Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

8% வளர்ச்சிக் கணிப்பு; சுப்பிரமணியத்தின் தனிப்பட்ட கருத்து என IMF மறுப்பு!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 விழுக்காடாக இருக்கும் என்று ஐ.எம்.எஃப். அல்லது பன்னாட்டு நிதியத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியமன் கூறியிருந்தார். இது பன்னாட்டு நிதியத்தின் கணிப்பு அல்ல சுப்பிரமணியத்தின் தனிப்பட்ட கருத்து என்று பன்னாட்டு நிதியம் மறுத்துள்ளது.

8% வளர்ச்சிக் கணிப்பு; சுப்பிரமணியத்தின் தனிப்பட்ட கருத்து என IMF மறுப்பு!

Saturday April 06, 2024 , 1 min Read

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 விழுக்காடாக இருக்கும் என்று ஐ.எம்.எஃப். அல்லது பன்னாட்டு நிதியத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியமன் கூறியிருந்தார். இது பன்னாட்டு நிதியத்தின் கணிப்பு அல்ல சுப்பிரமணியத்தின் தனிப்பட்ட கருத்து என்று பன்னாட்டு நிதியம் மறுத்துள்ளது.

2047ம் ஆண்டு வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8% ஆக இருக்கும் என்று கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் கூறியிருந்தார். அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசு மேற்கொண்ட நல்ல கொள்கைகளை நீட்டித்தால் இது சாத்தியம் என்று கூறியிருந்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கும் போது நல்ல பொருளாதாரக் கொள்கைகளை இரட்டிப்பாக்கி அமல்படுத்தினால் சீர்த்திருத்தங்களை மேலும் மேம்படுத்தினால் இந்தியா இங்கிருந்து 2047-ம் ஆண்டு வரை 8% வளர்ச்சியை சீராகக் கொண்டிருக்கும் என்ற ரீதியில் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

IMF Subramanian

இதைத்தான் இப்போது ஐஎம்எஃப் மறுத்துள்ளது.

பன்னாட்டு நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாக அளித்த விளக்கத்தில்,

“எங்கள் நிர்வாகக் குழு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளான நிர்வாக இயக்குனர்களை உள்ளடக்கியது. பன்னாட்டு நிதியத்தின் ஊழியர்களின் பணிகளிலிருந்து இவர்களது பணிகள் மாறுபடும். எனவே, பன்னாட்டு நிதியத்தின் இந்திய பிரதிநிதியாக சுப்ரமணியன் தெரிவித்த கணிப்புகள், முற்றிலும் அவருடைய தனிப்பட்ட கருத்து."

ஜனவரி மாதத்தில் எங்களது வளர்ச்சிக் கணிப்பு 6.5% ஆகும், இது நடுத்தரக் காலகட்ட வளர்ச்சிக் கணிப்பாகும். இது அக்டோபர் கணிப்பை விட சற்றே உயர்வு. சமீபத்திய கணிப்பு என்னவென்பதை நாங்கள் இனிதான் வெளியிடுவோம்.

ஆகவே, கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் வெளியிட்ட வளர்ச்சிக் கணிப்பு ஐஎம்எஃப்-இல் இந்தியப் பிரதிநிதியாக அவரது பங்கு சார்ந்து தனிப்பட்ட கருத்தாகும்” என்று மறுத்துள்ளது ஐஎம்எஃப்.