1 நாள் வருவாய் ரூ.449 கோடி: டாப் பணக்காரர் அம்பானியை ஓவர் டேக் செய்த அதானி!
இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ள அதானி, 2020ல் முகேஷ் அம்பானியை பணக்காரர் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ள அதானி, முகேஷ் அம்பானியை பணக்காரர் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருக்கிறது அதானி குழுமம். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் அதானி குழுமத்துக்கு பிரதான இடமுண்டு. வைரவியாபாரியாக தனது தொழிலைத்தொடங்கியவர், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி.
இன்று அம்பானியை பின்னுக்குத்தள்ளி அதிக பணக்காரராக முன்னேறியுள்ளார்.
குஜராத்தில் பிறந்தவர் கௌதம் அதானி. வைரவியாபாரியாக இருந்து, பிவிசி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது தொழிலை விரிவுப்படுத்தியவர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், சோலார் மற்றும் காற்றாலை மின் விநியோகம் ஆகிவற்றில் கவனம் செலுத்தியதன் விளைவாக வருவாயை பெருக்கிய அதானி இன்று இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 30.4 பில்லியன் அமெரிக்க டாலர்.
நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 19.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரது சொத்து மதிப்பில் கூடியுள்ளது. இந்த இடத்தில்தான் அதானி, அம்பானியை ஓவர் டேக் செய்துள்ளார். காரணம் நடப்பாண்டில் அம்பானி 16.4 பில்லியன் அமெக்க டாலர்களை மட்டுமே தனது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளார்.
ஆசியாவின் டாப் பணக்காரரான அம்பானியைக் காட்டிலும் அதானி முந்திக்கொண்டார்.
அதானி கடந்த பத்து மாதங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.449 கோடி என்ற வீதம் வருவாயைக் பெருக்கி சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி அதிக சொத்துகளை குவித்து வருபவர்கள் பட்டியலில் உலக அளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார் அதானி. அதோடு, உலக அளவில் பணம் படைத்த செல்வந்தர்களில் 40வது இடத்தில் ஜொலிக்கிறார் கவுதம் அதானி.
அதானிகிரீன், அதானி என்டர்பிரைசஸ், அதானி கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றின் பங்குகளின் விலை கூடியது அதானியின் இந்த வருவாய் பெருக்கத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
தகவல் உதவி: டைம்ஸ் நவ்