Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ரூ.3,100 கோடி புது பங்குகள் வாய்ப்புடன் ஐபிஓ வெளியீட்டிற்கான ஆவணத்தை தாக்கல் செய்தது Ather Energy

கடந்த மாதம் பொது பங்குகளை வெளியிட்ட பவிஷ் அகர்வாலின் ’ஓலா எலெக்ட்ரிக்’ நிறுவனத்தை தொடர்ந்து பங்குகளை வெளியிட தயாராகும் 2-வது மின்வாகன தயாரிப்பு நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி விளங்குகிறது.

ரூ.3,100 கோடி புது பங்குகள் வாய்ப்புடன் ஐபிஓ வெளியீட்டிற்கான ஆவணத்தை தாக்கல் செய்தது Ather Energy

Monday September 09, 2024 , 1 min Read

பெங்களூருவை தலைமையமாகக் கொண்ட மின் வாகன தயாரிப்பு நிறுவனம் ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பொது பங்கு வெளியீட்டிற்கான முன்னோட்ட ரெட் ஹெரிங் பிராஸ்பக்டஸ் (DRHP) ஆவணத்தை தாக்கல் செய்துள்ளது. ரூ.3,100 கோடி அளவிலான புதிய சமபங்கு வெளியீட்டை இது உள்ளடக்கியுள்ளது.

போட்டி நிறுவனமான பாவிஷ் அகர்வாலின் ஓலா எலெக்ட்ரிக் கடந்த மாதம் பொது பங்குகளை வெளியிட்ட நிலையில், ஏத்தர் எனர்ஜி பங்கு வெளியீட்டிற்கு தயாராகிறது. நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தின் படி, ரூ.1 முக மதிப்பில் 22 மில்லியன் பங்குகளை கொண்டுள்ளது. நிறுவன புரோமட்டர்கள் தரூண் சஞ்சய் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் தலா ஒரு மில்லியன் சமபங்குகளை விலக்கிக் கொள்கின்றனர்.

ஆக்சிஸ் கேபிடல், எச்.எஸ்.பி.சி செக்யூரிட்டிஸ் அண்ட் கேபிடல் மார்க்கெட், ஜேஎம் பைனான்சியல் மற்றும் நொமுரா பைனான்சியல் அட்வைசரி ஆகிய நிறுவனங்கள் பொது பங்கு வெளியீட்டிற்கான நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளன.

ather

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த மாதம் தற்போதைய முதலீட்டாளர் தேசிய முதலீடு உள்கட்டமைப்பு நிதியிடம் இருந்து புதிய சுற்றில் 71 மில்லியன் டாலர் நிதி திரட்டியதை அடுத்து, யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தில் முக்கிய முதலீட்டாளர்களில் ஒன்றான ஹீரோமோட்டர் கார்ப், ஜூன் மாதம், ரூ.124 கோடியில் மேலும் 2.2 சதவீத பங்குகள் வாங்கி தனது பங்கை உயர்த்திக்கொண்டது. இந்நிறுவனம் தற்போது 39.7 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

சென்செக்ஸ் கேபிடல் பாட்னர்ஸ், அட்மன் குழுமம் மற்றும் சைனோ லங்கா நிறுவனம் ஆகியவற்றுடனான கூட்டு மூலம் இலங்கை சந்தையிலும் நுழைய உள்ளது.

(யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷரத்தா சர்மா, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தில் சுயேட்சை இயக்குனராக இருக்கிறார்.)

ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan