தோல்வியில் இருந்து வெற்றிக் கதைகள் ஆன 10 வெற்றியாளர்களின் கதைகள்!
உலகின் வெற்றிகரமான தோல்விகளில் இருந்தும் ஊக்கம் அளிக்கும் பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.
வெற்றிகரமாக திகழ் வேண்டும் என்பது புவியில் உள்ள நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. குழந்தையோ, பெரியவரோ வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், வெற்றி பெற வேண்டும் எனும் உள்ளார்ந்த விருப்பமே, நம்மை மகத்தான வெற்றியை நோக்கி முன்னேற வைக்கிறது.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும், ஒருவருக்கு ஒருவர் போட்டியிடும் தன்மையை பார்க்கலாம். வெற்றியை நோக்கிய பயணத்துடனான நம்முடைய முயற்சியின் ஒப்பீடாக, நாம் மேலும் எதிர்பார்த்து, வெற்றி நம் வாயிற்கதவுகளை தட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
முன்னணி பத்து வெற்றிக்கதைகள்
அவ்வாறு வெற்றி கிடைக்காவிட்டால், நாம் ஏமாற்றம் அடைந்து, தாழ்வு மனப்பான்மை கொள்கிறோம். சீரான, ஈடுபாடு மிக்க முயற்சிகள் அலட்சியம் செய்யப்பட்டு, தோல்வி மட்டுமே ஊக்குவிப்பட்ட மனிதர்கள் மத்தியில் இந்த நிலையைக் காணலாம்.
உலகில் இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பெரும்பாலான ஜாம்பவான்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சோதனைகளை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் வெற்றிக்கான பாதையில் தொடர்ந்து முயற்சித்து, தங்கள் துறைகளில் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர். சாதி, மதம் என எந்த பேதமும் அவர்களைத் தடுத்து நிறுத்தியதில்லை.
அந்த வகையில் பத்து வெற்றிகரமான தோல்விகளுக்கான பட்டியலை இங்கே பார்க்கலாம்:.
1. ஸ்டீவ் ஜாப்ஸ்: ஆப்பிளை போன்ற பெரிய நிறுவனத்தை உருவாக்கிய ஜாம்பவனாக ஸ்டீவ் ஜாப்ஸ் கருதப்படுகிறார். இருப்பினும், 2 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம் ஒரு கேரேஜில் 2 பேரால் துவக்கப்பட்டது என்பது வியப்பளிக்கலாம். அது மட்டும் அல்ல இந்த மகத்தான நிறுவனர் தான் துவக்கிய நிறுவனத்தில் இருந்தும், அதன் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். எனினும் ஜாப்ஸ் தனது திறமையை உணர்ந்து, ஆப்பிளை மகத்தான நிறுவனமாக உருவாக்கினார்.
2. பில் கேட்ஸ்: பில்கேட்ஸை பொருத்தவரை வெற்றியின் கொண்டாட்டத்தைவிட, தோல்வியின் பாடங்களுக்கு செவி சாய்ப்பது முக்கியமாக இருந்தது. மைக்ரோசாப்ட் எனும் மகத்தான நிறுவனத்தை துவக்கியவர் ஹார்வர்டு கல்வி நிலையத்தில் தனது படிப்பை பூர்த்தி செய்யாதவர். மேலும் அவர் சொந்தமாக துவக்கிய Traf-O-Data பெரும் தோல்வியாக அமைந்தது. அவரது கல்வியும் பாழானது. ஆனால், கம்ப்யூட்டர் புரோகிராமில் இருந்த ஆர்வம் காரணமாக, அவர் தொடர்ந்து முயன்று மைக்ரோசாப்ட் எனும் மகத்தான நிறுவனத்தை உருவாக்கினார்.
3. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: அறிவியல் துறையில் மகத்தான கண்டுபிடிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படும் மேதையாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விளங்குகிறார். வெற்றி என்பது தோல்வியின் முன்னேற்றம் என்றும், தோல்வி அடையாத யாரும் உண்மையில் வெற்றி பெற்ற மனிதராக முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். சிறுவயதில் அவர் பல தோல்விகளை சந்தித்திருக்கிறார். ஒன்பது வயது வரை அவரால் சரளமாக பேச முடியவில்லை. ஜூரிச் பாலிடெக்னிக் கல்லூரியில் அவரது விண்ணப்பமும் பரிசீலிக்கப்படவில்லை. ஆனால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் தனது திறமையை நிருபித்து, 1921ல் இயற்பியல் துறையில் நோபல் பரிசு வென்றார்.
4. ஆப்ரகாம் லின்கன்: இந்த மகத்தான மனிதரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்திருக்கிறார். 2831ல் வர்த்தகத்தில் அவர் தோல்வி அடைந்தார். 1836ல் அவர் நரம்பியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டார். 1856ல் அவர் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். எனும் தொடர்ந்து முயன்றவர் 1862ல் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
5. ஜே.கே.ரவுளிங்: அதிகம் விற்பனையாகும் ஹாரி பாட்டர் கதை வரிசையை எழுதிய புகழ் பெற்ற எழுத்தாளரான ஜேகே.ரவுளிங், ஹார்வர்ட் நிகழ்ச்சியில் பேசும் போது, தனது தோல்விகள் பற்றி பேசியிருக்கிறார். தனது மணவாழ்க்கை தோல்வி மற்றும் வேலையில்லாமல் தனிமையில் வாழ்ந்தது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். வாழ்க்கத்துணை இல்லாமல், வேலையும் இல்லாத தனிமையில் அவர் எழுத்தாளராக புதிய வாழ்க்கையை துவக்கினார். அவரது படைப்புத்திறன் பெரும் புகழை பெற்றுத்தந்தது.
6. மைக்கேல் ஜோர்டன்: விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த கூடைப்பந்து வீரர்களில் ஒருவராக மைக்கேல் ஜோர்டன் விளங்கினார். சிறு வயதில் அவர் உயரம் குறைவாக இருந்ததால், அணியில் தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் அவர் கூடைப்பந்து வீரர் போல ஆடத்துவங்கி போது, அவர் பல முறை தோல்வியை தழுவி இருக்கிறார். அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தாலும், ஈடுபாடு மற்றும் விடாமுயற்சியால் அவர் மகத்தான வீரராக உருவானார்.
7. வால்ட் டிஸ்னி: வரலாற்றின் புகழ் பெற்ற கார்டூன் படைப்பாளியாகவும், மிக்கி மவுஸ் மற்றும் டொனால்டு ட்க் ஆகிய புகழ் பெற்ற பாத்திரங்களை உருவாக்கியராக வால்ட் டிஸ்னி அறியப்படுகிறார். ஆனால் அவர் வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்திருக்கிறார். ராணுவத்தில் சேர முயல்வதற்காக அவர் படிப்பை பாதியில் நிறுத்தினார். அவரது லாப் ஓ கிரம எனும் நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்தது. பின்னர் மிசவ்ரி நியூஸ்பேப்பரில் வேலைக்குச் சேர்ந்த போது படைப்பாற்றல் இல்லை என நீக்கப்பட்டார்.
8. வின்செண்ட் வான் காக்: உலகின் மிகச்சிறந்த ஓவியர்களில் ஒருவராக வான்கா கருதப்படுகிறார். ஆனால் பல்வேறு சோதனைகள் மற்றும் மன நிலப் பிரச்சனைகள் காரணமாக அவர் 37 வது வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். தனது வாழ்நாளில் அவர் ஒரு ஓவியத்தை தான் விற்க முடிந்தது என்றாலும், அது அவரை கலை உலகில் நிலை நிறுத்தியது.
9. ஸ்டீபன் கிங்: புகழ் பெற்ற எழுத்தாளரான ஸ்டீபன் கிங் வாழ்க்கையில் பல சோதனைகளை அனுபவித்திருக்கிறார். சிறுவயதில் மிகுந்த வறுமையில் நாட்களை கழித்தார். பின்னர் போதை பழக்கத்திற்கும் அடிமையானார். ஆனால் எழுத்தில் கவனம் செலுத்தத் துவங்கி புகழ் பெற்ற எழுத்தாளராக உருவானார்.
10. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்: புகழ் பெற்ற இயக்குனரான ஸ்பீல்பெர்க் தனது வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்தவர். பள்ளியில் அவர் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அதன் பிறகு தனது கலை ஆர்வத்தால் சிகரம் தொட்டார்.
முடிவு:
வெற்றி என்பதுவிடாமுயற்சி மற்றும் தீவிர கவனத்தால் கிடைப்பதாகும். இந்த சாதனை மனிதர்களின் வாழ்க்கை கதைகள் வெற்றிப்பாதையை நோக்கி உங்கள் ஊக்குவிக்கும்.
ஆங்கில கட்டுரையாளர்: புல்கித் தாகூர்| தமிழில்-சைபர்சிம்மன்
பொறுப்புத்துறப்பு : ‘வாசகர் பங்களிப்பை ஊக்குவிக்கும் யுவர் ஸ்டோரியின் மை ஸ்டோரி கீழ், பயனாளி ஒருவர் எழுதிய கட்டுரை இது. கட்டுரையில் உள்ள கருத்துகள், எழுதியவருடையது, யுவர்ஸ்டோரியின் கருத்துகள் அல்ல.