'10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை' - Blinkit நிறுவனம் அறிமுகம்!
ஜோமாட்டோவுக்கு சொந்தமான விரைவு டெலிவரி சேவை அளிக்கும், Blinkit நிறுவனம், குர்கோவன் நகரில் செயலி வாயிலாக 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவையை அழைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தாக அறிவித்துள்ளது.
ஜோமாட்டோவுக்கு சொந்தமான விரைவு டெலிவரி சேவை அளிக்கும், Blinkit நிறுவனம், குர்கோவன் நகரில் செயலி வாயிலாக 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவையை பெரும் வசதியை அறிமுகம் செய்தாக அறிவித்துள்ளது.
"நம்முடைய நகரங்களில், மிகவும் நம்பகமான மற்றும் விரைவான ஆம்புலன்ஸ் வழங்கும் பிரச்சனைக்கு தீர்வாக முதல் படியை எடுத்து வைக்கிறோம். முதல் ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் குர்கோவன் நகரில் இயங்கும்," என நிறுவன சி.இ.ஓ. ஆல்பிந்தர் தின்சா எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவசர தேவைகளின்போது பத்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும் என்றும் டிரைவர் தவிர பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர் மற்றும் உதவியாளர் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சேவைக்கான கட்டணம் பற்றி அவர் குறிப்பிடவில்லை. இது ஒரு லாப நோக்கில்லாத முயற்சி என்று தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய விலையில் இந்த சேவையை வழங்குவோம், நீண்ட கால நோக்கில் இந்த பிரச்சனைக்கான தீர்வை வழங்குவது நோக்கம், என்றும் தெரிவித்துள்ளார்.
"இந்த சேவையை கவனமாக விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் செயல்படுவோம்," என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள இரண்டாவது புதிய சேவையாக இது அமைகிறது. ஏற்கனவே, பெரிய ஆர்டர்களுக்கான டெலிவரி சேவையை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தில்லி மற்றும் குர்கோவன் நகரில் தற்போது இந்த சேவை வழங்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan