Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்!

நீங்கள் வீட்டிலே இருந்தபடி, முதலீடு ஏதும் இல்லாமல் சம்பாதிக்கக்கூடிய 7 வழிகள் இதோ:

2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்!

Tuesday October 13, 2020 , 3 min Read

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் வீட்டில் உட்கார்ந்து ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். மேலும், டீனேஜர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் ஈட்ட எளிதான வழியைக் கண்டுபிடிப்பது கடினம்.


சில நேரங்களில், ஆன்லைனில் பணிபுரியும் போலி ஏஜென்சிகளால் மக்கள் ஈர்க்கப்பட்டு அதில் மாட்டிக் கொண்டு பணத்தை இழக்கிறார்கள். இவற்றை தாண்டி, எந்த முதலீடும் இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நிரூபிக்கப்பட்ட சில முறைகள் உள்ளன.


அப்படி நீங்கள் வீட்டிலே இருந்தபடி, முதலீடு ஏதும் இல்லாமல் சம்பாதிக்கக்கூடிய 7 வழிகள் இதோ:


1. வலைப்பதிவைத் தொடங்குங்கள்:

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதென்பது ஒரு நீண்ட செயல்முறையாகும். முன்பெல்லாம் நீங்கள் முதலில் ஒரு ப்ளாக் என்று சொல்லக்கூடிய வலைப்பதிவைத் தொடங்க, முன்பு பதிவு செய்யப்பட்ட டொமைனை வாங்கி, உங்களுக்கான ஹோஸ்ட் மற்றும் கருப்பொருள்களை தீர்மானிக்க வேண்டும். ஆனால் இப்போது, ​​ஒரு பைசா கூட செலவழிக்காமல் உங்கள் வலைப்பதிவை நீங்கள் தொடங்கமுடியும்.


ஒரு தொழில்முனைவராக எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது குறித்த சிறந்த முறைகளில் இதுவும் ஒன்றாகும். முதலில், ’மீடியம்’ (Medium) என்ற பிரபல ப்ளாக் தளத்தில் எழுதத் தொடங்கவும். அதில் கூட்டு திட்டத்தின் மூலம் நீங்கள் எழுதுவதை பணமாக்கலாம்.


அடுத்து, வேர்ட்பிரஸ் அல்லது ப்ளாக்கர் (blogger or WordPress) இவற்றில் இலவசமாக ஒரு வலைப்பதிவை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிளாக்கிங்கில் வருவாய் என்பது உங்கள் எழுத்துக்களுக்கு வரக்கூடிய ட்ராபிக்கை பொறுத்தே அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும், உங்கள் வலைப்பதிவில் தயாரிப்புகள், பொருட்களை சந்தைப்படுத்தியும், விற்பனை செய்வதன் மூலமும் உள்ளடக்கத்தை பணமாக்கலாம். இது ஒரு நீண்ட கால செயல்முறை என்றாலும், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று.

2. உள்ளடக்கம் உருவாக்குங்கள்

நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளராகவும், ஆங்கிலம்/தமிழ் இலக்கணத்தில் வல்லவராகவும் இருந்தால், ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உள்ளடக்கங்களை எழுதலாம். ஒரு கட்டுரையை எழுதுவது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும். அதற்கு பரந்த அறிவும், தேடலும் தேவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வேலையைத் தொடங்க எந்த முதலீடும் தேவையில்லை.

5 Simple Steps to Improve Your Content Writing Process

Photo by Nick Morrison on Unsplash

நீங்கள் மாதிரிக் கட்டுரைகளை எழுத வேண்டும் மற்றும் அவற்றை உங்கள் வாய்ப்புகளுக்கு அனுப்புவதன் மூலம் வேலை செய்யத் தொடங்க வேண்டும். மேலும், நீங்கள் எழுதுவதற்கு பணம் தரும் வலைத்தளத்திற்கும் வேலை செய்யலாம். உங்களுக்கு ஏற்ற தலைப்புகள் கொண்ட வலைதளத்தை தேர்ந்தெடுத்து உள்ளடக்கம் கொடுத்தால் நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும்.

3. ஃப்ரீலான்சர் (பகுதி நேர ஊழியர்) ஆகலாம்

நீங்கள் ஒரு நிறுவனத்தில் முழுமையாக பணிபுரியாமல், பகுதிநேரமாக பல நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணிபுரிந்தால் நீங்கள் நல்ல வருவாய் ஈட்டமுடியும். ப்ரோகிராமிங், சந்தைப்படுத்தல் மற்றும் வடிவமைப்புத் துறைகளில் நீங்கள் வல்லுனர்களாக இருந்தால், ஒரு பகுதி நேர பணியாளராகி (Freelancer) ஆன்லைனில் நன்றாகவே பணம் சம்பாதிக்கலாம். இந்த வேலையைச் செய்வதற்கான பொறுமை உங்களுக்கு இருக்க வேண்டும். மேலும், சரியான பகுதி நேர ஊழியராக மாற இரண்டு திறன்கள் தேவை.


முதலாவது உங்களிடம் உள்ள ஒரு முக்கியத் திறன், மற்றொன்று சந்தைப்படுத்தல் திறன். நீங்கள் மார்க்கெட்டிங் செய்வதில் வல்லவராக இல்லாவிட்டால் நிபுணர்களின் உதவியை பெறலாம். அதே போல் உங்களுக்கு சிறந்த தகவல் தொடர்பு திறன்கள் இருப்பதும் அவசியம் ஆகிறது.

4. ஆலோசகர் ஆகுங்கள்

ஆலோசகராக உங்கள் அறிவை மக்களுக்கு தருவதன் மூலமும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம். இதற்காக, மாணவர்களை விட உங்களுக்கு அதிக அனுபவம் இருக்க வேண்டும். இந்த வேலையை ஆன்லைனில் செய்வதன் மூலம் குறிப்பிடத்தக்க பணம் சம்பாதிக்கலாம்.


மேலும், ஆலோசகராக நீங்கள் உங்களின் அறிவாற்றல் உள்ள துறையை தேர்ந்தெடுத்து அதில் மற்றவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி, வகுப்புகள் எடுத்து சம்பாதிக்கலாம். முக்கியத் திறன் கொண்ட ஒருவர் ஆலோசகராக பணியாற்றினால் ஆன்லைனில் எளிதாக வாடிக்கையாளர்களைத் தேடலாம்.


உதாரணமாக, ஒரு நிதி நிபுணராக, ஆன்லைனில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக உங்கள் வலைத்தளத்தை உருவாக்கலாம். இப்படி பல வழிகளில் நீங்கள் ஆலோசகராகி நன்றாக சம்பாதிக்கலாம்.

5. மின் புத்தகம் (e-book) எழுதலாம்

மின் புத்தகங்கள் எழுதுவதன் மூலமும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம். உங்கள் மனதில் ஏதேனும் குறிப்பிட்ட தலைப்பு அல்லது உங்கள் பொழுதுபோக்கைப் பற்றி நீங்கள் எழுத விரும்பினால் அது எளிதாக இருக்கும்.

Blog Marketing

மேலும், நீங்கள் சில தளங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, உங்கள் புத்தகத்தை விற்றுத் தந்தால் அவர்களுடன் உங்கள் வருவாயை பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் புத்தகத்தை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு, அமேசான் கிண்டில் பதிப்பகத்தின் உதவியைப் பெறலாம். ஒவ்வொரு விற்பனைக்கும் அவர்கள் கமிஷன் வசூலிப்பார்கள். நீங்கள் அங்கு பல பிரதிகள் விற்கலாம்.

6. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் சம்பாதிக்கலாம்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து பணம் சம்பாதிக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும். மேலும், நீங்கள் ஒரு ட்வீட் அல்லது ஃபேஸ்புக்கில் ஒரு இடுகைக்கு சுமார் 10,000-20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.


சமூக ஊடகங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை பொழுதுபோக்கு களத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சொத்து. எனவே, இந்த டொமைன் தொடர்பான நபர்கள் சமூக ஊடக பயன்பாட்டில் தங்கள் பக்கத்தை பணமாக்க முடியும்.

7. யூட்யூபில் சம்பாதிக்கலாம்

மக்கள் பலர் YouTube -லிருந்து மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இது எளிதான பணி அல்ல, ஆனால் வீடியோக்களைப் பதிவுசெய்து பதிவேற்றக்கூடியவர்களுக்கு இது சாத்தியம். பொதுவாக, இரண்டு வகையான நபர்கள் யூட்யூப் சேனல்களை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.


முதலில், வேடிக்கையான வீடியோக்களை உருவாக்கக்கூடியவர்கள் மற்றும் பிறர் மாணவர்கள், இல்லத்தரசிகள் போன்றவர்களுக்கு பயனுள்ள வீடியோக்களை உருவாக்கக்கூடியவர்கள். அதற்கு முன் வீடியோக்களை உருவாக்கத் தேவையான யுக்திகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


சரி பல வழிகளை பார்த்துவிட்டோம். இப்போது நீங்கள் உங்கள் இடத்தில் உட்கார்ந்து ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் தொழில் எது என தீர்மானித்துக் கொள்ளுங்கள்.