தாவிர உணவுகளை சாப்பிடும் முன் அதன் சாதக, பாதகங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
பலரும் இன்று தாவிரம் சார்ந்த உணவை நாடுகின்றனர். தாவிர உணவு, யோகா வாழ்க்கை முறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆயுர்வேத மருத்துவர்களும் தாவிர உணவை வலியுறுத்துகின்றனர்
சரியான முறையில் பின்பற்றினால் தாவிர உணவு மகத்தான அணுகுமுறையாக இருக்கும். இந்த அணுகுமுறைக்கு மாறுவதற்கு என்ன தேவை என்பதை பார்க்கலாம். இதில் எங்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
தாவிர உணவின் பலன்கள்
தாவிர உணவுக்கு மாறும் போது, வேகன் உணவு மற்றும் முழுமையான தாவிர உணவிற்கு இடையிலான வேறுபாட்டை அறிவது அவசியம். விலங்கு உணவை தவிர்க்கும் எல்லா உணவும் வேகன் உணவாக அமையலாம். ஆனால் அது ஆரோக்கியமானதாக தான் இருக்க வேண்டும் என்றில்லை.
விலங்கு உணவுக்கு மாறாக, அதிக நச்சு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுக்கு மாறும் போது வேகனாக இருந்தாலும் ஆரோக்கியமற்றதாக அமையலாம். அதே நேரத்தில், பதப்படுத்தப்பட்ட உணவைத்தவிர்த்து, தாவிர உணவுகளில் இருந்து ஊட்டச்ச்சத்து பெறுவது நல்ல பலன் அளிக்கும்.
தாவிர உணவு அளிக்கும் பலன்கள் வருமாறு:
1. இருதய நோய் தொடர்பான பலன்
தாவிர உணவுக்கு மாறுவது நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆகிசிடென்ட்களை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை இரண்டுமே இருதய நோய் தடுப்பு மற்றும் நிர்வாகத்தில் பலன் தருகின்றன.
2. புற்றுநோய் பாதுகாப்பு
தாவிர உணவுப் பழக்கம் பல வகையான புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கக் கூடியது. நார்ச்சத்து அதிகரிப்பது நச்சு நீக்கத்திற்கு உதவுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
3. சிறுநீரக மேம்பாடு
இயற்கையாகவே அமிலத்தன்மை சார்ந்த உணவுக்கு மாறுவது மற்றும் தாவிர உணவை அதிகம் எடுத்துக்கொள்வது நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது. ஆனால், பல தாவிர புரதங்கள், ஆக்ஸலேட் மற்றும் புரீன்கள் கொண்டிருப்பது ஏற்கனவே அதிக யூரிக் அமிலம் இருந்தால் பிரச்சனையாகலாம்.
4. ஊட்டச்சத்துகள்
பல வகை வண்ணம் கொண்ட காய்கறிகளை உள்ளடக்கிய தாவிர உணவு, உடலில் ஆண்டிஆகிஸிடெண்ட் தன்மையை அதிகமாக்கக் கூடியது. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்வது உடல் ஆற்றலையும் மேம்படுத்தும்.
5. நீண்ட ஆயுள்
ஒரு சில ஆய்வுகள் தாவிர உணவு நீண்ட ஆயுள் தருவதாக தெரிவிக்கின்றன. ஆயுர்வேத முறை எப்போதுமே இந்த அம்சத்தில் கவனம் செலுத்துகிறது. தாவிர உணவுகள் அதிகரிக்கும் போது, கொழுப்புச்சத்து குறைவது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
பாதகமான பலன்கள்
ஆனால் எந்த உணவுப் பழக்கமும் எதிர்மறையான பாதிப்பையும் கொண்டிருக்கும். தாவிர உணவை நாடுபவர்கள் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்களும் இருக்கின்றன.
1. அதிக மாவுச்சத்து
தாவிர உணவு அதிக மாவுச்சத்து கொண்டதாக அமைகின்றன. அதிலும், சரியான முறையில் கடைப்பிடிக்காத போது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். பெரும்பாலான தாவிர புரதங்கள் மாவுச்சத்தும் கொண்டிருப்பதால் ஆரோக்கியக் குறைபாடு கொண்டவர்களுக்கு சிக்கலாகலாம். அதிக மாவுச்சத்து மற்றும் குறைந்த நார்ச்சத்து கொண்டிருந்தால் இரத்த சர்க்கரையை பாதித்து, மனநிலை மற்றும் தூக்கத்தையும் பாதித்து, கவலையை அதிகரிக்கும்.
தாவிர உணவு அதிக FODMAP தன்மை கொண்டிருக்கலாம். இவை சரியாக ஜீரணமாவதில்லை. இதனால் ஏப்பம், வாயுக்கோளாறு போன்ற பிரச்சனை ஏற்படலாம்.
2. க்ளூட்டன் பாதிப்பு
தாவிர உணவு, அதிக தானியங்கள் கொண்டதாக இருந்து, பழங்கள், காய்கறிகள் குறைவாக கொண்டிருந்தால், க்ளூட்டன் அதிகரித்து பாதிப்பு உண்டாகும். இதனால் ஜீரணக் கோளாறு ஏற்படலாம். மோசமான ஜீரணம், நோய் எதிர்ப்பு அமைப்பிலும் தாக்கம் செலுத்தும். நச்சு நீக்கம் குறைவது வேறு பல ஆரோக்கியக் குறைவுகளையும் ஏற்படுத்தலாம். சிறுகுடல் புண்ணாகி இருக்கும் போது ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் பாதிக்கும்.
3. அதிக ஆக்ஸலேட்
ஊட்டச்சத்துக்கு எதிரான ஆக்ஸலேட் மைடோகாண்ட்ரியா செயல்பாட்டை பாதிக்கலாம். ஆக்ஸ்லேட் மூலக்கூறுகள் தாவிரத்தில் இருப்பதால உடலில் உற்பத்தி செய்யப்படலாம். இவை உடலில் அதிகம் இருக்கும் போது, கால்சியம் உருவாக்கும் கிரிஸ்டில்களை பாதித்து வலியை உண்டாக்கலாம். இதனால் உடல் ஆற்றலும் பாதிக்கப்படலாம்.
தானியங்களைக் குறைத்து, ஆகஸலேட் அதிகம் உள்ள பாதம், வேர்கடலை, சில பழங்களை உட்கொள்ளும் போது வலி உண்டாகி, யூரிக் அமிலமும் அதிகமாகலாம்.
உணவை சுழற்சி முறையில் உட்கொள்வதே சிறந்தது. அதிகமாக இல்லாத வரை எந்த உணவும் பிரச்சனை இல்லை.
4. ஊட்டச்சத்து சவால்
தாவிர உணவால், குறிப்பிட்ட வகை ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகலாம். omega-3 உட்பட EPA and DHA, vitamin A, D, B12, zinc மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட குறைபாடு உண்டாகலாம்.
பீட்டா காரோடினை ரெடினாலாக மாற்ற முடியாதவர்களுக்கே வைட்டமின் ஏ குறைபாடு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனில் ஆரஞ்சு உணவு ஏற்றது. ஆனால் இது எல்லோருக்கும் ஏற்றது இல்லை. இவர்கள் ஆல்கா ஆயில் துணை உணவை நாடலாம். தாவிர உணவுப் பழக்கம் கொண்ட எல்லோருக்கும் பி-12 பிரச்சனை இருக்கலாம். ஒரு சிலர் ஊட்டச்சத்து மிக்க ஈஸ்ட்டால் பலன் பெறலாம்.
துத்தநாகம் குறைவாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். இரும்புச்சத்து குறைப்பாட்டையும் கவனிக்க வேண்டும்.
ஆங்கில கட்டுரையாளர் : தீபா கண்ணன்