குருகிராம் நகரில் 5.50 லட்சம் சதுர அடி அலுவலக பரப்பை குத்தகைக்கு எடுக்கும் கூகுள் நிறுவனம்!
கூகுள் நிறுவனம், இந்தியாவில் குருகிராம் நகரில் 5,50,000 சதுர அடி பரப்பிலான அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அலுவலக ஒப்பந்தங்களில் ஒன்றாக இது அமைகிறது.
கூகுள் நிறுவனம், இந்தியாவில் குருகிராம் நகரில் 5,50,000 சதுர அடி பரப்பிலான அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அலுவலக ஒப்பந்தங்களில் ஒன்றாக இது அமைகிறது.
கூகுள் நிறுவனம் இந்தியாவில், தனது அலுவலக இருப்பை விரிவாக்கம் செய்து வருவதாகவும், பெரிய அளவிலான அலுவலக இடத்தை ஓராண்டாக தேடி வந்ததாகவும், எக்கானமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், குருகிராம் நகரில் டேபிள் ஸ்பேஸ் நிறுவனத்துடன் அலுவலக இடத்திற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, கூகுள் நிறுவனம் இந்த கட்டிடத்தில் உள்ள மேலும் 2,00,000 சதுர அடி பரப்பிலும் விரிவாக்கம் செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2022ல் குருகிராம் நகரில் கூகுள் நிறுவனம் 7,00,000 சதுர அடி அலுவலக பரப்பை குத்தகைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கூகுள் பெங்களூரு நகரில் 6,49,000 சதுர அடி பரப்பிலான அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல ஐதராபாத் நகரிலும் 2022ல் கூகுள் 6,00,000 சதுர அடி அலுவலக பரப்பை குத்தகைக்கு எடுத்தது.
கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது அலுவலக பரப்பை விரிவாக்கம் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதே போல, ஐபிஎம் மற்றும் சியனா உள்ளிட்ட நிறுவனங்களும் அலுவலக பரப்பை அதிகரித்து வருவதாக தெரிகிறது. இந்தியாவில் அலுவலக பரப்பு வாடகை சந்தை மிகவும் செழிப்பான வளர்ச்சி கண்டு வருவதாக இதிலிருந்து தெரிவிக்கிறது.
Edited by Induja Raghunathan