தொடக்க நிறுவன நிறுவனர்கள் சென்னையில் கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’
பொங்கல் நம் தமிழர் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் ஒரு பண்டிகையாகும். இயற்கை அன்னை அளித்த விளைச்சலுக்கு நாம் செலுத்தும் நன்றியாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை அங்கீகரிக்கும் வகையில் சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்று கூடி இந்த ஆண்டு பொங்கலை கொண்டாட முடிவெடுத்துள்ளனர்.
‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’, சென்னை தொடக்க நிறுவனர்களை ஒருங்கிணைக்கும் ஒரு திருவிழா. இது ஒருவருக்கொருவர் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், தங்களின் தொடர்புகளை விரிவடையச் செய்யவும் நடத்தப்படும் நிகழ்வு ஆகும். ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் உள்ள பலதுறை நிறுவனங்களை பற்றி அறிந்து கொள்ளவும் இது உதவும். சுமார் 120 ஸ்டார்ட்-அப்’கள் இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.
சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் வருகிற 12 ஆம் தேதி ஜனவரி மாதம் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ விழா நடைப்பெற உள்ளது. இதில் தமிழர் விளையாட்டுகளான பம்பரம், கோலி, பாண்டி, நொண்டி, கபடி நிறுவனர்கள் இடையே நடத்தப்படும். பொங்கல் சமைப்பது, துடும்பாட்டம் மற்றும் தமிழ் பாரம்பரிய உணவுகள் பங்கேற்பாளர்களுக்கு இவ்விழாவில் வழங்கப்படும்.
ஸ்டார்ட்-அப் பொங்கல்’ விழாவில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனர்கள் உடனடியாக கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். நுழைவுக் கட்டணமாக ரூ.100 அளித்து உங்கள் டிக்கெட்டை பெறுங்கள். இவ்விழாவை பற்றி தொடக்க நிறுவன நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வலைத்தளம்: Startup Pongal , www.facebook.com/startuppongal
டிகெட் பெற: Startup Pongal Register
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: Mr.Suresh - 97109 31622 or Mr.Praveen - 89392 15686