Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

‘குழந்தைகள் விலங்குகளுடன் வளர வேண்டும்’ - 25 ஆண்டுகளாக வனவிலங்குகளை பாதுகாக்கும் ஆர்வலர்!

அல்பனா பார்டியா வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் `பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்’ என்கிற என்ஜிஓ நிறுவன-டிரஸ்ட் உறுப்பினர்களில் ஒருவர்.

‘குழந்தைகள் விலங்குகளுடன் வளர வேண்டும்’ - 25 ஆண்டுகளாக வனவிலங்குகளை பாதுகாக்கும் ஆர்வலர்!

Monday December 28, 2020 , 3 min Read

அல்பனா பார்டியா விலங்குகள் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு சார்ந்து கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட்டு வரும் 'பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்’ என்கிற என்ஜிஓ நிறுவன-ட்ரஸ்டீக்களில் இவரும் ஒருவர்.


அல்பனா கொல்கத்தாவில் பிறந்தவர். பாரம்பரிய ராஜஸ்தானிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா வீட்டில் நாய் வளர்த்து வந்தார். சிறு வயது முதலே செல்லப்பிராணிகளுடன் வளர்ந்ததால் அல்பனாவிற்கு விலங்குகள் மீது தீராத காதல் இருந்து வந்தது.

1
“ஒவ்வொரு குழந்தையும் இளம் வயதிலேயே விலங்குகளுடன் வளரவேண்டும்,” என்கிறார் அல்பனா.

அல்பனா திருமணம் முடிந்த பிறகு பெங்களூருவிற்கு மாற்றலானார். செயிண்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளூற இருந்து வந்தது. அந்த சமயத்தில்தான் நண்பர் ஒருவரிடமிருந்து வந்த அழைப்பு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.


மிகப்பெரிய அரசியல் தலைவர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலரான மேனகா காந்தி விலங்குகளின் பிரச்சனைகள் தொடர்பாக ’ஹெட்ஸ் அண்ட் டெய்ல்ஸ்’ என்கிற நிகழ்ச்சியை டிவியில் நடத்தி வந்தார்.

“இந்த நிகழ்ச்சியில் வனவிலங்குகள் குறித்தும் அவற்றின் பாதுகாப்பு குறித்தும் மேனகா காந்தி பேசியதைப் பார்த்தேன். எனது ஆர்வத்திற்கு மேலும் உந்துதலளிப்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது,” என்கிறார் அல்பனா.

அல்பனாவின் நண்பர் மூலம் மேனகா காந்தி ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திலும் விலங்குகள் நல அமைப்பைத் தொடங்க விரும்புவது தெரிந்தது. பள்ளி அளவில்கூட இதை செயல்படுத்தலாம் என திட்டமிட்டிருப்பதாக அறிந்தார்.

2

எனவே மேனகா காந்தியின் நாடு தழுவிய முயற்சியின்கீழ் நம்ரதா துகர், கௌரி மைனா ஹிரா, ஆருஷி பொதார் ஆகியோருடன் அல்பனா பெங்களூருவில்பீப்பிள் ஃபார் அனிமல்’ (PfA) தொடங்கினார்.


காயம்பட்ட விலங்குகளுக்கு பராமரிப்பு மற்றும் சிகிச்சையளித்து அதன் வசிப்பிடத்திற்கே கொண்டு சேர்ப்பதே இந்த என்ஜிஓ-வின் நோக்கம். இத்தனை ஆண்டுகளில் இந்த என்ஜிஓ 200 வகைகள் கொண்ட 25,000-க்கும் அதிகமான வன விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்துள்ளது.

வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விலங்குகளின் நல்வாழ்வை உறுதிபடுத்துவது இந்த என்ஜிஓ-வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

குழந்தைகள் மனதில் பதியவைத்தார்

ஆரம்பத்தில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதில் PfA சவாலை சந்தித்தது. அந்த சமயத்தில் பெங்களூருவில் சர்க்கஸ் நடைபெற்றது. வன விலங்குகள் உட்பட பல விலங்குகள் இதில் பல்வெறு சாகசங்கள் செய்ய வைக்கப்பட்டன. விலங்குகள் இதுபோல் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை அல்பனாவும் மற்றவர்களும் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களிடம் பேசினார்கள்.


மாணவர்களிடம் இவர் கேட்கும் முதல் கேள்வி: தண்ணீர் எங்கிருந்து வருகிறது? இதற்கு சுவாரஸ்யமாக கதை போல் விவரிக்கிறார் அல்பனா.

“இந்தக் கேள்விக்கு நான் புலிகளிடமிருந்து என்று பதிலளிப்பேன். இது குழந்தைகளின் கற்பனை சக்தியை தூண்டும். சர்கஸ் நடுத்துபவர்கள் காடுகளில் இருக்கும் புலிகளை சிறைபிடித்துவிட்டால் மான்கள் சுதந்திரமாக அச்சமின்றி சுற்றித்திரிந்து மொத்த புற்களையும் மேய்ந்துவிடும். இதனால் மழை பெய்யும்போது மழைநீரில் மண் அடித்து செல்லப்படும். பெங்களூருவிற்கு தண்ணீர் விநியோகிக்கும் திப்பகொண்டனஹல்லி நீர்தேக்கம் தடைபடும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்,” என்று விவரிக்கிறார்.
3

சர்கஸில் போதிய உணவின்றி சிங்கங்கள் எலும்பும் தோலுமாக காட்சியளித்தன. இரும்பு கம்பியால் அவற்றின் உடலி சூடு வைக்கப்பட்ட காயங்கள் இருந்தன. இவற்றை புகைப்படம் எடுத்து மாணவர்களுக்கு காட்டினார். இவை குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்தன.

“சிங்கம், புலி போன்ற விலங்குகள் நெருப்பைக் கண்டு பயப்படும். இவை சர்கஸில் நெருப்பு வளையத்திற்குள் குதிக்க வைக்கப்படுகின்றன. இந்த விலங்குகள் அச்சத்தில் இப்படி செய்கிறதே தவிர விருப்பப்பட்டு செய்யவில்லை,” என்று குழந்தைகளிடம் விளக்குகிறார்.

அல்பனா தனது மகளையும் உறவினரின் குழந்தைகளையும் பெங்களூருவில் சர்கஸ் நடைபெறும் இடத்திற்குக் கூட்டிச்சென்றார். அவர்கள் முகத்தில் வண்ணம் தீட்டி, கைகளில் பேனர்களுடன் சர்கஸ் நடக்கும் இடத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பல குழந்தைகள் இவர்கள் பேசுவதைக் கேட்டு சர்க்கஸ் பார்க்காமல் வீடு திரும்பினார்கள்.

எதிர்ப்புக் குரல்கள்

1990-களில் பெங்களூருவில் வேட்டையாடுவது, விலங்குகளை பலி கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை பின்பற்றி வந்த 56 கிராமங்களுக்கு சென்றார். PfA தன்னார்வலர்களுடன் இணைந்து மிருக வதை குறித்து பள்ளி மாணவர்களுக்கும் கிராமத்து பெண்களுக்கும் விளக்கினார். முதலில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

“என் கணவரின் காரில் ஒரு முறை சென்றிருந்தேன். கிராம மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் ஆயுதங்களுடன் சாலையை மறித்தார்கள். என் காரை உடைத்துவிடுவார்கள் என்று பயந்தேன். தன்னார்வலர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து வெளியேறி அமைதியாகக் கைகட்டி நின்றார்கள். பின்னர் ஒருவழியாக கிராமமக்கள் அமைதியானார்கள்,” என்று அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் இவரது குழுவினர் தொடர்ந்து கிராமத்திற்கு சென்றார்கள். இறுதியாக மக்கள் புரிந்துகொண்டனர்.

வனவிலங்கு பாதுகாப்பு

இன்று PfA நாட்டின் மிகப்பெரிய விலங்குகள் நல அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இதன் முயற்சியால் யானைகள் பயிற்சி முகாம்கள் நிறுத்தப்பட்டன, வான்கோழி பண்ணைகள் தடை செய்யப்பட்டன, ஒட்டகங்கள் சட்ட விரோதமாக கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இப்படி பல்வேறு உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டது.


ஊரடங்கு சமயத்தில் இந்த என்ஜிஓ உணவு ஆம்புலன்ஸ் மூலம் நாய்கள், பூனைகள், மாடுகள், குதிரைகள் என எத்தனையோ உயினங்களின் பசியைப் போக்கியுள்ளது.

4

வருங்காலத் திட்டங்கள்

வனவிலங்குகளை மீட்டு மறுவாழ்வளிக்கும் நவீன மையத்தை நிறுவவும் நாடு முழுவதும் வனவிலங்குகள் மருத்துவமனைகளைத் திறக்கவும் விலங்குகளுக்கான பயிற்சி மையங்களை நிறுவவும் மாவட்ட மற்றும் கிராம அளவில் வனவிலங்கு பராமரிப்பு மையங்கள் அமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“மாற்றத்தை ஏற்படுத்த முதலில் யாராவது ஒருவர் முன்வரவேண்டும். அதற்குத் தேவையான ஆதரவு நிச்சயம் கிடைக்கும். மக்கள் உதவத் தயாராக இருக்கிறார்கள். தேவையான தீர்வுகளும் உள்ளன. பரிவுடன் நடந்துகொள்ளவெண்டும் என்பதைக் குழந்தைகள் தெரிந்துகொண்டால் வெற்றி எளிதாகிவிடும் என்று நம்புகிறேன்,” என்கிறார் அல்பனா.

ஆங்கில கட்டுரையாளர்: கனிஷ்க் சிங் | தமிழில்: ஸ்ரீவித்யா