Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ஆப்பிளின் ஏஐ திறன் கொண்ட ஐபோன் 16 வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் - சிறப்பம்சங்கள் இதோ!

இந்த ஆண்டு அறிமுக நிகழ்ச்சியில், ஐபோன் 16 ப்புரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஆப்பிள் வாட்ச் 10 வரிசை, ஏர்பாடு 4 அறிமுகம் ஆகியுள்ளன.

ஆப்பிளின் ஏஐ திறன் கொண்ட ஐபோன் 16 வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் - சிறப்பம்சங்கள் இதோ!

Tuesday September 10, 2024 , 5 min Read

ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்பத்தால் உலகையே திரும்பி பார்க்க வைக்கும். ஆனால், இந்த முறை இதை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நிறுவனத்தின் ஏஐ நுட்பமான ஆப்பிள் இண்டலிஜென்சை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட புதிய ஐபோன்கள் பயனாளிகள் தங்கள் சாதனங்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது.

ஆப்பிள் வழக்கப்படி, அதன் சி.இ.ஓ.டிம் குக், இந்த நிகழ்வு குறித்து, “ஆப்பிள் பார்க் ஒளிர்கிறது” எனும் பதிவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்த ஆண்டு அறிமுக நிகழ்ச்சியில், ஐபோன் 16 புரோ மற்றும் ஐபோன் 16 புரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த முன்னணி மாதிரிகளுடன், ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் திறன் கொண்ட ஏர்பாட்ஸ் 4 ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டன.

apple

இந்த ஆண்டு ஜூனில் காட்சிப்படுத்தப்பட்ட பல ஆப்பிள் இண்டெலிஜன்ஸ் அம்சங்கள் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படும்.

ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ்

புதிய ஐபோன் 16 புரோ மற்றும் 16 புரோ மேக்ஸ் 6.3 மற்றும் 6.9 அங்குல டிஸ்பிளே கொண்டவை. ஆப்பிள் இண்டலிஜன்ஸ் திறனோடு, இவை சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே கொண்டுள்ளன. மேலும். ஆல்வேஸ் ஆன், புரோமோஷன் டெக் கொண்டுள்ளன.

இந்த புதிய போன்கள், ஆப்பிள் இண்டலிஜன்சுடன், புதிய ஏ18 சிப்கள் கொண்டவை. 3 நேனோமீட்டர் நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதோடு, இந்த சீரமைக்கப்பட்ட சிப்கள், சக்திவாய்ந்த 16 கோர் நியூரால் இஞ்ஜின் பெற்றுள்ளன. 17 சதவீத நினைவுத்திறன் பேண்ட்வித் ஆற்றலுடன், எழுதும் சேவைகள் மற்றும் இமேஜ் பிளேகிரவுண்ட் போன்றவை வேகமாக செயல்படும். 6 கோர் ஜிபியூ 20 சதவீதம் கூடுதல் வேகம் கொண்டுள்ளது. முன்பை விட 20 சதவீத மின்சக்தி பயன்பாட்டில் 15 சதவீத வேகமான செயல்பாட்டை அளிக்கிறது.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள காமிரா அமைப்பு, 48 எம்பி பியூஷன் காமிரவுடன் மேலும் செயல்திறன் வாய்ந்த குவாட் பிக்சல் சென்சார், ஆப்பிள் காமிரா இடைமுகம் கொண்டுள்ளது.

இது, டால்பி விஷனில் 4K120 fps வீடியோ பதிவுக்கு உதவுகிறது. சென்சார் தரவுகளை இரண்டு மடங்கு வேகத்தில் கையாள்கிறது. 48 எம்பி அல்ட்ரா வைடு காமிரா, ஆட்டோ போகஸ் திறனோடு, 48MP ProRAW , HEIF படம் பிடிக்கிறது. இரண்டு மாதிரிகளும், சக்தி வாய்ந்த 5x டெலிபோட்டோ காமிரா கொண்டுள்ளன. எனவே, பயனாளிகள் முதல் முறையாக மூழ்கும் உணர்வை அளிக்கக் கூடிய படங்கள், வீடியோக்களை எடுக்கலாம்.
apple

புதிய காமிரா கட்டுப்பாடு காமிரா அமைப்பை புதுமையான இடைமுகமாக மாற்றி புகைப்படம், வீடியோ எடுப்பதை மேலும் சீராக்குகிறது. டாக்டைல் ஸ்விட்ச், அதிக ஆற்றல் கொண்ட விசை சென்சார், சிறந்த டச் பேனல் ஆகியவற்றை கொண்டுள்ளது. பயனாளிகள் தங்கள் காட்சியை முன்னோட்டம் பார்த்து, ஜூம் மற்று இதர அம்சங்களை மாற்றி படம் எடுக்கலாம். ஆண்டின் பிற்பகுதியில், காமிரா கண்ட்ரோலில் இராண்டு அடுக்கு ஷட்டர் சேர்க்கப்படும். இது துல்லியத்தை மேம்படுத்தும். மேலும் பயனாளிகள், ரெஸ்டாரண்ட்கள் தொடர்பான தகவல்களை காட்சி வழியே அறியலாம் மற்றும் நிகழ்ச்சிகளை காலண்டரில் இணைக்கலாம்.

இந்த இரண்டு போன்களும், கருப்பு டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், வெள்ளை மற்றும் டெசர்ட் டைட்டானியம் ஆகிய தோற்றங்களில் வருகின்றன. 128 ஜிபி முதல் 1 டிபி சேமிப்பு கொண்டவை. ஐபோன் 16 புரோ ரூ.1,19,900 ல் துவங்குகிறது. ஐபோன் 16 புரோ மேக்ஸ்  ரூ.1,44,900 ல் துவங்குகிறது. செப்டம்பர் 13 முதல் முன்பதிவு செய்யலாம். செப் 20 ம் தேதி கடைகளில் விற்பனை செய்யப்படும்.

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ்

இந்த மாதிரிகள் தவிர, ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாதிரிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை, 6.1 மற்றும் 6.7 அங்குலத்தில் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே கொண்டுள்ளன. பெரிய பாட்டரி கொள்ளும் வகையில் மற்றும் வெப்ப திறனுக்கு ஏற்ப இவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ், ஏ18 சிப்கள் கொண்டுள்ளன. மேம்பட்ட இரண்டாம் தலைமுறை 3 நானோமீட்டர் தொழில்நுட்பத்தால் இயங்குகின்றன. மேம்படுத்தப்பட்ட 16 கோர் நியூரால் இஞ்ஜினுடன் ஏ16 போன்ற இயந்திர கற்றல் மாதிரிகளை இரண்டு மடங்கு வேகத்தில் கையாள்கிறது. இதன் 6 கோர் சிபியூ, 30 சதவீத குறைந்த மின்சக்தியில் 30 சதவீத கூடுதல் வேகம் தருகிறது. மேலும், 5 கோர் சிபியூ 35 சதவீத செயல்திறனோடு, 45 சதவீத கூடுதல் வேகம் அளிக்கிறது. கேம்கள் மற்றும் ஏஐ திறனுக்கு இது ஏற்றது.

இந்த போன்களின் புதிய காமிரா அமைப்பு, 48 பியூஷன் காமிரா கொண்டுள்ளது. 2 எக்ஸ் ஆப்டிகல் தர டெலிபோட்டோ ஜூம் திறன் அளிக்கிறது. மேம்படுத்தப்பட்ட 12 எம்பி அல்ட்ராவைடு காமிரா, ஆட்டோபோகஸ் கொண்டுள்ளது. செழுமையான படங்களுக்காக 2.6x கூடுதல் ஒளியை கையாள்கிறது.

இரண்டு மாதிரிகளும் ஸ்பேஷியல் படம் திறன் கொண்டுள்ளன. புரோ மாதிரிகளில் உள்ள காமிரா கட்டுப்பாடு அம்சங்கள் உள்ளன. இவை, அல்ட்ரா மரைன், டீல், பிங்க், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கின்றன. 128GB, 256GB, 512GB ஸ்டோரேஜுடன், ஐபோன் 16 ரூ,79,900, எனும் விலையிலும், ஐபோன் 16 பிளஸ், ரூ.89,900 விலையிலும் துவங்குகிறது. செப் 13 முதல் முன்பதிவு செய்யலாம், செப் 20 விற்பனைக்கு வருகிறது.

வாட்ச் வரிசை 10

ஆப்பிள் வாட்ச் 10 வரிசை மேலும் மெலிதாக, நேர்த்தியாக அமைந்துள்ளது. கடந்த மூன்று தலைமுறை மாதிரிகளை விட 10 சதவீதம் மெல்லியது. அதிக டிஸ்பிளே பரப்புடன்,  4 முதல் 6 வரிசையோடு ஒப்பிடும் போது 30 சதவீத கூடுதல் திரை பகுதி அளிக்கிறது. 7 முதல் 9 ம் வரிசையோடு 9 சதவீத திரை பகுதி உள்ளது. 18 மணி நேர பேட்டரி ஆயுள் அளிக்கிறது.

ஒவ்வொரு பிக்சலிலும் அதிக ஒளி தரும் வகையில் பரந்த கோணத்திலான OLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இது திரைய முந்தைய மாதிரிகளை விட 40 சதவீதம் பிரகாசமாக்குகிறது. இந்த திரை செயல்திறன் மிக்கது.

apple

புதிய S10 SiP (System in Package) மற்றும் 4 கோர் நியூரால் இஞ்ஜின், பல ஸ்மார்ட் வசதிகளை அளிக்கிறது. இரட்டை தட்டு சைகை, டிக்டேஷன் வசதி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்டேக், புதிய மொழிபெயர்ப்பு செயலி கொண்டுள்ளது. தூக்கம் தொடர்பான நோட்டிபிகேஷன் வசதி, வெப்ப நிலை சென்சிங் கொண்டுள்ளது. வாட்ச் ஓஎஸ்11 மூலம் இயங்குகிறது.

அலுமினியம் மற்றும் டைட்டானியம் பினிஷில் பல வகை வண்ணம் கொண்டுள்ளன. டைட்டானியம் கேஸ்களில், இயற்கை, தங்கம், ஸ்லேட் தோற்றங்களில் கிடைக்கிறது. ரூ.46,900, விலையில் துவங்குகிறது. செப் 20 முதல் முன்பதிவு செய்யலாம். ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்பாட் 4

apple

புதிய ஏர்பாட் 4, இரண்டு வடிவங்களில் வருகிறது. ஸ்டாண்டர்டு மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கான்சலேஷன் அம்சம் கொண்ட மாதிரிகள். புதிய ஒலி கட்டமைப்பு வசதி கொண்டுள்ளது. அதிக டைனமிக் ரேஞ்ச் ஆம்பிளிபையர் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் கொண்டுள்ளது. எச் 2சிப் மூலம் இயங்குகிறது. குரல் பிரிப்பு மற்றும் சிரி ஒருங்கிணைப்பு கொண்டுள்ளது. கூடுதல் வசதிக்காக, புதிய விசை சென்சார், வேகமாக பிரஸ் செய்து பலவித கட்டுப்பாடுகளை இயக்க வழி செய்கிறது.

மேம்பட்ட மைக், சக்தி வாய்ந்த சிப், அதி திறன் ஆடியோ ஆகிய அம்சங்களோடு விமான ஒலி போன்ற இடையூறுகளை குறைக்கிறது. மேலும், சூழலை உணரும் ஸ்மார்ட் அம்சங்கள் கொண்டுள்ளது. அருகில் இருப்பவருடன் பேசத்துவங்கும் போது ஒலி குறைகிறது.

இதன் சார்ஜிங் கேஸ், USB-C சார்ஜிங் கொண்டுள்ளது. முந்தைய மாதிரிகளை விட 10 சதவீதம் சிறியது. ஆப்பிள் வாட்ச் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம். இப்போதே முன் பதிவு செய்யலாம். செப் 20 முதல் விற்பனை துவக்கம். ரூ.12,900, மற்றும் ரூ.17,900 விலை.

மேலும், ஏர்பாட் 4 தவிர, ஏர்பாட்ஸ் மேக்ஸ், ஐந்து புதிய நிறங்களில் வருகிறது. மேக் மற்றும் ஐபேடு தோற்றம் தருகின்றன. USB-C சார்ஜிங் திறன் கொண்டுள்ளது. இந்த ஆண்டு பிற்பகுதியில் ஏர்பாட்ஸ் புரோ 2, விரிவான ஆரோக்கிய கேட்பு வசதியை அளிக்கும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கும் வகையில் அமைய உள்ளது.  

ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan