தனது 20 சென்ட் நிலத்தை மாநகராட்சிக்கு தானமாக வழங்கிய 76 வயது முதியவர்!
கொரோனாவுக்கு பிறகு ரியல் எஸ்டேட் வர்த்தகம் மீண்டும் தலைதூக்கி வரும் நிலையில், ஊரின் பிரதானமான இடத்தில் உள்ள நிலத்தை 76 வயதான முதியவர் ஒருவர் ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைப்பதற்காக சாலையை விரிவுபடுத்தும் பணிக்கு கொடுத்துள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு ரியல் எஸ்டேட் வர்த்தகம் மீண்டும் தலைதூக்கி வரும் நிலையில், ஊரின் பிரதானமான இடத்தில் உள்ள நிலத்தை 76 வயதான முதியவர் ஒருவர் ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைப்பதற்காகவும், சாலையை விரிவுபடுத்தும் பணிக்காகவும் தானமாகக் கொடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தின் மின்சார வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கே. எல். ஜோசப் அலோசியஸ். இவர் தனது 20 சென்ட் நிலத்தை கொச்சி மாநகராட்சிக்காக தானம் கொடுத்துள்ளார். தேவாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும், கோந்துருத்தியில் சாலையை அகலப்படுத்தவும் தனது சொந்த நிலத்தை அவர் வழங்கியுள்ளது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தேவாரத்தில் உள்ள அலோசியஸுக்கு சொந்தமான 7 சென்ட் நிலத்தை புறம்போக்கு நிலம் என நினைத்த கொச்சி மாநகராட்சி, 2000ம் ஆண்டு அதில் தொழிற்சாலை கட்ட அனுமதி அளித்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த அலோசியஸ் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு கடந்த 22 வருடங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது அந்த நிலத்தை கொச்சி மாநகராட்சிக்கே கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
“எனது மறைந்த தாயாரின் 90வது பிறந்தநாளின் போது, அப்பகுதியின் கவுன்சிலர் மீண்டும் என்னை அணுகி, நிலத்தை மாநகராட்சிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். எனது தாய் உயிருடன் இருந்திருந்தால், ஒரு சிறந்த காரணத்திற்காக நிலத்தை எனக்கு வழங்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டிருப்பார்,” என்கிறர்
கவுன்சிலரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நிலத்தை மாநகராட்சிக்கே தர சம்மதித்த அவருக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே இருந்துள்ளது. அதாவது, தான் தானமாக கொடுக்க உள்ள நிலத்தில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது தான்.
“என் அம்மா உயில் எழுதியபோது எனக்கு 50 சென்ட் கொடுத்தார். அதில், 42.75 சென்ட் நிலத்தை 12 நிலமற்ற குத்தகைதாரர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்துள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, கோந்துருத்தி ரோட்டை அகலப்படுத்த 13.5 சென்ட் நிலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஆவணங்களை கொச்சி மேயர் எம்.அனில்குமாரிடம், அலாய்சியஸ் கடந்த வாரம் வழங்கியிருக்கிறார்.
‘குடியிருக்க வீடு மட்டும் போதும்’ - தன் ரூ.600 கோடி சொத்தை தானமாக வழங்கிய அரவிந்த் கோயல்!