சரக்கு வண்டி ஓட்டிப் பிழைக்கும் தேசிய விருது பெற்ற பாக்சிங் வீரர்!
ஏழ்மையான பின்னணியில் பிறந்து பாக்சிங் கில் சாம்பியனாக உயர்ந்த முர்னால் சிங்கின் நம்பிக்கைக் கதை
ஜனவரி 2015 மிருனால் போசலுக்கு மிகவும் விஷேசமான மாதமாக இருந்தது. பயிற்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது பாக்சிங் வாழ்க்கையில் இடைக்கால தடை, தரக்குறைவான பயற்சி வசதிகள், பொருளாதார நெருக்கடி, ஆனால் இத்தனைக்கும் மத்தியில் மிருனால் போசல் தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த கதாநாயகனை எங்கு சந்தித்தோம்..? உலகத் தரமான பயிற்சி வசதிகள் உள்ள இடத்திலா? இல்லை. தேசிய போட்டியில் பதக்கம் வென்று கெளரவிக்கப்பட வேண்டிய சாம்பியனாக இல்லாமல் அவர் புனேயில் சரக்கு வண்டி ஓட்டி தன் பிழைப்பை நடத்தி வருகிறார் மிருனால். அதுதான் விரும்பத் தகாத உண்மை.
நம் இந்தியா ஒருபோதும் சாதனை ஆட்டக்காரர்களுக்கு அனுசரணையாக இருந்ததில்லை. கிரிக்கெட் ஆட்டக்காரன் நடசத்திர அந்தஸ்து பெறுவது போல் அல்லாமல் பிற ஆட்டக்காரர்களும், விளையாட்டு வீரர்களும் எண்ணற்றத் தடைகளைக் கடந்து தான் வரவேண்டியுள்ளது.
போட்டியில் விருது பெற்றால் அரசாங்க வேலை கிடைக்கும் என்று தரப்பட்ட வாக்குறுதி காற்றில் கரைந்து போனது. தனது அன்றாடத் தேவைகளைச் சமாளிக்க ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறார். குத்துச் சண்டைப் போட்டி அடிக்கடி விபத்து நடப்பதற்கு வாய்ப்புள்ள ஒரு விளையாட்டு. அவர் தோல்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மிருனால்.
மிருனால், ஆறுபேர் உடைய ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா ராணுவப் பட்டறையில் ஒரு கூலித்தொழிலாளி, அம்மா வீட்டைப் பராமரிப்பவர். அவரது இரண்டு அக்காக்களுக்குத் திருணம் ஆகி விட்டது. ஒரு தங்கை இந்தியன் போலீஸில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதனால் போலீஸ் பயிற்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார். இத்தனை கஷ்டங்களுக்கும் மத்தியில் மிருனால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் தன் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்.
அவரது நம்பிக்கைகள் குறித்தும் எதிர் கொள்ளும் தடைகள் குறித்தும் யுவர்ஸ்டோரி மிருனாலிடம் பேசியது.
கிரிக்கெட் மிகவும் ஆடம்பரமானதா?
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எந்த லட்சியும் இல்லாமல் பொழுதை வீணாகக் கழித்துக் கொண்டு திரிந்தேன். நான் எனது சக்தியை விளையாட்டிலோ அல்லது நாட்டியத்திலோ செலவிட்டு சாதிக்கும் எண்ணம் கொண்டிருப்பதாக நினைத்தார்கள் என் பெற்றோர். நான் விளையாட்டைத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். ஆனால் கிரிக்கெட் பயிற்சிக்குத் தேவையான பேட், ஹெல்மட், பேட் போன்ற சாதனங்களை வாங்குவதற்குரிய பணத்தை என் குடும்பத்தினரால் செலவழிக்க முடியாது.
அப்படியானால் மிருனால் பாக்சிங்கை ஏன் தேர்ந்தெடுத்தார். ? மிருனால், 12 வயதாக இருக்கும் போது அவரது குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர் ஒருவர் பாக்சிங்கைத் தேர்ந்தெடுக்குமாறு ஆலோசனை கூறினார். ஏனென்றால் அதுதான் அதிக செலவு பிடிக்காத ஒரு விளையாட்டு. அதில் சாதித்து விட்டால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை ஊட்டினார். 12 வயதே ஆனாலும் மிருனால் மிகவும் உற்சாகத்துடன் பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டார். அந்த வயதிற்கே உரிய வேகத்துடன் பயிற்சியில் ஆர்வம் காட்டியது மட்டுமில்லாமல் இதில் இருக்கும் சாத்தியங்கள் குறித்து பிறரிடம் உரையாடித் தெரிந்து கொண்டார்.
தனக்கான பாதையை முறையாகத் தெரிவு செய்து கொண்டதும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டார். நேரு ஸ்டேடியத்தில் உள்ள மகாராஷ்ட்ரா ஸ்போர்ட்ஸ் & கேம்ஸ் இன்ஸ்டிடியூட்டில் (காலஞ்சென்ற) டி.ஜே. நாயக்கை நெறியாளராகக் கொண்டு பயிற்சியைத் தொடர்ந்தார். கெடுவினையாக நிகழ்ந்த ஒரு பைக் விபத்தில் கால் முறிந்து பயிற்சிக்கு தடை போட வேண்டிய கட்டாயம் 2008 இல் ஏற்பட்டது. 2010 இல் மிருனாலின் உடல் நலம் தேறிய போது ஜூனியர் போட்டிக்கு உரிய வயதைக் கடந்து விட்டார் அவர்.
ஏற்கனவே காலுடைந்த நிலையில் இருந்த மிருனாலுக்கு இந்த விஷயத்தைக் கேட்டதும் எதிர்காலமே இருண்டு விட்டது போலாகி விட்டது. உணர்வுகள் அனைத்தும் வடிந்து விட்டது போலானது. தொடர்ந்து பிரபலமான பாக்சர்கள் மனோஜ் குமார் (குறைந்த எடைப்பிரிவில் 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்), விஜேந்தர் சிங் (2008 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்) ஆகியோரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் மிருனாலுக்கு அளவில்லாத ஊக்கத்தையும், வழிகாட்டுதலையும் அளித்தனர். தீவிரமான ஈடுபாட்டுடன் சீனியர் பிரிவில் களம் இறங்க முடிவு செய்தார். அது எப்படி..?
கைக்கெட்டும் தொலைவில் விருது. வாழ்க்கை சற்றே மேம்பட்டது. ஆனால் முழுவதுமாக அல்ல.
நம் மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியான தேசிய சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்றதைப் பற்றிக் கேட்டோம். மிருனால் கூறிய பதில் "நான் போதிய தயாரிப்புடன் இருந்தேன். நான் விருதை வென்று போட்டி அரங்கை நோக்கி முன்னேற முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருந்தேன். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக இருந்தேன். போட்டியைச் சந்திக்கவுள்ள ஒவ்வொருவர் மனதிலும் அச்ச உணர்வு இருந்தது. ஆனால் எனக்கு அந்தப் பயமே இல்லை. நான் ஜெயித்தே ஆக வேண்டு என்ற உற்சாக மனோநிலை தான் இருந்தது. பொருளாதார நிலைத்தன்மைக்காகவும், எனது கலையை நெறிப்படுத்துவதற்காகவும் நான் போட்டியில் வென்று அரசு வேலையை அடைந்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தேன். இந்தியன் ரயில்வேயில் இருந்து வந்திருந்த ஒரு குழுவைப் பார்த்தேன். பயிற்சிக்கு அவர்களுக்குப் போதுமான நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. தங்கள் பயிற்சியில் கவனம் குவிப்பதற்கான அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. எனவே நான் போட்டியில் வென்று ஒரு அரசாங்க வேலையில் அமர்ந்து ஒவ்வொரு விளையாட்டாளனுக்கும் உள்ள கனவான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதற்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன்’’.
தேசியப் போட்டியில் சாம்பியன்ஷிப் வென்றால் தனது கஷ்டங்கள் அனைத்தும் விடைபெற்று விடும் என்று நினைத்தார் மிருனால். ஆனால் கெடுவினையாக ஒவ்வொரு முறை அவர் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போதும் உனக்கு வயதாகி விட்டது என்று கதவை மூடி விடுகிறார்கள். மிருனால் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கிறார் ஏனென்றால் அவரது விளையாட்டிற்கான கஷ்டங்கள் இன்னமும் தீர்க்கப்படவில்லை.
ஓய்விற்கு இன்னமும் நான் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது
தனது கனவைத் தக்க வைத்துக்கொள்ள மிருனால் இன்று சரக்கு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார். குறித்த நேரம் என்றில்லாத இந்த வேலை ஒரு பாக்சிங் பயிற்சியாளனுக்குப் பொருத்தமானதல்ல. பல நேரங்களில் பயிற்சி எடுக்க முடியாத அளவிற்கு அலுப்பாக இருக்கும். ஆனால் அவருக்குள் எரிந்து கொண்டிருக்கும் பொறி அவரது சலிப்பெண்ணத்தை தீய்த்து விட்டு ஒவ்வொரு நாளும் கனவை நோக்கித் துரத்திக்கொண்டே உள்ளது.
இதற்கிடையில் தனது இளநிலைப் பட்டப் படிப்பும் முடித்துள்ளார். போட்டிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் படிப்புடன் மோதிக் கொண்டிருந்துள்ளார் மிருனால். அவரது மூத்த ஆட்டக்காரர்களும், நலன் விரும்பிகளும் படிப்பும் முக்கியம் என்று வலியுறுத்தி வந்ததால் பட்டம் பெற்றிருப்பதாக கூறுகிறார்.
பலரும் நான் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று கூறி வந்தாலும் என்னால் தேர்வில் கலந்து கொள்ள முடியாமல் போய்விடும். ஏனென்றால் போட்டி நாளும் தேர்வு நாளும் ஒன்றிற்கொன்று முட்டிக்கொள்ளும். இந்த அக்டோபரில் எழுத வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு வழியாக தேர்வை எழுதி முடித்து விட்டேன். நான் சர்வ தேச அளவில் விளையாட்டில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் எனக்கு வேலை அவசியம். வேலைக்குப் பட்டம் அவசியம். அதனால் பட்டம் பெற்று விட்டேன். எனக்கு வழிகாட்டிய அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
பிரச்சனைகளுடன் உழலுதல்
பிற விளையாட்டுக்களை விட கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மற்றவற்றிற்கு அடிப்படையான தேவைகள் கூட தரப்படுவதில்லை. ஐபிஎல் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. நிறைய பணத்தை வாரியிறைக்கிறார்கள். அதன் மீது ஏற்றி வைக்கப்பட்ட கவர்ச்சியாலும், நமது கும்பல் கொண்டாட்ட மனோபாவத்தாலும் வடிவமைக்கப்பட்ட அவ்விளையாட்டு இளந்திறமையாளர்களை எளிதில் வசப்படுத்திக் கொள்கிறது. மிருனால் கூறுகிறார் "மக்கள் கிரிக்கெட் குழுக்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.ச்ஆனால் விளையாடுவதில்லை. இருந்தாலும் அவர்களுக்குப் பொருளாதார உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே போன்ற உதவி பாக்சிங் மாதிரியான விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை. மற்ற விளையாட்டுக்கள் மாற்றாந்தாய்ப் பிள்ளையாகவே கவனிக்கப்படுகின்றன. இந்த நிலையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்றும் மற்ற விளையாட்டுக்களுக்கு சமமான மரியாதை கிடைக்கும் என்று நம்புகிறேன். அத்தகைய மாற்றங்களுக்காக நான் எதுவும் செய்யா விட்டாலும் வரவிருக்கும் ஆண்டுகளில் மாற்றங்கள் நிகழும் என்று கருதுகிறேன். அதனால் யாராகிலும் பிறர் பயனடைவார்கள். நான் பட்ட கஷ்டங்கள் பிறர் படாதிருந்தால் அதைப்பார்த்து மனநிறைவு அடைவேன்.’’
அரசாங்கம் விளையாட்டு வீர ர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசியபோது "இதுவரையில் எந்தப் பணக்காரராவது பாக்சிங் விளையாட்டிற்கு ஆதரவு அளித்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..?’’ என்று நம்மிடம் கேட்டார் மிருனால். இத்துறையில் உள்ள பெரும்பாலானவர்கள் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். அவர்களுக்குப் போதிய பொருளாதார ஆதரவு கிடைப்பதில்லை என்பதால் விரைவிலேயே விளையாட்டு மீதான ஆர்வத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். அவர்களது வாழ்க்கை நெருக்கடி விளையாட்டைத் தொடர அனுமதிப்பதில்லை. அரசாங்கம் இந்தச் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. வருமானம் குறைந்த விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கான திட்டங்கள் ஏதேனும் செய்தாக வேண்டும்.
மேலும் கூறுகிறார் முர்னால், "நான் பயிற்சி பெறும் இடம் மிகவும் சிறியது. அங்கு போதுமான பயிற்சி சாதனங்கள் கிடையாது. தங்களது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கும் கூட ஆதரவு தருவதற்கு ஒருவரும் முன்வருவதில்லை. இத்துறையில் தேர்ந்த முன்னணி மாஸ்டர்களும் கூட பலர் தங்கள் யதார்த்த வாழ்க்கையின் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் ஆர்வத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சர்வதேச அளவில் போட்டிகளில் வெற்றியை ஈட்டக் கூடிய திறமையாளர்கள் நம் நாட்டில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அவரகள் தங்களது குடும்பத்தின் வயிற்றுப் பாட்டிற்கு என்ன செய்வது..?’’
ஒரு மனிதனுக்குச் சின்ன சின்ன விஷயங்களே தூண்டுகோலாக இருக்கின்றன. அதிலும் என்னைப் போன்ற விளையாட்டு வீரனுக்கு பயிற்சிச் சாதனங்கள், ஓடுவதற்கான ஒரு ஜதை இவையே போதுமானது. பயிற்சி சாதனப் பற்றாக்குறையும், பொருளாதார நிலைத் தன்மை இன்மையும், விபத்திற்குப் பின்னர் மருத்துவ உதவியின்மை ஆகிய மூன்று முக்கிய காரணங்களால் பலர் விளையாட்டுத் துறையை விட்டே விலகி விடுகின்றனர். மிருனாலுக்கு தோள்பட்டை மூட்டு விலகியுள்ளது . அதற்கு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர் தனது விளையாட்டு ஆர்வத்தை விட்டுவிடுவார் என்று சிலர் நினைக்கலாம், ஆனால் அதுதான் நடக்காது, முர்னால் மாறுபட்ட உலோகத்தால் உருவாக்கப்பட்ட மனிதர்.
நான் கனவு கண்டுள்ளேன்
முர்னாலின் பயிற்றுனர் இறந்த பிறகு அவரிடம் பயின்ற முர்னால் வயதில் மூத்தவர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார். பயிற்றுனர்கள் வருகை தராதபோது சிறுவர்களுக்குப் பயிற்சி தர விரும்புகிறார் முர்னால். "ஐந்து வயதுப் பிள்ளைகள் முதற் கொண்டு எங்களது கிளப்பில் பயிற்சிக்கு வருகிறார்கள். என் மீது பாசத்துடன் இருக்கிறார்கள். நான் அவ்வப்போது கிளப்பிற்கு வராத நாட்களில் பிள்ளைகளின் பெற்றோர் நீங்கள் ஏன் பயிற்சிக்கு வரவில்லை என்று கேட்கிறார்கள். அது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது’’ என்கிறார்.
"எனக்கு உதவிகள் புரிந்த மனோஜ் குமார் என்னுள் வழிபாட்டுச் சின்னமாக உறைந்து விட்டார். இப்போது என்னை மகாராஷ்ட்ரா மக்களுக்கு மட்டுமல்ல. இந்திய நாடெங்கும் மக்கள் என்னை அறிந்து வைத்திருக்கிறார்கள். மனோஜ் குமார் எனக்குச் செய்த உதவியை நான் பிறருக்குச் செய்ய வேண்டும்’’. அதன் தொடர்ச்சியாக நாம் அவரைக் கேட்டோம் ‘’நீங்கள் சொந்தமாக பயிற்சி மையம் துவக்கி அதில் பயிற்றுனராகப் போகிறீர்களா..?’’ அதற்கு அவர் அளித்த பதில் நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. இல்லை. இந்தக் கிளப்பில் தான் எனது பயிற்றுனர் எனக்குப் பயிற்சி அளித்தார். நான் இங்கே தான் பயிற்றுனராக இருக்க விரும்புகிறேன். அவருக்கு ஒரு கனவு இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலே இறந்து விட்டார். அவரது பாதையில் சென்று அவர் கனவை நினைவாக்குவேன்’’ என்றார்.
எந்தப் பக்கமிருந்தும் உதவி கிடைக்கும். அதுதான் நமது நம்பிக்கையும். ஒவ்வொரு நாளும் ஸ்பான்சர் கொடுப்போரின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார் முர்னால். ஓட்டப் பயிற்சிக்கு ஒரு ஜோடி ஷூ வாங்க முடியாத அடிப்படை வசதிக்காக அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. அடுத்த முறை ஏதாவது ஒரு சர்வதேசப் போட்டியில் நம்விளையாட்டு வீரர்கள் ஒரு சிறு தவறு செய்து விட்டால் அது பற்றிப் புகார் பேசிக் கொண்டு இருக்காதீர்கள். அப்படியான வெட்டித் தனமான பேச்சுக்கள் ஒரு பகுதி தனித்திற ஏழை விளையாட்டாளர்களின் நம்பிக்கையைப் பாழாக்கி விடும். ஒரு நேர ஐந்து நட்சத்திர விருந்திற்கான செலவு ஒரு குத்துச் சண்டை வீரனின் கையுறைக்கான விலையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்தியாவின் முன்னணி குறு கடன் உதவி அமைப்பான ‘மிலாப்’ குத்துச் சண்டைக்கான பார்வையாளர்களைத் திரட்டுபவர்களுக்கு நிதி உதவி செய்கிறது. தனது பாக்சிங் செலவுகளுக்குப் பணம் திரட்ட முர்னாலுக்கு உதவி செய்கிறது மிலாப். நீங்களும் கூட இங்கே சிறிது உதவி செய்யலாம்.
ஒவ்வொரு பாக்சரும் தன் நாட்டிற்குப் பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்று கனவு காண்பான். முர்னாலின் கனவும் அதுதான்.
"நான் நீண்ட நாட்கள் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு வசதியான வாய்ப்பை வழங்கும் அரசு வேலை வேண்டும் எனக்கு. அது கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் நான் தொடர்ந்து விளையாடிக் கொண்டு தான் இருப்பேன். நான் சிறிதளவு ஸ்பான்சர் பெற்றாலும் போதும் அது என் பொருளாதார நெருக்கடிகளை துடைத்து எடுத்துக்கொண்டு போய்விடும். சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்க என்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறேன். இனியும் தொடர்ந்து செய்வேன். என் தேசத்தின் கொடியை மேலும் மேலும் உயர்த்திப் பிடிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்வேன்".