சிங்கப்பூர் பெண் தொழில்முனைவருடன் சேர்ந்து புதிய ப்ராண்ட் அறிமுகம் செய்யும் நடிகை நயன்தாரா!
பாலிவுட் டு கோலிவுட் வரை கொடிக்கட்டி பறந்து வரும் முன்னணி நடிகையான நயன்தாரா தனது சொந்த சருமப்பராமரிப்பு ப்ராண்ட் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளார்.
பாலிவுட் டு கோலிவுட் வரை கொடிக்கட்டி பறந்து வரும் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது புது தொழிலில் களமிறங்கியுள்ளார்.
திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் பலரும் சினிமாவைத் தவிர தங்களுக்குப் பிடித்தமான தொழிலில் முதலீடு செய்து வருகின்றனர். ஓட்டல், ஆடை, அழகு சாதன பொருட்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்கின்றனர்.
அந்த வகையில், நடிகை நயன்தாரா தனது கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் டெய்சி மோர்கன் உடன் இணைந்து அழகு சாதன ப்ராண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

9skin.in ப்ராண்ட்
நயன்தாரா ஏற்கனவே தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ’ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் தயாரித்த ‘கனெக்ட்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
அதனையடுத்து, சாய்வாலா என்ற டீ நிறுவனத்தில் முதலீடு செய்தார் நயன்தாரா. சமீபத்தில் ‘The Lip Balm Company' என்ற ப்ராண்ட் பெயரில் தயாரித்து விற்பனை செய்வதன் மூலமாக, அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் துறைக்குள் நுழைந்தார்.
தற்போது டெய்சி மோர்கன் என்ற சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தொழில்முனைவருடன் கைக்கோர்த்து சருமப் பராமரிப்பு நிறுவனம் ‘9Skin' என்கிற புதிய ப்ராண்டை தொடங்க உள்ளதாக இன்று நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் அறிவிப்பை சமூக வலைதளத்தை வெளியிட்டனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் ‘9ஸ்கின்’ அதிகாரப்பூர்வ வெளியீடு செப்டம்பர் 29, 2023 அன்று நடைபெற உள்ளது.
டெய்சி ஏற்கனவே சருமப் பராமரிப்பு சாதனங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர், நயன்தாராவின் ஸ்டார் இமேஜும், விக்னேஷ் சிவனின் படைப்பாற்றலும் இணைந்து இந்த புதிய பிராண்டின் தயாரிப்புகளை அழகு சாதனத் துறையில் யாருமே எதிர்பார்க்காத புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் நுழைவதன் மூலம், 9skin அவர்களின் இயற்கை அழகை மேம்படுத்தும் புதுமையான தோல் பராமரிப்பு தீர்வுகளுக்கான அணுகலை வழங்க உள்ளது.
கோலாலம்பூரில் நடைபெறும் இந்த ப்ராண்ட் வெளியீட்டு நிகழ்வு மூலமாக 9ஸ்கின் ஒரு உலகளாவிய தோல் பராமரிப்பு பிராண்டாக தன்னை நிலைநிறுத்த உள்ளது. டெய்சி, நயன்தாரா மற்றும் விக்கி ஆகியோர் தங்கள் தனித்துவமான தோல் பராமரிப்புப் பொருட்களை ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்துவதில் உற்சாகத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 29, 2023ல் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், குழு மலேசியாவில் ஒரு வெற்றிகரமான அறிமுகத்தை திட்டமிட்டு வருகிறது. இது தோல் பராமரிப்பு துறையில் 9ஸ்கின் ப்ராண்டிற்கு நற்பெயரை பெறா மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.