Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை மேலும் குறைவு - தீபாவளிக்கு பிறகு தொடரும் ஆறுதல்...

தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, ஆபரணத் தங்கத்தின் தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை மேலும் குறைவு - தீபாவளிக்கு பிறகு தொடரும் ஆறுதல்...

Saturday November 02, 2024 , 2 min Read

தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 குறைந்து ரூ.7,385-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் சவரன் ரூ.63,120-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (2.11.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.7,370 ஆகவும், சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.58,960 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.8,040 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.64,448 ஆகவும் இருக்கிறது.
gold

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (2.11.2024) 1 கிராம் வெள்ளி விலை ரூ.106 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,06,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனையாகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தையொட்டி, தங்கம் விலை கடந்த 8 நாட்களில் சவரனுக்கு ரூ.1,400 வரை அதிகரித்தது. தற்போது, தங்கத்தின் தேவை ஓரளவு குறைந்துள்ளதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்றே குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,370 (ரூ.15 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,960 (ரூ.120 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,040 (ரூ.16 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,448 (ரூ.128 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,370 (ரூ.15 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,960 (ரூ.120 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,040 (ரூ.16 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,448 (ரூ.128 குறைவு)


Edited by Induja Raghunathan