உலக பில்லியனர்கள் பட்டியலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 7 ஃபார்மா முதலாளிகள்!
இந்தியாவில் 5வது இடத்தை பிடித்திருக்கிறது ஹைதராபாத்!
முன்னணி பில்லியனர்களில் ஒருவரான Divi’s Lab’s ஆய்வகத்தின் முரளி திவி (Murali Divi) மற்றும் அவரது குடும்பம் இந்தியாவில் 20வது இடத்தில் உள்ளது.
ஹூருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021ன் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 10 பில்லியனர்களில் ஏழு பேர் மருந்து தொழிலதிபர்களாக இருக்கின்றனர். 23 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1,65,900 கோடி) மதிப்புடன் அவர்கள் அனைவரும் ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021 (Hurun Global Rich List 2021) பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் 5வது இடத்தை பிடித்திருக்கிறது ஹைதராபாத். 60 பில்லியனர்களுடன் மும்பையும், டெல்லி (40), பெங்களூரு (22), அகமதாபாத் (11) ஆகியவற்றுடன் ஹைதராபாத் 5வது இடத்தை பிடித்திருக்கிறது.
முன்னணி பில்லியனர்களில் ஒருவரான திவி ஆய்வகத்தின் முரளி திவி மற்றும் அவரது குடும்பம் இந்தியாவில் 20வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 54,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 385வது இடத்தில் உள்ளது.
அரவிந்தோ பார்மாவின் விளம்பரதாரர் பி.வி.ராம்பிரசாத் ரெட்டி & குடும்பம் இந்திய அளவில் 56வது இடத்தையும், உலக அளவில் ரூ.22,600 கோடியுடன் ரூ.1,096 இடத்தையும் பிடித்துள்ளது.
ஹெட்டெரோ மருந்துகளின் விளம்பரதாரர் பி பார்த்தசாரதி ரெட்டி & குடும்பத்தினர் இந்த ஆண்டு 16,000 கோடி ரூபாய் சொத்துக்களுடன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலில் நுழைந்துள்ளனர். இதன் மூலம் அவர் ஹைதராபாத்தில் மூன்றாவது இடத்திலும், இந்தியாவில் 83வது இடத்தையும் பிடித்துள்ளார்.
நான்காவது இடத்தில் டாக்டர் ரெட்டியின் ஆய்வக உரிமையாளர் கே சதீஷ் ரெட்டி & குடும்பத்தினரும், ஐந்தாவது இடத்தில் ஜி.வி.பிரசாத் மற்றும் அவரது மனைவி ஜி அனுராதாவும் (ரூ.12,800 கோடி மற்றும் ரூ.10,700 கோடி) இடம்பிடித்துள்ளனர்.
உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத்துறையில் சிறந்து விளங்கும் ஹைதராபாத் பில்லியனர் பட்டியலில் ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர் மற்றும் உலகளவில் 2,383வது இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.
தகவல் உதவி- economictimes | தொகுப்பு: மலையரசு