இரவில் நல்ல தூக்கம் வருவதற்கு உதவும் 8 வழிகள்!
நல்ல தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இரவில் நல்ல தூக்கம் வர இந்த எட்டு வழிகளை முயற்சிக்கவும்.
ஆரோக்கியத்தில் தூக்கத்தின் இடம் சுவாரஸ்யமானது. தூக்கம் மீது அதிகக் கவனம் செலுத்தப்பட்டாலும், இதன் உடன்சார் தன்மை பற்றி இன்னமும் போதிய கவனம் தேவைப்படுகிறது. நீங்கள் தூக்கம் தொடர்பான பல கட்டுரைகளை வாசித்திருக்கலாம் அல்லது அனைத்து விதமான பரிந்துரைகளையும் முயற்சித்துப்பார்த்து இன்னமும் தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு விடை தெரியாமல் இருக்கலாம்.
தூக்கம் தொடர்பான அடிப்படை அம்சங்களைத் தெரிந்து கொள்வது, தூக்கம் வருவதற்கான வழிமுறைகளை நல்ல பலன் அளிக்க உதவும். தூக்கத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான முக்கிய அம்சங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
1. ஸ்மார்ட்போன் கட்டுப்பாடு
தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம் சஞ்சலமான மனது தான். தூக்கம் வராத போது, ஸ்மார்ட்போனில் உள்ள நோட்டிபிகேஷன்களை பார்ப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும்.
ஒளியை கண்டதும் உங்கள் மூளை காலை நேரத்து ஹார்மோன்களை தூண்டி விடுகிறது. எனவே, மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் பலன் இருக்காது. போனை சைலண்ட் மோடில் வைத்திருப்பது பலருக்கு பலன் தந்துள்ளது.
ஏனெனில், உங்கள் உள் மனது போனில் உங்களை தொடர்பு கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்துள்ளது. எனது கிளையன்ட்களில் பலர் போனை ஏரோபிளேன் மோடில் வைத்திருப்பதால் நல்ல பலன் பெற்றுள்ளனர். போனை எடுத்து நோட்டிபிகேஷன்களை பார்க்க வேண்டும் எனும் தூண்டுதலை கட்டுப்படுத்துங்கள்.
2. மாலையில் மோதல்கள் வேண்டாம்
மாலை நேரத்தில் வாக்குவாதம், அல்லது மோதலில் ஈடுபடும் போது உங்கள் மன நிலை பாதிக்கப்பட்டு உளவியல் தாக்கம் ஏற்படலாம். இதிலிருந்து முழுமையாக அமைதி பெறுவது கடினம்.மாலை நேரத்து மோதல்களை தவிர்ப்பது நல்லது.
பணியிடத்தில் இத்தகைய சூழல் ஏற்பட்டால், மறுநாள் காலை அது பற்றி பேசலாம் என மென்மையாக தெரிவிக்கவும். குடும்பத்தில் விவாதம் ஏற்படும் நிலை இருந்தால் கொஞ்சம் தொலைவு நடந்துவிட்டு வரலாம்.
3. உணவு பழக்கம்
காலை உணவை தவறவிடுவது, மாவுச்சத்து மிக்க மதிய உணவு அல்லது இரவு நேரத்தில் பலமான உணவும் தூக்கத்தை பாதிக்கலாம். வழக்கமான உணவுப் பழக்கத்தை மாற்றும் போது, ஜீரண அமைப்பில் அழுத்தம் உண்டாகி, தூக்கத்தின் மீது தாக்கம் செலுத்தலாம்.
காலை உணவை எடுத்துக்கொள்வதில் சிக்க இருந்தால், எளிய புரத சத்தை நாடலாம். காலை உணவை தவறவிட்டால் மதிய உணவில் காய்கறி மற்றும் புரதம் அதிகம் இருக்க வேண்டும்.
4. மாலையில அரோமாதெரபி
அரோமாதெரபி மிகவும் பிரபலமாக உள்ளது. நீங்களும் முயற்சித்துப்பார்க்கலாம். எனது கம்ப்யூட்டர் மற்றும் விரிப்பில் சில துளி லேவண்டர் மனத்தை தெளித்துக்கொள்வேன். இரவு தூங்குவதற்கு முன் மனம் அமைதியாக இருப்பதை உணரலாம். இந்த எளிய வழியை முயற்சித்து பார்க்கவும்.
5. காலையில் உடற்பயிற்சி
மாலை நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்தால் தூக்கத்தின் மீது தாக்கம் இருக்கலாம். காலை நேரம் தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற நேரம். காலையில் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாவிட்டால், சூரிய அஸ்மனத்திற்கு முன் உடற்பயிற்சி செய்யவும். யோகா, நடைப்பயிற்சி போன்ற மிதமான செயலிகளில் ஈடுபடலாம்.
6. எண்ணெய் குளியல்
சிறுவயதில் நீங்கள் இதன் பலனை அனுபவித்திருக்கலாம். கடுகு எண்ணெய் பூசிக்கொண்டு சூடான் நீரில் குளிப்பது அமைதியான மனநிலை அளிக்கும். இதன் பிறகு நல்ல தூக்கம் பெறாமல் இருப்பது கடினம்.
7. மன அமைதிக்கு வழி
இசை கேட்பது அல்லது நகைச்சுவை படம் பார்ப்பது உங்களுக்கு மன அமைதி தரலாம். இது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.
மோசமான தூக்கம் மற்றும் தொலைக்காட்சியில் பார்க்கும் தூண்டிவிடும் உள்ளடக்கத்திற்கு தொடர்பு இருக்கிறது. எனவே உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடவும்.
8. தூய்மையான படுக்கையறை
பலரது படுக்கையறை அலங்கோலமாக இருக்கலாம். அறை முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடக்கலாம். இந்த காட்சி மனதிலும் தாக்கம் செலுத்தும். மனம் அமைதி அடைவதை இது தடுக்கும். எனவே படுக்கையறையை சுத்தமாக வைத்திருப்பது நல்லது.
ஆங்கில கட்டுரையாளர்: தீபா கண்ணன்
(பொறுப்பு துறப்பு: கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை எழுதியுள்ளவரின் கருத்துகள். யுவர்ஸ்டோரியின் கருத்தை பிரதிபலிப்பவை அல்ல.)