ஒரு லட்சம் ரூபாய் விலையில் பஜாஜ் சேதக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
பஜாஜ் சேதக், மின்சார வாகன வடிவில் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்கூட்டர் சந்தையில் மீண்டும் அறிமுகம் ஆகிறது.
பஜாஜ் ஆட்டோ, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேதக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அண்மையில் அறிமுகம் செய்தது. இதற்கான பதிவு 15ம் தேதி துவங்கியுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய் விலை கொண்ட சேதக்கின் டெலிவரி பிப்ரவரி மாதம் முதல் துவங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபலமான சேதக் ஸ்கூட்டரின் மின்சார வடிவம் துவக்கத்தில் புனே மற்றும் பெங்களூருவில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

"ஜனவரி 15 முதல் சேதக் இரண்டு நகரங்களில் கிடைக்கும் என்றும், இது இருசக்கர வாகன போக்குவரத்தில் புதிய துவக்கமாக அமையும்,” என்று பஜாஜ் ஆட்டோ செயல் இயக்குனர் ராகேஷ் சர்மா கூறியுள்ளார்.
பஜாஜ் ஆட்டோ, கடந்த அக்டோபர் மாதம் சேதக்கை அறிமுகம் செய்தது. அர்பனே மற்றும் பிரிமியம் ஆகிய இரண்டு மாதிரிகளில் இந்த மின்சார் ஸ்கூட்டர் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது.
பதிவு செய்வதை எளிதாக்குவதற்காக, வாடிக்கையாளர்கள் சேதக் இணையதளத்தில், 2,000 ரூபாய் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். சேதக் வாகனத்திற்கு குறைந்தபட்ச பராமரிப்பு மட்டுமே தேவை என்றும், ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 12,000 கிமீக்கு ஒரு முறை சேவை செய்து கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டு அல்லது 50,000 கிமீ (எது சீக்கிரமோ அது) மொத்த வாரண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. லித்தியம் அயான் பாட்டரிக்கும் இது பொருந்தும். டிரம் பிரேக் கொண்ட சேதக் அர்பன் மாதிரி ஒரு லட்சம் விலை கொண்டது. டிஸ்க் பிரேக் மற்றும் ஆடம்பர் அம்சங்கள் கொண்ட சேதக் பிரிமியம் ரூ.11.5 லட்சம் கொண்டது.
பஜாஜ் சேதக் எலெக்ட்ரிக் 3 kWh IP67 ரேட்டட் பாட்டரி கொண்டுள்ளது. இதன் எல்க்டிர்க் மோட்டார் 4 kW ஆற்றல் மற்றும் 16 Nm டார்க்கை உண்டாக்குகிறது. சாதாரண சார்ஜர் மூலம் 5 மணி நேரத்தில் முழு சார்ஜ் செய்யலாம்.
"பலவேறு தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் கொண்ட வாகன ஓட்டிகளுக்கு சேதக் ரகங்கள் மூலம் சரியான வாய்ப்பை அளிப்பது தான் எங்கள் நோக்கம். இதை நிறைவேற்ற மேம்பட்ட நவீனமான சேதக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்குகிறோம்,” என்று ராகேஷ் சர்மா கூறினார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்