புதிய மேக்புக், எம் 2 சிப், ios16 - ஆப்பிள் அறிமுகப்படுத்தும் புதிய ப்ராடக்ட்கள் என்னென்ன?
ஐபோன், மேக்கிற்கான அப்டேட் மற்றும் கார் சார்ந்த மென்பொருளுக்கு அப்டேட்டை ஆப்பிள் அறிவித்துள்ளதோடு, அதன் எம் 2 சிப் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகளவிலான டெலவப்பர் மாநாடு (WWDC) நேற்று துவங்கியது. இந்த நான்கு நான் மாநாடு, ஆப்பிள் சாதனங்களுக்கான மென்பொருள் அப்டேட் அறிவிப்புகளுடன் துவங்கியது.
எம் 2 சிப், மேக்புக் புரோஸ் (M2Chip, MacBook Pro)
பல மாதங்களாக பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த எம் 2 சிப்பை ஆப்பிள் அறிவித்தது. ஏற்கனவே உள்ள எம் 1 சிப்பை விட இது 18 சதவீதம் மேம்பட்டதாகக் கருதப்படுகிறது. மார்ச் அறிமுகம் ஆன எம் 1 அல்ட்ரா சிப் தான் ஆப்பிளின் சக்தி வாய்ந்த சிப்பாக தொடர்கிறது.
மேலும், ஆப்பிள் புதிய 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக்புரோ லேப்டாப்பை அறிவித்தது. எம் 2 சிப் கொண்ட இந்த லேப்டாப்கள் , வெள்ளி, கிரே உள்ளிட்ட நான்கு வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளன.
iOS 16
மெசேஜ், நோட்டிபிகேஷன், ஆகியவற்றுக்கு புதிய அப்டேட்களை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களுக்கு நிகராக லாக்ஸ்க்ரீன் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாடிக்கையாளர்கள் இனி, வானிலை, ஆக்டிவிட்டி, காலண்டர் ஆகிய விட்ஜெட்களை லாக்ஸ்கிரீனில் நிறுவுவதோடு, நேரடி விளையாட்டு அப்டேட்களையும் பின் செய்யலாம்.
ஆப்பிள் பே லேட்டர்
ஆப்பிள், ’பை நவ், பே லேட்டர்’ பிரிவிலும் நுழைந்துள்ளது. அதன் புதிய வசதியான அப்பிள் பே லேட்டர், மாஸ்டர்கார்டு உள்கட்டமைப்பு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வட்டி இல்லா மாதத்தவணைகளை செலுத்தி போனை வாங்கிக்கொள்ளலாம்.
கார்பிளே அப்டேட்
2014 முதல் ஆப்பிள் ஒரு சில மாடல்களில் கார் அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது புதிய அப்டேட் மூலம், பல்வேறு கார் மென்பொருள்களில் கார்பிளேவை நிறுவ உள்ளது. இது 2023 பிற்பகுதியில் அறிமுகம் ஆக உள்ளது.
MacOS and WatchOS
புதிய மேக் ஓஎஸ், வென்சுரா எனும் பெயர் கொண்டது தற்போது மிதமான அப்டேட்களை பெற்றுள்ளது. ஸ்பாட்லைட் மற்றும் மெயில் செயலிக்கான அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஸ்டேஜ் மேனஜர் எனும் வசதியையும் ஆப்பிள் அறிவித்துள்ளது. ஐ-போன் பயனாளிகள் அதன் கேமிராவை, ஆப்பிள் கம்ப்யூட்டரில் இனி வெப்கேமாக பயன்படுத்தலாம்.
வாட்ஸ் ஓஎஸ் ஆரோக்கிய அம்சங்கள் இரட்டிப்பாகியுள்ளது. மருந்து நினைவூட்டல் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆப்பிள் வாட்ச்களுக்கான புதிய முகங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில்: தாருதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்