Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Dine.in உணவு டெலிவரி நிறுவனத்தை கையகப்படுத்தியது தொழில்முனைவு நிறுவனம் ஜீனி!

தோல்வியிலிருந்து மீண்டெழுந்து வளர்சியை நோக்கி பயணிக்கும் இளம் தொழில்முனைவர்கள் தொடங்கிய நிறுவனம் ‘Genie' 

Dine.in உணவு டெலிவரி நிறுவனத்தை கையகப்படுத்தியது தொழில்முனைவு நிறுவனம் ஜீனி!

Tuesday February 06, 2018 , 2 min Read

வாழ்க்கையில் ஒரு இலக்கை எடுத்துக்கொண்டு, அந்த இலக்கையே வாழ்கையாக மாற்றிக் கொண்டால் வெற்றியை தடுக்க முடியாது. இது கொஞ்சம் திரைப்பட வசனம் போன்று தெரிந்தாலும், விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கி பயணிப்பவர்களின் பலரது வெற்றிப்பயணம் இப்படித்தான் அமைந்திருக்கும். 

கடந்த வருடம் மூடல் வரை சென்ற தொழில்முனை நிறுவனமான ஜீனி, அதிலிருந்து மீண்டது மட்டுமல்லாமல் வளர்ச்சிப் பாதையின் ஒரு கட்டமாக மற்றொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும் கையகப்படுத்தியுள்ளது. சென்னையின் முதல் உணவு டெலிவரி தொழில்முனை நிறுவனமான Dine.in 'டைன்.இன்' என்ற நிறுவனத்தை முற்றிலுமான பங்கு ஒப்பந்த அடிப்படையில் கையகப்படுத்தியுள்ளனர் ஜீனி நிறுவனர்கள்.

டைன்.இன் என்ற ப்ராண்ட், 25 பேர் அடங்கிய குழு, டெலிவரி, உணவகக் கூட்டு, கால் சென்டர் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்து செயல்பாடுகளும் இனி ஜீனி நிறுவனத்துடன் இணைகிறது.

image


சவால்களின் படிப்பினைகளை செயல்படுத்தி டெலிவரி மாடலை மாற்றியமைத்ததுடன், மேம்படுத்தப்பட்ட டெலிவரி முறை மற்றும் தொழில்நுட்பத்தில் சிறிய மாற்றங்கள் என தனது இராண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஜீனி நிறுவனம். கடந்த ஆறு மாதங்களின் சீரான வளர்சியை சந்தித்துள்ளதாக கூறுகிறார் இணை நிறுவனர் ஸ்ரீகேஷ் க்ரிஷ்னன். 

மாதா மாதம் பத்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆர்டர்கள், அதை செயல்படுத்த நூறு டெலிவரி ஆட்கள் மற்றும் எங்களின் வணிக கூட்டு ஒப்பந்தங்கள் இரட்டிப்பு என கடந்த மாதங்களில் எங்கள் நிறுவனம் பரபரப்பாகவே இயங்கியுள்ளது,

என பகிரும் ஸ்ரீகேஷ் ஜீனி செயலியின் தோற்றம் மற்றும் செயல்பாட்டிலும் மாற்றங்களை செய்துள்ளதாக கூறுகிறார். 

செயல்பாடு

ஜீனி மூன்று விதமான சேவை முறையை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்காக பொருட்களை வாங்குதல், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு டெலிவரி செய்தல் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான டெலிவரி மேற்கொள்ளுதல். டைன்.இன் கையக்கத்தின் மூலம் தங்களது வாங்குதல் சேவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்லும் என்கின்றனர் ஜீனி நிறுவனர்கள். 

image


ஜீனியின் வாங்குதல் சேவை அவர்களின் மொத்த வணிகத்தில் நாற்பது சதவீதமகும். இதில் குறிப்பிடத்தக்க அளவு உணவு டெலிவரி. டைன்.இன் கையகப்படுத்துதல் மூலம் நம்பகதன்மையான உணவு நிறுவங்களின் கூட்டு மட்டுமின்றி எங்களின் வருவாயும் உயரும் என தெரிவிக்கின்றனர்.  

வினோத் சோர்டியா என்பவரால் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது டைன்.இன். கடந்த ஆறு ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்ட உணவகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு சென்னை முழுவதும் டெலிவரியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 2017 ஆண்டில் மாதத்தில் 6000 ஆர்டர்கள் வரை செய்து வந்துள்ளனர். இந்நிறுவனத்தில் மிதுன் சன்செட்டி முதலீடு செய்துள்ளார். இவர் தற்போது ஜீனி நிறுவனத்தில் மென்டராக செயல்படுவார்.

டைன்.இன் நிறுவனத்தின் உணவக கூட்டு மற்றும் ஆர்டர் மதிப்பு இவையுடன் ஜீனி நிறுவனத்தின் விரைவான டெலிவரி மற்றும் வாடிக்கையாளர்காளின் சேவை இணைவது வெற்றியின் இணை மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கும் உயரிய சேவைக்கு வழி வகுக்கும்,

எனக் கூறுகிறார் மிதுன் சன்செட்டி.  

எதிர்காலம்

இனி நீங்கள் விரும்பும் எந்த உணவகத்திலிருந்தும் ஆர்டர் செய்ய இயலும் என்பதால் ஜீனி சேவை மேலும் விரிவடையும் என கூறுகின்றனர் ஜீனி நிறுவனர்கள். "தற்போதுள்ள 250-க்கும் மேற்பட்ட உணவகத்துடன் உறவை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதன் பின்னர் அடுத்த கட்ட வளர்சிக்கான செயல்திட்டம் இருக்கும்," என பகிர்கிறார் ஸ்ரீகேஷ். மேலும் இந்த வருடத்தில் சென்னையின் மேலும் பல இடங்களில் சேவையை விரிவு படுத்துதல் மற்றும் சென்னை தவிர இரண்டு நகரத்தில் சேவையை தொடங்குதல் என இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் தெரிவித்தார்.

சந்தை

மார்கன் ஸ்டான்லீ அறிக்கையின் படி இந்தியாவின் உணவு டெலிவரி சந்தை $19 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஊபர் நிறுவனம் ஊபர் ஈட்ஸ் என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒலா நிறுவனம் ஃபூட் பாண்டா நிறுவனத்தை வாங்கியது என இந்த சந்தையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இது தவிர ஜொமாட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனத்தின் வளர்ச்சியையும் கணக்கிட்டால் உணவு டெலிவரி சந்தை விறுவிறுப்பாகவே இருக்கக் கூடும் என எதிர்பார்க்கலாம்.

வலைதளம்