Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அமெரிக்க நிறுவனத்தில் இன்னொரு இந்திய சிஇஓ; ஆனந்த் ஈஸ்வரன் பற்றி இதோ!

பிரான்ஸ் நாட்டின் பிரபல பேஷன் நிறுவனமான சேனல் சிஇஓவாக இந்தியரான லீனா நாயர் நியமிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், மற்றொரு இந்தியர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அமரவைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நிறுவனத்தில் இன்னொரு இந்திய சிஇஓ; ஆனந்த் ஈஸ்வரன் பற்றி இதோ!

Tuesday December 21, 2021 , 2 min Read

பிரான்ஸ் நாட்டின் பிரபல பேஷன் நிறுவனமான Chanel சிஇஓவாக இந்தியரான லீனா நாயர் நியமிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், மற்றொரு இந்தியர், அமெரிக்காவைச் சேர்ந்த பெரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அமரவைக்கப்பட்டுள்ளார்.


கூகுள் ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓவாக தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை, மைக்ரோ சாஃப்டின் சத்யா நாதெள்ளா, ஐ.பி.எம். நிறுவனத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா, அடோப் இன்கார்ப்பின் சாந்தனு நாராயண் என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் சமீபத்தில் ட்விட்டரின் பராக் அக்ரவாலும், சேனல் பேஷன் நிறுவனத்தின் லீனா நாயரும் இணைந்துள்ளனர்.


உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பெரு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் அடுத்தடுத்து இந்தியர்கள் அமரவைகப்படுவது நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

Veenam

தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 46 வயதான ஆனந்த் ஈஸ்வரன், தகவல் தொழில் நுட்ப நிறுவனமான Veeam-இன் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Veeam சாப்ட்வேர் நிறுவனம்:

அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான Veeam சாப்ட்வேர் பேக்அப், ரெக்கவரி மற்றும் டேட்டா மேனேஜ்மென்ட் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு 2006ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 4 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் ஒரு பில்லியனைத் தாண்டியுள்ளது.

Veenam

Veeam சாப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த வில்லியம் ஹெச் லார்ஜென்ட் பதவி விலகிய நிலையில் ஆனந்த் ஈஸ்வரன் தற்போது சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஆனந்த் ஈஸ்வரன்?

அமெரிக்காவில் உள்ள சியாட்டல் நகரில் நீண்ட காலமாக வசித்து வரும் ஆனந்த் ஈஸ்வரன், மும்பை பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். அதனைத் தொடர்ந்து மிசோரி - கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் இன்ஜினியரிங்க் படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றார்.


வீம் சாப்ட்வேர் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னதாகவே ஆனந்த் ஈஸ்வரனுக்கு பல நிறுவனங்களில் தலைமை மற்றும் முக்கியப் பொறுப்பு வகித்த அனுபவங்கள் உண்டு.

Veenam

இதற்கு முன்பாக ஆனந்த் ஈஸ்வரன் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுகளின் தலைவராக இருந்துள்ளார். எச்.பி., Vignette, Fair Isaac உள்ளிட்ட நிறுவனங்களில் துணைத் தலைவராக இருந்தவர். ரிங் சென்டரல் நிறுவனத்தின் தலைவராகவும், சிஇஒ ஆகவும் இருந்த அனுபவம் ஆனந்த் ஈஸ்வரனுக்கு உண்டு, மேலும், அவர் SAP, ஒபன்டெக்ஸ்ட், ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.


தற்போது ஆனந்த் ஈஸ்வரன் Veeam சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓ-வாக மட்டுமல்லாது அதன் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.


வீம் நிறுவனத்தில் இணைவது குறித்து ஆனந்த் ஈஸ்வரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

"இன்றுடன் ரிங் சென்டரல் நிறுவனத்தில் எனது அத்தியாயம் மறக்க முடியாத அனுபவங்கள் மற்றும் நீடித்த நட்புடன் முடிவடைகிறது. Veeam நிறுவனத்தின் சிஇஓ-வாக புதிய அத்தியாயத்தை உற்சாகத்துடன் தொடங்குகிறேன். நிறைய கற்கவும் வளரவும் வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
Veenam

தகவல் உதவி - டிவிட்டர் | தமிழில் - கனிமொழி