Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘தொழிலாளர் சந்தையை செயற்கை நுண்ணறிவு சுனாமி போல் தாக்கும்’ - ஐ.எம்.எஃப். தலைவர் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழிலாளர் சந்தையை "சுனாமி" போல் தாக்கும் என்று பன்னாட்டு நிதியம் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரித்துள்ளார்.

‘தொழிலாளர் சந்தையை செயற்கை நுண்ணறிவு சுனாமி போல் தாக்கும்’ - ஐ.எம்.எஃப். தலைவர் எச்சரிக்கை!

Wednesday May 15, 2024 , 2 min Read

செயற்கை நுண்ணறிவு தொழிலாளர் சந்தையை "சுனாமி" போல் தாக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரித்துள்ளார்.

AI என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தினால் ஏற்கெனவே தொழிலாளர் சந்தை கடும் பாதிப்புள்ளாகியுள்ளது பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அடிப்படையில், வழக்கமான பணிகளின் எண்ணிக்கையை தானியங்கியாக்குவதன் மூலம் உற்பத்தித்திறனை சூப்பர்சார்ஜ் செய்யும் திறன் கொண்ட ஒரு கருவி மில்லியன் கணக்கான மக்களை வேலையிலிருந்து வெளியேற்ற முடியுமா என்பதே செயற்கை நுண்ணறிவு எழுப்பும் அடிப்படை கேள்வி. ஒருவேளை தொழில்நுட்பத்தின் இந்த புதிய வருகையினால் ஏற்கெனவே வழக்கொழிந்த பணிகளுக்கு புதிய வடிவத்தை வழங்குமா, அதாவது, இதற்கு முன்பு வந்த தொழில்நுட்பம் போலவே என்பதும் ஒரு கேள்வி என்கிறார் ஐஎம்எஃப் தலைவர்.

christina georgia

ஜூரிச்சில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிறிஸ்டலினா ஜார்ஜீவா இது தொடர்பாகக் கூறும்போது,

“நாம் அதை நன்கு நிர்வகிப்பதன் மூலம் உற்பத்தித்திறனில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கொண்டு வர முடியும், ஆனால் தவறான தகவல்களுக்கு வழிவகுப்பதோடு நிச்சயமாக, நமது சமூகத்தில் அதிக சமத்துவமின்மைக்கும் வழிவகுக்கும்.” என்றார்.

மேலும், அவர் அந்த நிக்ழ்வில் பேசிய போது, “கடந்த ஆண்டு பெரும்பாலான பொருளாதாரங்கள் மந்தநிலைக்குச் செல்லும் என்ற அச்சம் இருந்தது, ஆனால் அது நடக்கவில்லை. மிகவும் வலுவாக நம்மைத் தாக்கிய பணவீக்கம் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சற்றே பின்னடைவைச் சந்தித்து வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொருளாதாரம் ஓரளவு சுனாமி போன்ற அழிவைத் தடுப்பதாக இருக்கலாம், ஆனால் இன்னும் சுனாமி வாய்ப்பு இருக்கவே செய்கிறது, என்றார்.

AI சகாப்தம் நம் மீது கவிந்து வருகிறது. மேலும் இது அனைவருக்கும் செழிப்பைக் கொண்டுவருவதை உறுதிசெய்வது இன்னும் நம் கையில் உள்ளது. ஏஐ பல்வேறு தொழில்களில் பரந்த அளவிலான வேலைகளை பாதிக்கும். உலகெங்கிலும் உள்ள 40% வேலைகளை AI பாதிக்கும் என்று அறிக்கை கூறுகிறது. வலுவான பொருளாதார நாடுகளில் ஏஐ ஆல் 60% பணிகள் பாதிக்கப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆயினும்கூட, செயற்கை நுண்ணறிவுத் துறை ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு வேகத்தைத் தூண்டியுள்ளது, இது ஒரு போதும் மந்தமடைய வாய்ப்பில்லை. அதற்கு மக்களை தயார்படுத்துவதற்கு நமக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது, வணிகங்களையும் அதற்குத் தயார்ப்படுத்த வேண்டும், என்றார்.

இதற்கிடையில், AI நிபுணர்களுக்கு தற்போதைய வேலை சந்தையில் அதிக தேவை உள்ளது, மில்லியன் டாலர் வரை சம்பளம் மற்றும் பிற சலுகைகளுடன் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளால் தனிப்பட்ட முறையில் செயற்கை நுண்ணறிவாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.