பணியிடத்தில் சக ஊழியர்களின் நம்பிக்கையை பெற உதவிடும் 10 எளிய வாக்கியங்கள்!
நீங்கள் வலுவான தொழில்முறை உறவுகளை வளர்த்துக் கொள்ள விரும்பினால், இந்த 10 சக்திவாய்ந்த வாக்கியங்களை உங்கள் அன்றாட வேலை உரையாடல்களில் இணைப்பதன் மூலம் தொடங்குவீர்.
நம்பிக்கை என்பது ஒவ்வொரு வெற்றிகரமான பணியிடத்திற்கும் மிக முக்கியமான அடித்தளமாகும். குழுக்கள் எவ்வளவு சிறப்பாக ஒத்துழைக்கின்றன, திட்டங்கள் எவ்வளவு சீராக இயங்குகின்றன, குழு தலைவர்கள் தங்கள் ஊழியர்களை எவ்வாறு ஊக்குவிக்கின்றனர் என்பதை இது தீர்மானிக்கிறது.
நம்பிக்கையை வளர்ப்பது என்பது தலைமைப் பதவிகளைப் பற்றியது மட்டுமே அல்ல, அது அன்றாட தொடர்புகள் மற்றும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை சம்பந்தப்பட்டது.
உங்கள் சக ஊழியர் உங்களை உண்மையிலேயே எப்போது ஊக்கப்படுத்தினார் என்பதை யோசித்து பாருங்கள். சரியான வார்த்தைகள் ஊழியர்களை மதிப்புடன் உணர வைக்கும், நேர்மையான உரையாடல்களை ஊக்குவிக்கும். மேலும், ஊழியர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், தவறுகளை ஒப்புக்கொள்ளவும், ஆதரவைத் தேடவும் பாதுகாப்பாக உணரும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கும்.
நீங்கள் வலுவான தொழில்முறை உறவுகளை வளர்த்துக் கொள்ள விரும்பினால், இந்த 10 சக்திவாய்ந்த வாக்கியங்களை உங்கள் அன்றாட வேலை உரையாடல்களில் இணைப்பதன் மூலம் தொடங்குவீர்.

படம்: மெட்டா ஏஐ
1) 'உங்கள் முயற்சியை நான் பார்க்கிறேன், அது வேலையில் தெரிகிறது'
மக்கள் பெரும்பாலும் முடிவுகளைப் பற்றிய கருத்துக்களைக் கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் முதலீடு செய்யும் முயற்சி பற்றிய கருத்துக்களைக் கேட்பதில்லை. விளைவு சரியானதாக இல்லாவிட்டாலும், கடின உழைப்பை அங்கீகரிப்பது நம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
எப்போது பயன்படுத்த வேண்டும்? - ஒரு குழு உறுப்பினர் ஒரு திட்டத்தை வழங்கிய பிறகு, ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு அல்லது சிந்தனைமிக்க நுண்ணறிவுகளுடன் ஒரு விவாதத்திற்கு பங்களித்த பிறகு.
2) 'எனக்கு முழுமையாக புரியவில்லை - எனக்கு உதவ முடியுமா?'
உங்களிடம் எல்லாவற்றுக்கும் பதில்களும் இல்லை என்பதை ஒப்புக்கொள்வது பணிவை காட்டும். மேலும், திறந்த, நேர்மையான உரையாடலை இது வரவேற்கிறது. இது மற்றவர்களை தான் மதிக்கப்படுவதாகவும், கவனிக்கப்படுவதாகவும் உணர வைக்கிறது.
எப்போது பயன்படுத்த வேண்டும்? - குழு விவாதங்களின் போது, கருத்துக்களைப் பெறும்போது அல்லது தவறான புரிதல்களைத் தீர்க்க முயற்சிக்கும்போது.

3) 'நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால், நானும் அப்படித்தான் உணர்ந்திருப்பேன்.'
பச்சாதாப உணர்வு நம்பிக்கையை வளர்க்கிறது. ஒருவரின் பார்வையை அங்கீகரிப்பதன் மூலம், நீங்கள் அவர்களின் உணர்வுகளை உறுதிப்படுத்துகிறீர்கள். நேர்மையான உரையாடல்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை அவர்களுக்கு உருவாக்குகிறீர்கள்.
எப்போது பயன்படுத்த வேண்டும்? - ஒரு சக ஊழியர் விரக்தியடையும்போது, ஒரு சவாலைச் சமாளிக்கும்போது அல்லது அவர் பேசத் தயங்கும்போது.
4) 'நான் ஒரு தவறு செய்துவிட்டேன், அதை நான் எப்படி சரிசெய்கிறேன் என்று பாருங்கள்.'
பழியை வேறு பக்கம் திசைதிருப்பாமல் தவறுகளைச் நமதாக்கிக் கொள்வது நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. தவறுகள் இயல்பானவை என்றும் அவற்றை சரிசெய்ய முடியும் என்றும் மற்றவர்களுக்கு உறுதியளிக்கிறது.
எப்போது பயன்படுத்த வேண்டும்? - ஒரு தவறான முடிவுக்குப் பிறகு, காலக்கெடுவைத் தவறவிட்ட பிறகு அல்லது வேலையில் தவறான புரிதலுக்குப் பிறகு.
5) 'நீங்கள் அந்தச் சூழலை மிகவும் சிறப்பாக கையாண்டீர்கள் - உங்கள் அணுகுமுறையை பாராட்டுகிறேன்.'
ஒரு சவாலை கையாள்வதில் ஒருவரின் திறமை அல்லது நுண்ணறிவை அங்கீகரிப்பது அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். உங்கள் உறவையும் பலப்படுத்தும்.
எப்போது பயன்படுத்த வேண்டும்? - சக ஊழியர் ஒரு கடினமான உரையாடல், நெருக்கடி அல்லது வேலையில் எதிர்பாராத சிக்கலைத் சரிசெய்த பிறகு.
6) 'அருமையான ஐடியா. அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை ஆராய்வோம்'
பணியிட விவாதங்களில் பல யோசனைகள் மிக விரைவாக நிராகரிக்கப்படுகின்றன. இந்த சொற்றொடர், உரையாடலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதே வேளையில் புதுமையையும் ஊக்குவிக்கிறது.
எப்போது பயன்படுத்த வேண்டும்? - அலுவலக உரையாடல்களின்போது அல்லது யாராவது ஒரு புதிய யோசனையை முன்மொழியும் போது.

படம்: மெட்டா ஏஐ
7) 'உங்கள் கண்ணோட்டத்துடன் நான் வேறுபட்டாலும், நான் அதை பாராட்டுகிறேன்!'
பணியிடங்களில் கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், இந்த சொற்றொடர் உரையாடல்கள் பெர்சனலாகவோ அல்லது மோதலாகவோ மாறுவதைத் தடுக்கிறது. இது மாறுபட்ட கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கிறது.
எப்போது பயன்படுத்த வேண்டும்? - கருத்துகள் வேறுபடும் மீட்டிங் அல்லது விவாதங்களில்.
8. 'உங்கள் முடிவை நான் நம்புகிறேன் - தொடர்ந்து செயல்படுத்துங்கள்!'
மற்றவர்கள் முடிவெடுப்பதில் நம்பிக்கை வைப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது மற்றும் மைக்ரோ மேனேஜ் செய்வதை குறைக்கிறது.
எப்போது பயன்படுத்த வேண்டும்? - மற்றவர்களிடம் பணிகளை ஒப்படைக்கும்போது அல்லது ஒரு திட்டத்தில் யாரையாவது தலைமை தாங்க அனுமதிக்கும்போது.

படம்: மெட்டா ஏஐ
9) 'நாம் இணக்கமாக இருப்பதை உறுதிசெய்வோம் - நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?'
இந்த சொற்றொடர் தவறான தகவல் தொடர்பைத் தடுக்கிறது, பரஸ்பர புரிதலை உறுதி செய்கிறது, மேலும் மற்றவர்கள் வெற்றிபெற நீங்க உதவி இருக்கிறீங்கள் என்பதைக் குறிக்கிறது.
எப்போது பயன்படுத்த வேண்டும்? - ஒரு திட்டத்தின் தொடக்கத்தில் அல்லது காலக்கெடுவிற்கு முன்.
10) 'உங்களுடன் பணிபுரிவதை நான் மதிக்கிறேன், உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்.'
நேரடியாக நன்றி தெரிவிப்பது வலுவான தொழில்முறை பிணைப்புகளை வளர்க்கிறது மற்றும் நேர்மறையான பணிச்சூழலை உருவாக்குகிறது.
எப்போது பயன்படுத்த வேண்டும்? - நேரடியாகச் சந்திக்கும்போது, குழு ஆலோசனைகளின் போது அல்லது ஒருவரின் தாக்கத்தை அங்கீகரிக்கும்போது.
பணியிடத்தில் நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிய உரைகளோ அல்லது சிக்கலான உத்திகளோ தேவையில்லை. எளிமையான சொற்றொடர்கள், நம்பகத்தன்மையுடன் பேசப்படும்போது, உறவுகளை வலுப்படுத்தும், மரியாதைக்குரிய கலாச்சாரத்தை உருவாக்கும், மேலும் ஊழியர்களை மதிக்க வைக்கும்.
நம்பிக்கை என்பது வெறும் செயல்கள் மூலம் மட்டுமே கட்டமைக்கப்படுவதில்லை. நாம் பேச தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் மூலம் அது ஒவ்வொரு நாளும் வலுப்படுத்தப்படுகிறது.
மூலம்: சானியா அகமது கான்

Edited by Induja Raghunathan