இரண்டு நிமிட விதி டு சபல சமாளிப்பு - உங்களின் அட்டகாச ரொட்டீன் வாழ்க்கைக்கு 11 டிப்ஸ்!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடும் தினசரி பழக்க வழக்கங்களை மேம்படுத்த உதவும் எளிதான 11 குறிப்புகள் இங்கே...
நாம் அன்றாடம் எவற்றை ஆக்கபூர்வமாகச் செய்கிறோம் என்பதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் முக்கியம். ஆக்கபூர்வமாகச் செயல்படும் திறனை வழக்கத்துக்குக் கொண்டு வருவது என்பது தியானம் போன்றது.
உங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, சாதனையுடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடும் தினசரி பழக்க வழக்கங்களை மேம்படுத்த உதவும் எளிதான 11 குறிப்புகளை இங்கே வழங்குகிறோம்.
நமக்கு எல்லா விதமான ரொட்டீன்களுமே நாளடைவில் அலுப்பை ஏற்படுத்துவது இயல்புதான். உதாரணமாக, வாக்கிங் போகலாம் என்று ஆரம்பித்தால் 2-3 நாட்களுக்கு ஆவேசமாகப் போவோம்; பிறகு இடைவெளி விழும். அப்புறம் பழக்கமே விட்டுப் போகும். இப்படித்தான் அலுப்பு என்பது நம் வாழ்க்கையை தீர்மானித்து விடுகிறது.
ஆனால், படிப்படியாக சிறிய மாற்றங்களைச் சேர்ப்பது ஒன்றை அடையக் கூடியதாகவும் நிலையானதாகவும் ஆக்குகிறது. பழக்கத்தை சீராகவும் ஒழுக்கமாகவும் கடைப்பிடிக்க உங்களுக்கு வழிகாட்டுவதற்காக பிரபல தொழில்முனைவோர் அங்கூர் வாரிகோ பரிந்துரைத்த 11 படிகள் இதோ...
1. மெதுவாகத் தொடங்குங்கள்
ஒரே இரவில் கடுமையான மாற்றங்களைச் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் அட்டவணையில் சிறிய மாற்றங்களைச் செயல்படுத்தினால், அது உங்கள் மனதையும் உடலையும் மாற்றியமைக்க அனுமதிக்கிறது. உதாரணமாக, நீங்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனால், முடியவில்லை என்றால், பல மாதங்களில் நீங்கள் விழிக்க வேண்டிய நேரத்தை அடையும் முயற்சியில் தினசரி வழக்கத்தை விட பத்து நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்திருங்கள்.
எடுத்த எடுப்பிலேயே தினமும் 8 மணிக்கு எழுந்திருக்கும் நீங்கள் திடுமென 4 மணிக்கோ, 5 மணிக்கோ எழுந்திருக்க முடியாது. ஆகவே, முதலில் ஏழரை மணிக்கு எழுந்திருப்பது என்று தொடங்கி, படிப்படியாக உயர்த்தி உங்கள் இலக்கை எட்ட வேண்டும்.
2. முன்னேற்றத்தை அளவிடுக
மகிழ்ச்சி என்பது இலக்கை அடைவதில் அல்ல; அதை நோக்கிய பயணத்தில்தான் உள்ளது. தினசரி வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு பக்கத்தைப் படிப்பதன் மூலம் தொடங்கி, படிப்படியாக அளவை அதிகரிக்கவும். உந்துதல் பெற வேண்டுமெனில், இதில் உங்கள் முன்னேற்றத்தை ஆவணப்படுத்தவும்.
3. இரு நிமிட விதி
ஒரு புதுப் பழக்கத்தை தொடங்குவது என்பது சவாலானது. தினமும் ஒரு புதிய பழக்கத்துக்கு இரண்டு நிமிடங்களை ஒதுக்குவதன் மூலம் தொடங்குங்கள். இந்த அணுகுமுறை உங்கள் அட்டவணையையோ அல்லது மன உறுதியையோ ஆட்கொள்ளாமல் பழக்கத்தில் உங்களை எளிதாக்குகிறது.
4. சபலங்களைத் தொகுத்தல்
புதிய பழக்க வழக்கங்களுடன் சுவாரஸ்யமான செயல்பாடுகளை இணைத்து, வழக்கமாகச் செய்யும் செயல்களை மகிழ்ச்சிகரமானதாக மாற்றவும். எடுத்துக்காட்டாக, ‘நீங்கள் யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராம் பார்ப்பது பெரிய சபலமாக இருக்கிறது; இது பெரிய இடையூறாக உள்ளது காரியத்தைக் கெடுத்துவிடுகிறது’ என்றால் யூடியூபிலோ, இன்ஸ்டாவிலோ வித்தியாசமான வேறு உள்ளடக்கங்களை தேர்வு செய்து பார்க்கலாம்.
உதாரணமாக, இதன் மூலம் கற்றுக் கொள்வதை ஒரு பழக்க வழக்கமாக்கிக் கொண்டு, அறிவு சம்பந்தமான உள்ளடக்கங்களை காண்பதன் மூலம் கற்றலுடன் பொழுதுபோக்கை இணைக்கும் வகையில் கல்வி உள்ளடக்கத்தையும் பழக்கமாகச் சேர்த்துக் கொள்ள முடியும்.
5. பழக்க வழக்கங்களை இணைத்தல்
புதிய பழக்கங்களை உங்களிடம் ஏற்கெனவே உள்ள பழக்கங்களுடன் இணைக்கவும். இந்த இணைப்பு புதிய நடைமுறைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பை உருவாக்குகிறது. ஏனெனில், அவை ஏற்கெனவே உள்ள உங்கள் நடத்தைகளின் இயல்பான நீட்டிப்புகளாக மாறும்.
6. வாரம் என்பது வெல்வதற்கே!
ஒவ்வொரு நாளையும் நிறை முழுமையாக்குவதை இலக்காகக் கொள்வதற்குப் பதிலாக, சீரான பயனுள்ள வாரத்தைக் கொண்டிருப்பதில் கவனம் செலுத்துங்கள். வாரம் முழுவதும் வெவ்வேறு செயல்பாடுகளை பூர்த்திச் செய்யுங்கள். இதன்மூலம் தினசரி அழுத்தத்தை குறைக்கலாம். அதே நேரத்தில் மாறுபட்ட மற்றும் விரிவான தனிப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்யவும் முடியும்.
7. உங்களுக்கு நீங்களே பரிசு வழங்குவீர்!
மகிழ்ச்சியான செயல்பாடுகள் அல்லது விருந்துகளில் ஈடுபடுவதன் மூலம் சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள். இந்த நேர்மறை வலுவூட்டல் உங்கள் புதிய வழக்கத்தை பின்பற்றுவதை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் அனுபவத்தை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குகிறது.
8. வெளிப்படுத்துங்கள்
உங்கள் புதிய பழக்கங்களை பொதுவெளியில் அறிவிக்கவும். இந்தப் பிரகடனம் உங்களைப் பொறுப்புக்குள்ளாக்குவதோடு, உங்கள் வழக்கத்தில் உறுதியாக இருப்பதற்கு வெளிப்புற உந்துதல் என்னும் மூலத்தையும் வழங்குகிறது.
9. அர்ப்பணிப்பு
உங்கள் புதிய பழக்க வழக்கங்களில் நிதி ரீதியாக அல்லது உணர்ச்சி ரீதியாக முதலீடு செய்யுங்கள். இந்த முதலீடு பொறுப்புணர்வை உருவாக்குகிறது. உங்கள் அர்ப்பணிப்பைப் பின்பற்ற உங்களைத் தூண்டும்.
10. நெகிழ்வுடன் இருங்கள்
நடைமுறைகள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமே தவிர, கட்டுப்படுத்தக் கூடாது. எப்போதாவது உங்கள் வழக்கத்திலிருந்து விலகிச் செல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதைப் புரிந்துகொண்டு இணக்கமாக இருங்கள். முக்கிய விஷயம் என்னவென்றால், காலப்போக்கில் உங்கள் பழக்கத்துக்கு நீங்கள் திரும்புவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
11. விளைவை மனத்திரையில் காணுங்கள்
உங்கள் அன்றாடத்தை வடிவமைக்காததன் விளைவுகளையும், அப்படி ஒரு ரொட்டீனை நாம் பழக்கப்படுத்திக் கொள்வதால் ஏற்படும் தாக்கத்தையும் மனக்கண் முன் கொண்டு வந்து பாருங்கள். இப்படி மனக்கண் முன்னால் காட்சிப்படுத்திப் பார்ப்பது தெளிவு மற்றும் உந்துதலை வழங்குகிறது. உங்கள் அன்றாட பழக்க வழக்கங்களைக் கட்டமைக்கும் முயற்சிகளுக்கு உந்து சக்தியாக செயல்படுகிறது.
மூலம்: Nucleus_AI
எதற்கு முன்னுரிமை? - உணவு முதல் பழக்கங்கள் வரை 2023ல் மனநலனுக்கு 10 டிப்ஸ்!
Edited by Induja Raghunathan