ஐபோன் தயாரிப்பில் டாடா குழுமம் இணைய உள்ளதா?
விஸ்ட்ரானை பொறுத்தவரை இந்தியாவில், பாக்ஸ்கான் மற்றும் பெக்ட்ரான் போன்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஐபோன்கள் தயாரிப்புக்கான கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்த, இந்தியாவின் டாடா குழுமம், தைவான் நாட்டின் தைபேவை தலைமையகமாகக் கொண்ட விஸ்ட்ரான் நிறுவனத்துடன், முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தி புளும்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம், தைவான் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனத்தில் குறிப்பிட்ட பங்குகளை வாங்கலாம் என கருதப்படுகிறது.
ஐபோன் தயாரிப்பில் டாடா?
Wistron நிறுவனம், ஏற்கனவே இந்தியாவில் ஐபோன் உற்பத்தி ஆலை மற்றும் ஒப்பந்த உற்பத்தியாளர்களைக் கொண்டுள்ளது. இந்த தயாரிப்பு திட்டம் குறித்து டாடா குழுமம் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், இத்தகைய பேச்சு வார்த்தை பற்றி தங்களுக்குத்தெரியாது என்று ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெண்டர்கள் மற்ற நிறுவனங்களுடன் பேசிவிட்டு தங்களிடம் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டாலும் ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
டாடா குழுமம் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனம் இரண்டுமே, இந்தியாவில் மின்னணு உற்பத்தியில் பெரிய அளவில் பங்காற்ற விரும்புகின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலை கொண்ட டாடா எலக்ட்ரானிட்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபோனின் பாகங்களை தயாரிப்பதில் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஐபோனின் மெக்கானிகல் பாகங்களை உற்பத்தி செய்வது, போனுக்கான மதிப்பு கூட்டலை 5 சதவீதம் அதிகரித்து அளிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு உதவும் என கருதப்படுகிறது. தற்போது இது 18 முதல் 20 சதவீதமாக இருக்கிறது. பிஎல்.ஐ தகுதி பெற்ற நிறுவனங்கள் திட்டத்தின் ஐந்தாம் ஆண்டில் 35 சதவீதம் மதிப்பு கூட்டலை அளிக்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால் டாடா குழுமம், ஆப்பிளின் உலகாலாவிய சப்ளை செயினில் அங்கம் வகிக்கலாம். தற்போது இந்த சப்ளை செயின் சீனாவை மையமாகக் கொண்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் சீனாவில் ஆலைகள் மூடப்பட்டதால், இந்தியா மாற்று உற்பத்தி வசதியாக ஈர்ப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மொபைல் சாதனங்களில் முக்கிய அங்கமான செமிகண்டக்டர் பரப்பிலும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறது. ஓஎஸ்,.ஏடி எனப்படும் செமிகண்டக்டர் அசம்பிளி ஆலையை அமைக்க டாடா எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
விஸ்ட்ரானை பொறுத்தவரை இந்தியாவில், ஃபாக்ஸ்கான் மற்றும் பெக்ட்ரான் போன்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஓப்பந்த நிறுவனங்கள் என்ற முறையில் பி.எல்.ஐ ஊக்க திட்டத்தின் கீழ் இவை வருகின்றன. ஃபாக்ஸ்கான் இந்தியாவில் இரண்டு நிறுவனங்களை கொண்டுள்ளது. ஒரு நிறுவனம் ஆப்பிளுக்கு தயாரிப்பில் ஈடுபடும் நிலையில் இன்னொரு நிறுவனம் ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
விஸ்ட்ரான் நிறுவனம் மேலும் பல பிரிவுகளில் இத்தகைய கூட்டை எதிர்பார்த்து செயல்பட்டு வருகிறது.
செய்தி உதவி- தி பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு
Edited by Induja Raghunathan