இந்தியாவின் முதல் கை மாற்று அறுவை சிகிச்சையால் இரு கரங்களையும் பெற்ற 19 வயது பெண்!
19 வயது ஷ்ரேயா சித்தானகெளடா, கடந்த ஆண்டு ஒரு விபத்தில் தன் இரு கரங்களையும் இழந்தார். இந்தியாவில் முதன்முறையாக கைகளின் மேல் பாகத்தை மாற்றுக்கை கொண்டு இணைக்கும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, இரு கைகளையும் பெற்றுள்ளார் இஞ்சினியரிங் மாணவியான ஷ்ரேயா.
ஷ்ரேயா; சுமா மற்றும் ஃபகிர்கெளடாவின் ஒரே மகள். அவர் டாட்டா மோட்டார்ஸ், புனேவில் பணிபுரிகிறார். செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு புனேவில் இருந்து மங்களூருவில் உள்ள தன் கல்லூரிக்கு பஸ் மூலம் வந்துகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார் ஷ்ரேயா. அப்போது பேருந்து கவுந்ததில் அவரின் இரு கைகளும் நசுங்கிப்போனது. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டும் அவரின் இரு கைகளும் முட்டிக்கு கீழ் வெட்டி எடுக்கப்பட்டது.
”என் மொத்த உலகமே தலைகீழ் ஆனது. எனக்கு நடந்ததை என்னால் நம்பமுடியவில்லை. மன ரீதியாக ஒருசில வாரங்களில் என்னை தேற்றிக்கொண்டாலும், என் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும், நண்பர்களின் அரவணைப்பும் என்னை என் துயரத்தில் இருந்து மீட்டது. இந்தியாவில் கை மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்படுவதாக என் அம்மா என்னிடம் சொன்னபோது எனக்கு தெம்பும், மன தைரியமும் பிறந்தது,” என்றார் ஷ்ரேயா.
நான்கு மாதம் கழித்து, ஷ்ரேயா செயற்கை கைகளை பயன்படுத்தி பார்த்தார் ஆனால் அதில் அவருக்கு திருப்தி இல்லை ஏனெனில் எல்லா வேலைகளையும் அந்த கையுடன் அவரால் செய்யமுடியவில்லை. கை கொடையாளிக்காக காத்திருந்த ஷ்ரேயாவிற்கு ஆகஸ்ட் மாதம் நல்ல செய்தி வந்தது.
சச்சின் என்ற 20 வயது இளைஞர் எர்னாகுலத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்தார். இருச்சக்கர வாகனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தலையில் அடிப்பட்டு இறந்தார் சச்சின். அவரின் பெற்றோர்கள் சச்சினின் கைகளை கொடை அளிக்க முன்வந்தனர்.
ஷ்ரேயாவின் உடலும் அந்த கைகளை ஒப்புக்கொண்டு நல்ல முன்னேற்றம் கண்டது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது பிசியோதெரபி செய்து வருகிறார்.
அறுவைசிகிச்சை செய்த Dr.மோஹித் சர்மா கூறுகையில்,
“ஷ்ரேயா விரல்கள், முட்டு மற்றும் தோள்பட்டை அசைவுகளில் பிசியோ எடுத்து வருகிறார். முட்டி அசைவுகளும் ஒரு சில வாரங்களில் தொடங்கிவிடும். அவரின் 85 சதவீத கை அசைவுகள் ஒன்றரை ஆண்டுகளில் அவருக்கு கிடைத்துவிடும்,” என்றார்.
இந்த அறுவைசிகிச்சை கொச்சி அமிர்தா இன்ஸ்டிடூடில், Dr. சுப்ரமணிய ஐயர், பிளாஸ்டிக் சர்ஜன் தலைமையில் நடைப்பெற்றது.
கைகளின் மேல் பகுதி மாற்று சிகிச்சை இந்தியாவில் இதுவே முதல் தடவை ஆகும். ஏன் ஆசியாவிலேயே முதல்முறை எனலாம். இதுவரை உலகிலேயே 9 முறை மட்டுமே கை மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரை : Think Change India