Fogg, Moov மற்றும் பல - ரூ.10,000 கோடி தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்த கதை!
தொழில் முன் அனுபவமோ, பாரம்பரிய பின்னணியோ, கார்ப்பரேட் பின்புலமோ இல்லாத தர்ஷன் படேல் ரூ.10,000 கோடி தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தது சாதனைக் கதையே!
வலி என்றால் ‘அவுச்’ என்ற விளம்பரத்துடன் வரும் ‘Moov’ மற்றும் கிரிக்கெட் போட்டிகளின்போது பிரபலமான விளம்பரமான ‘கியா சல் ரஹா ஹை? 'இந்துஸ்தான் மே ஃபாக் சல் ரஹா ஹை’ என்னும் ஃபாக் பாடி ஸ்ப்ரேயான ‘Fogg’ என்ற பிராண்ட் வளர்ந்த பின்னணில் தர்ஷன் படேல் என்ற தொழிலதிபரின் மூளையும் உழைப்பும் உள்ளது என்பதை எத்தனை பேர் அறிந்திருக்க முடியும்?
ரூ.10,000 கோடி சாம்ராஜ்ஜியம் கட்டமைத்த தர்ஷன் படேலின் பயணம், தொழில் - வர்த்தக உலகில் கொடி நாட்ட விரும்பும் ஒவ்வொருவருக்குமான உத்வேகக் கதையாகும்.
தர்ஷன் படேலின் வெற்றிக் கதை என்பது தொழில்முனைவோரின் புத்திசாலித்தனத்தின் உருவகமாகும். நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொள்வது எப்படி வணிக உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துக்காட்டும் கதையே அது.
வியத்தகு பிராண்ட்களின் அணிவகுப்பு
‘வினி காஸ்மெடிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Vini Cosmetics Pvt Ltd) என்ற நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் பின்னணியில் உள்ள பெரிய மூளையான தர்ஷன் படேல், இந்திய நுகர்வோர் பொருள் சந்தையில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியவர். இவர் அறிமுகம் செய்த பிராண்ட்கள் இன்று வீடுகளில் ஒவ்வொருவராலும் உச்சரிக்கப்படும் பிராண்ட்கள் ஆகும்.
தொழில் முன் அனுபவமோ, பாரம்பரிய பின்னணியோ, கார்ப்பரேட் பின்புலமோ இல்லாத தர்ஷன் படேல், தெளிவான நோக்குடனும் உறுதியுடன் எடுத்த முன்னெடுப்புதான் இன்று அவரை ஒரு பெரிய வணிக மூளையாக சமூகத்தின் கண் முன் நிறுத்தியுள்ளது.
முதலில் குடும்ப வணிகமான 'பராஸ் பார்மசியூட்டிக்கல்ஸ்' என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தை தர்ஷன் படேல் தலையாய வர்த்தகமாக, முன்னணி வர்த்தகமாக மாற்றியதே. அவர் நம் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களான Moov, Krack, Itchguard, Dermicool மற்றும் D'cold போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார். இது மில்லியன் கணக்கானவர்களுக்கு நிவாரணம் வழங்கியதோடு முன்னணி நுகர்வோர் பிராண்டாக மாறியது.
ஃபாக் அறிமுகம்
2010-ஆம் ஆண்டில் 3,260 கோடி ரூபாய்க்கு பராஸ் பார்மசியூட்டிக்கல்ஸ் விற்பனையானது, அவரது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாக இருந்தது. ஆனால், ‘இது முடிவல்ல, ஆரம்பம்’ என்றார் தர்ஷன் படேல். அவரது தொழில்முனைவுக்கான வெறி வினி காஸ்மெட்டிக்ஸை உருவாக்கியதோடு பிரபல பிராண்டான ஃபாக்-ஐ 2011-ல் அறிமுகம் செய்வதாகவும் தொடங்கியது.
கேஸ் இல்லாத நறுமண திரவியம் என்ற அளவில் ஃபாக் பெரிய வரவேற்பை பெற்றது. ஒரு பாட்டிலுக்கு 800 தெளிப்புகள் வரை பயன்படுத்துவதும் ஒரு தனித்தன்மையாக அமைந்தது. இது ஏற்கெனவே பாடி ஸ்ப்ரே சந்தையில் இருந்த போக்குகளை கலைத்துப் போட்டு உலுக்கியது.
படேலின் வெற்றிக்கு அவரது ஆழ்ந்த நுகர்வோர் குறித்த நுண்ணறிவே காரணம். நுகர்வோருடன் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொண்டார். வாடிக்கையாளர்களின் கருத்து, மாறிவரும் அவர்களது விருப்பங்களின் அடிப்படையில் தனது வணிக உத்திகளை தொடர்ந்து மாற்றியமைத்தார்.
நுகர்வோர் விருப்பத்திற்கே முன்னுரிமை என்ற அவரது அணுகுமுறைதான் அவரது பிராண்டுகளின் மாபெரும் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.
படேலின் தலைமையில் வினி காஸ்மெடிக்ஸ் இந்தியாவில் மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலும் பிரபலமடைந்தது.
அவரது தொழில் முனைவோர் பயணமும் அவரது பிராண்டுகளின் வெற்றியும் இந்திய நுகர்வோர் பொருட்களின் நிலப்பரப்பை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், அவருடைய நிகர மதிப்பை ரூ.10,000 கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளது.
தர்ஷன் படேலின் வணிக மூளை அனைவருக்கும் உத்வேகமளிப்பதோடு தொழில்முனைவோர் உலகில் புதிய புகுத்தலுக்கான முயற்சிகளையும், சாதாரணமாக இருந்த குடும்ப வர்த்தகத்தை சர்வதேச அளவுக்கு விரித்து உயர்த்தியதன் ஸ்மார்ட் வொர்க் மற்றும் ஹார்ட் வொர்க் ஆகியவற்றின் உருவகமாகத் திகழ்கிறது.
மூலம்: Nucleus_AI
அன்று வீடுவீடாக சைக்கிளில் விற்பனை ஆன Badshah மசாலா; இன்று ரூ.154 கோடி மதிப்பு நிறுவனமான கதை!
Edited by Induja Raghunathan