‘செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்புகளைப் பறிக்கும்; என் வேலையே கூட போய்விடும்’ - பில் கேட்ஸ்
AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு சாட்ஜிபிடி தன் வேலையையே பறித்து விடும் போலிருக்கிறதே என்று மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.
AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு சாட்ஜிபிடி தன் வேலையையே பறித்து விடும் போலிருக்கிறதே என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.
ஓபன் ஏஐ-யின் தலைமைச் செயலதிகாரி சாம் ஆல்ட்மேனும் பில் கேட்சும் செயற்கை நுண்ணறிவின் தற்போதைய நிலை, அதன் எதிர்காலம் ஆகியவைப் பற்றி கலந்துரையாடினர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறுகையில்,
"சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு சட்டங்கள் எவ்வாறு மாறியுள்ளன என்பது குறித்து தனக்கு நேர்மறையான ஆச்சரியமே ஏற்பட்டது," என்றார்.
ஷேக்ஸ்பியரின் எழுத்துக்கள் போன்ற சிக்கலான விஷயங்களை இந்த செயற்கை நுண்ணறிவுச் சட்டகங்கள் எவ்வாறு குறியாக்கம் செய்கின்றன என்பது தனக்கு முழுமையாகப் புரியவில்லை என்று கூறிய பில் கேட்ஸ்,
“நான் மிகவும் சந்தேகத்துடன்தான் இருந்தேன். ChatGPT இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்றார்.

“Unconfuse Me with Bill Gates” என்ற பாட்கேஸ்ட் நிகழ்ச்சியின் சமீபத்திய அத்தியாயத்தில் பில் கேட்ஸ் ஓபன் ஏஐ தலைமைச் செயலதிகாரி சாம் ஆல்ட்மேனுடம் செயற்கை நுண்ணறிவு குறித்து உரையாடினார்.
இந்த உரையாடலில் சாம் ஆல்ட்மேன் கூறும் போது, விளக்கமளிக்கும் ஆய்வுகள் மீது தற்போது பெரும் கவனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, செயற்கை நுண்ணறிவு சாட்ஜிபிடி போன்றவை எப்படி குறியாக்கம் செய்கின்றன, செயல்பாடுகளின் நுணுக்கங்கள் என்னென்ன போன்றவற்றில் இருக்கும் புதிர்கள் அவிழ்க்கப்படும் என்றார்.
மேலும், மனித மூளை செயல்பாடுகள் குறித்த புரிதல்களும் செயற்கை நுண்ணறிவின் உள்ளார்ந்த செயல்கள் பற்றிய புரிதலும் பெரிய சவால்களே. ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வது என்பது காலப்போக்கில் சாத்தியமாகி அதன் வளர்ச்சியும் பயன்பாடும் மேலும் ஊக்குவிப்பு பெறும் என்றார். ஓபன் ஏஐ ஜிபிடி-1 என்பதை உருவாக்கிய போது அது எப்படி வேலை செய்கிறது அல்லது ஏன் வேலை செய்கிறது என்பது பற்றிய ஆழமான புரிதல் இல்லை என்பதையும் ஆல்ட்மேன் ஒப்புக் கொண்டார்.
பில் கேட்ஸ் சிக்கலான சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வியை மாற்றுவது போன்ற குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவின் திறனைப் பற்றி பேசினார். பில் கேட்ஸ் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவின் தீமைகள் பற்றி கவலை தெரிவித்தார், மக்கள் வேலை இழப்பதைப் பற்றியும் கவலையோடு பேசினார். இப்படிச் சொல்லும் போதுதான்,
“ஏன்? என் வேலையே கூட பறிபோகலாம்...” என்றார்.
பில் கேட்ஸ் மேலும் கூறும்போது,
“நான் மலேரியா பற்றியும் மலேரியா ஒழிப்பு பற்றியும் ஆராய்ச்சியில் இறங்குகிறேன், புத்திசாலித்தனமான நபர்களை இதில் ஈடுபடுத்தவும் அதற்கான வளங்களைப் பயன்படுத்துவதற்கும் நான் நல்ல நிலையில்தான் இருக்கிறேன் என்பதில் எனக்கு மிகுந்த உற்சாகம் கிடைக்கிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவு இயந்திரம் என்னிடம்,
'பில், நீ போய் பிக்கிள் பால் விளையாடு, எனக்கு மலேரியாவை ஒழிப்பது எப்படி என்று தெரியும். நீங்கள் மிகவும் மெதுவாகச் சிந்திக்கிறீர்கள் என்று கூறுகிறது என்றால் அது ஒரு தத்துவ ரீதியாக குழப்பமான விஷயம்,” என்று செயற்கை நுண்ணறிவின் எல்லைகளையும் வரம்புகளையும் கேள்விக்குட்படுத்தினார்.