி மேலும் படிக்க: ஆகாஷ் அம்பானி நிச்சயதார்த்தம் மற்றும் இஷா அம்பானியின் நிச்சயம் டு ரிசெப்ஷன்

4. இந்தியாவின் ’தி பிக்கஸ்ட் எருமை’ பட்டம்பெற்ற ஹரியானாவை சேர்ந்த எருமை

கால்நடைகளின் எடை, உடல் ஆரோக்கியம், இனப்பெருக்கத் திறன், ஆகியவற்றை கணக்கிட்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ள ஹரியானாவைச் சேர்ந்த எருமையின் மதிப்பு ரூ.21 கோடி.

image


5 அடி 11 அங்குலம் உயரத்துடன், 1,500 கிலோ எடை கொண்ட சுல்தான் எனும் கருகரு காஸ்ட்லி ஆண் எருமையின் விந்தணுவின் விலை ஒரு கோடி ஆகும். இந்த சுல்தான் எருமையை பராமரிக்க 5 வேலையாட்கள், தினமும் உண்ண 10 லிட்டர் பால், 15 கிலோ ஆப்பிள், 20 கிலோ கேரட், 10 கிலோ தானியங்கள், 10 டூ 12 கிலோ இலை, தழை காய்கறிகள் என ராஜ வாழ்க்கை வாழ்கிறது இந்த எருமை.

சுல்தானைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள: தி பிக்கஸ்ட் எருமை

5. கறிக்கு தொட்டுக்கயாக சோறு வழங்கும் 'பாப் அப் தமிழச்சி அடுப்பங்கரை'

சேலம் மாவட்டம் வாழாப்பாடி பைபாஸில் முத்தம்பட்டி எனும் ஊரில் உள்ள ‘பாப் அப் தமிழச்சி அடுப்பங்கரை' திகட்ட திகட்ட கறிவிருந்து அளிக்கிறது. ஒரு வாழையிலையில் கோழி முட்டையில் ஆரம்பித்து, கோழி, ஆட்டுக் கறி, குடல், கால், எலும்பு, இரத்த பொறியல், மீன், இறால், நண்டு என பறப்பதில் துவங்கி நீந்துவது வரை சகலத்தையும் வழங்குகிறது.

image


இயற்கை எழிலுடன் அமைந்துள்ள உணவகத்தில் மதியவிருந்து உண்ண, முந்தின நாளே முன்பதிவு செய்ய வேண்டும். நாளொன்றுக்கு 40 பேருக்கு மட்டுமே காரசார விருந்து அளிக்கப்படுவதால், முந்துபவங்களுக்கே முன்னுரிமை என்ற பார்மூலாவில் இயங்குகிறது இவ்வுணகம். சமூக வலைதளம் மூலம் வேகமாக செய்தி பரவும் இக்காலத்தில், சுவையுடன் கூடிய இந்த உணவுக்கு முன்பதிவு அவசியம் தானே.

மெகா விருந்து அளிக்கும் இந்த உணவகத்தைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள: பாப் அப் தமிழச்சி அடுப்பங்கரை

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்