ஏர் இந்தியா- விஸ்தாரா நிறுவனங்களை இணைப்பதாக டாடா சன்ஸ் அறிவிப்பு!
டாடா குழுமம், தனது ஏர் இந்தியா மற்றும் விஸ்டாரா விமான சேவை நிறுவனங்களை இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
டாடா குழுமம், தனது விமான சேவை நிறுவனங்கள், விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவை ஒன்றாக இணைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த இணைப்பை அடுத்து, ஏர் இந்தியா நிறுவனம், மொத்தம் 218 விமானங்களுடன் இந்தியாவின் முன்னணி உள்நாட்டு – சர்வதேச விமான சேவை நிறுவனமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான சேவை மற்றும் இரண்டாவது பெரிய உள்நாட்டு விமான சேவை நிறுவனமாக திகழும்.

தேவையான அனுமதி கிடைத்ததும், விஸ்தாரா, ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என இது தொடர்பான நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த இணைப்பின் ஒரு பகுதியாக, எஸ்.ஐ.ஏ., நிறுவனம் ஏர் இந்தியாவில் ரூ.2,059 கோடி முதலீடி செய்யும் மற்றும் 25.1 சதவீத பங்குகளை பெற்றிருக்கும்.
இந்த இணைப்பு செயல்முறை 2024 மார்ச் மாத வாக்கில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான சேவை டாடா சன்ஸிற்கு சொந்தமான நிறுவனமான விளங்குகிறது. டாடா சன்ஸ், தனது துணை நிறுவனம் டாலஸ் மூலம், ஏர் இந்தியாவை இந்த ஆண்டு துவக்கத்தில் கையகப்படுத்தியது.
விஸ்தாரா விமான சேவை, டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிட் ( எஸ்.ஐ.ஏ) இடையிலான கூட்டு நிறுவனமாகும். இதில், 51:49 என இரு நிறுவனங்களும் பங்குகள் கொண்டுள்ளன. 2013ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்நிறுவனம், மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஐரோப்பாவில் செயல்பாடுகளை கொண்டுள்ளது.
“விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா இணைப்பு மூலம், ஏர் இந்தியா உண்மையான உலகத்தரம் வாய்ந்த விமான சேவை நிறுவனமாக உருவாகும்,” என்று டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகர் இது பற்றி கூறியிருக்கிறார்.

Edited by Induja Raghunathan