குறைந்த மதிப்பு பொருட்களின் விற்பனையாளர் கட்டணத்தை குறைக்கிறது அமேசான் இந்தியா!
இ-காமர்ஸ் துறையில் அதிகரிக்கும் போட்டிக்கு மத்தியில் அமேசான் இந்தியா நிறுவனம், விற்பனையாளர் கட்டணத்தில் அதிகபட்ச குறைப்பை அறிவித்துள்ளது.
இ-காமர்ஸ் துறையில் அதிகரிக்கும் போட்டிக்கு மத்தியில் அமேசான் இந்தியா நிறுவனம், விற்பனையாளர் கட்டணத்தில் அதிகபட்ச குறைப்பை அறிவித்துள்ளது.
குறைந்த பிரிவிலான 1.2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் பிரிவில் நிறுவனம் பூஜ்ஜியம் ரெபரல் கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது. 300 ரூபாய்க்கும் குறைவான பொருட்களாக இவை அமைகின்றன. பேஷன், நகைகள், மளிகை, அழகு சாதனம், சமையல் சாதனம் உள்ளிட்ட 135 வகைகளுக்கு இது பொருந்தும்.
அமேசானில் விற்பனையாகும் ஒவ்வொரு பொருளுக்கும் விற்பனையாளர் செலுத்த வேண்டிய தொகை ரெபரல் கட்டணமாக அமைகிறது. இந்த கட்டணம், 2 முதல் 14.5 சதவீதம் வரை அமையலாம். இந்நிலையில், ஏப்ரல் 1 முதல் புதிய மாற்றம் அமலுக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜீரோ கமிஷன் முறையில் செயல்படும் மீஷோவிடம் இருந்து போட்டி அதிகரிக்கும் நிலையில், அமேசான் இந்தியா இந்நடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், மளிகை தவிர பிற பிரிவுகளிலும் குவிக் காமர்ஸ் சேவைகள் பிரபலமாகி வருவதும் இ-காமர்ஸ் தளங்களுக்கு போட்டியாக அமைகிறது.
"வெற்றியில் பங்குதாரராக விளங்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். விற்பனையாளர்கள் வெற்றி பெறும் போது நாங்களும் வெற்றி பெறுகிறோம். உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியின் சாதகத்தை பெறும் போது அதை விற்பனை பங்குதாரர்களோடு பகிர விரும்புகிறோம். செலவு செயல்திறனை அடைந்திருப்பதால், விற்பனையாளர்கள் தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக்கொள்ள அதை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். எனவே, தான் இதை ஒரு விளம்பர முயற்சியாக முன்னிறுத்தவில்லை,” என அமேசான் இந்தியா, விற்பனை பங்குதாரர்கள் சேவை இயக்குனர் அமீத் நந்தா யுவர்ஸ்டோரியிடம் கூறினார்.
அதிக அளவில் விற்பனைக்கு விற்பனையாளர்களை ஊக்குவிப்பதற்காக, இந்த மாற்றி அமைக்கப்பட்ட முறையில், ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை அனுப்பி வைக்கும் விற்பனையாளர் இரண்டாவது பொருள் விற்பனை கட்டணத்தில் 90 சதவீதம் வரை மிச்சம் செய்யலாம், என அமேசான் தெரிவித்துள்ளது.
ரெபல் கட்டணம், எடை கையாளுதல் கட்டணம், முடிவு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் விற்பனையாளர் கட்டணமாக அமைகிறது.
மேலும், ஒரு கிலோவுக்கு கீழ் உள்ள பொருட்களுக்கான எடை கட்டணத்தை அமேசான் ரூ.17 ஆக குறைத்துள்ளது. ஈஸி ஷிப், செல்லர் பிலெக்ஸ் போன்ற வெளிப்புற சேவைகளை பயன்படுத்தும் விற்பனையாளர்களுக்கான கட்டணத்தையும் எளிமையாக்கியுள்ளது. தேசிய அளவில் இது ரூ.65 என துவங்குகிறது. இதற்கு முன் ரூ.77 ஆக இருந்தது.
"விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கட்டணமாக, ரெபரல் மற்றும் அனுப்பி வைக்கும் கட்டணம் அமைகிறது. இவைத்தவிர மற்ற கட்டணங்கள் சொற்பமானவை. இந்த கட்டணங்களே, விற்பனையாளர்களிடம் வசூலிக்கப்படும் மொத்த கட்டணத்தில் 90-95% ஆக அமைகிறது,” என்று நந்தா கூறினார்.
அமேசான் பெங்களூருவில், அமேசான் நவ் எனும் பெயரில் குவிக் காமர்ஸ் முன்னோட்ட சேவையை அறிமுகம் செய்வதற்கு மத்தியில் இந்த நடவடிக்கைகள் நிகழ்கின்றன. இந்த சேவை அழகு சாதனம் மற்றும் வீட்டு உபயோக பிரிவில் கவனம் செலுத்தும் எனத்தெரிகிறது.
அக்ஷிதா டோஷ்னிவால்
Edited by Induja Raghunathan