வருவாய் ஈட்ட வழி செய்யும் 10 சிறந்த சிறுதொழில் யோசனைகள்!
தொழில்முனைவில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பின்பற்றக்கூடிய ஸ்டார்ட் அப் ஐடியாக்களை பார்க்கலாம்.
விரும்பிய நேரத்தில் பணி, கூடுதல் வருமானம் உள்ளிட்ட பல்வேறு சாதகங்களை ஸ்டார்ட் அப் ஐடியா கொண்டுள்ளது. நவீன சந்தையில் நுழைவதும் உற்சாகம் அளிக்கலாம். ஆனால், சொந்த நிறுவனத்தைத் துவக்குவது எளிதல்ல. இதற்கு முதலீடு மட்டும் போதுமானதல்ல, செயல்படுத்தக்கூடிய தனித்துவமான ஐடியாவும் அவசியம். மேலும் உங்கள் வர்த்தகம் குறிப்பிட்ட இலக்கை கொண்டிருக்க வேண்டும்.
இன்று ஸ்டார்ட் அப் துவக்குவதற்காக எண்ணற்ற ஐடியாக்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் இருந்து பொருத்தமானதை தேர்வு செய்வது கடினமானது.
உங்களுக்கு வழிகாட்டக்கூடிய 10 ஐடியாக்கள் பட்டியலை பார்க்கலாம்.
1. துணை மார்க்கெட்டிங் (Affiliate Marketing)
மார்க்கெட்டிங் பிரிவில் செயல்பட்டு இணையம் மூலம் சம்பாதிக்க முடியும். உங்கள் யூடியூப் சேனலுக்கு இது சரியாக வரும். உங்கள் சேனலை வருவாய் வழியாக மாற்றலாம்.
இதே முறையை அதிக போக்குவரத்து கொண்ட இணையத்திலும் செயல்படுத்தலாம். ஷேர் ஏ சேல் அல்லது கிளிக் பாங்க் போன்ற துணை மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் இணைவதன் மூலம் வருவாய் ஈட்டலாம்.
2) ஃபிட்னஸ் பயிற்சி (Fitness Coaching)
பலரும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டிருப்பதால், இது நல்ல ஸ்டார்ட் அப் ஐடியா ஆகும். உங்களுக்கு, உடற்பயிற்சி, ஊட்டச்சத்து , வாழ்வியல் முறை போன்றவற்றில் ஆழமான அறிவு இருந்தால், இந்த பிரிவில் செயல்படலாம். உங்களுக்கு வர்த்தக ஆர்வமும், இருந்தால் அதை உங்கள் வாழ்வியல் ஆர்வத்துடன் இணைப்பதன் மூலம் வெற்றிகரமான நிறுவனத்தை துவக்கலாம்.
3) இணையதள முதலீடு (Investing in buying websites)
இணைய யுகத்தில் சொந்தமாக இணையதளம் இருப்பது முக்கியமானது. வர்த்தக நிறுவனங்கள் இணையதளங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. போக்குவரத்து, டொமைன் பெயர் என பல அம்சங்கள் ஒரு இணையதளத்தின் மதிப்பை தீர்மானிக்கின்றன. எனவே இந்த ஐடியா சிறு வர்த்தகர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இந்தத் துறை செயல்பாடு பற்றி அறிந்திருக்க வேண்டும்.
4) ஆன்லைன் இதழியல் (Online Journalism)
நீங்கள் இதழியல் துறையில் பட்டம் பெற்றிருந்து, வெகுஜன ஊடகத்தில் பணியாற்ற விரும்பவில்லை எனில், ஆன்லைன் இதழியலை முயற்சிக்கலாம். இணைய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். அல்லது வலைப்பதிவு மூலம் உங்கள் சொந்த செய்தி தளத்தை உருவாக்குங்கள். பின்னர் இவற்றில் விற்பனை பகுதியை உருவாக்கு விளம்பரம் மூலம், வருவாய் ஈட்டலாம்.
5) ஆன்லைன் பயிற்சி (Online Tutoring)
உங்களிடம் உள்ள அறிவை பகிர்ந்து கொள்வதில் ஈடுபாடு இருந்தால், ஆன்லைன் பயிற்சி துறையில் இறங்கலாம். யூடியூப் வழிகாட்டு சேனல் அமைப்பது, ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்துவது என பலவற்றை செய்யலாம். ஆனால், விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தாமல், மாறுபட்ட விஷயங்களை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
6) ரியல் எஸ்டேட் மதிப்பீடு (Real estate valuation)
ரியல் எஸ்டேட் மதிப்பீடு நல்ல வாய்ப்பாகும். ஏனெனில் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். எங்கிருந்து பணியாற்றுவது என்பதையும் தீர்மானிக்கலாம். இந்தத் துறைக்கு தனியே பட்டம் பெறத்தேவையில்லை என்றாலும், சான்றிதழ் தகுதி தேவையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சான்றிதழ் பெறுவதோடு ரியல் எஸ்டேட் தொடர்பான ஆழமான புரிதலும் அவசியம்.
7) சாட்பாட் (Chatbot Business)
சாட்பாட்கள் இப்போது மிகவும் பிரலமாக இருக்கின்றன. சமூக ஊடகங்கள் வேகமான தகவல் தொடர்புக்கு வழி செய்வதே இதற்குக் காரணம். பல துறைகளில் கேள்விகள் இருக்கின்றன. இவற்றுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பதில் அளிப்பதாக சாட்பாட்கள் அமைகின்றன.
பல நிறுவனங்கள் சாட்பாட்கள் மூலம் தங்கள் வர்த்தக செயல்பாட்டை தானியங்கிமயமாக்கி வருகின்றன. சாட்பாட்களுக்கான தேவை காரணமாக பல நிறுவனங்கள் டிஜிட்டல் பொருட்களை உருவாக்கி வருகின்றன.
8) வர்த்தக ஆலோசனை (Business Consulting)
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வர்த்தக ஆலோசனைக்காக உங்களை நாடி வருவதாக இருந்தால், இதையே நீங்கள் தொழில்முறையாக செய்யலாம். ஆனால், இதற்கான தகுதி உங்களுக்கு இருக்க வேண்டும். வீடு அல்லது கேரேஜில் இருந்து செயல்படுபவர்களை யாரும் நாடி வரமாட்டார்கள். நீங்கள் செயல்படும் சூழல் மிகவும் முக்கியம். வர்த்தக நிறுவனங்கள் எப்போதுமே தரமான ஆலோசனைகளை நாடுவதால், தேவையான தகுதியும், சான்றிதழும் இருந்தால் இந்த பிரிவில் ஈடுபடலாம்.
9) வலைப்பதிவு (Blogging)
வலைப்பதிவாளர்கள் குறிப்பிட்ட வாசகர் பரப்பை பெற்றதும் தங்கள் செயல்பாட்டை விரிவாக்கிக் கொள்கின்றனர். எனினும் நீங்கள் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் வலைப்பதிவு செய்யலாம். வலைப்பதிவு துவங்க நல்ல எழுத்தாற்றல் அவசியம். உங்கள் வாசகர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம், வாசகர்களை பெற்ற பிறகு, துணை மார்க்கெட்டிங், ஸ்பான்சர்கள் மூலம் வருவாய் ஈட்டலாம்.
10) பாட்காஸ்டிங் (Podcasting)
மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதன் மூலம் பலவற்றை கற்றுக்கொள்ளலாம். பாட்காஸ்டிங் இதற்கான வழி காட்டுக்கிறது. உங்களுக்கு ஆர்வம் உள்ள தலைப்பில் பாட்காஸ்டிங் நிகழ்ச்சி நடத்தலாம். தலைப்பிற்கு ஏற்ப வெற்றி அமையும். வலைப்பதிவு போலவே ஸ்பான்சர் விளம்பரம் என பலவிதங்களில் வருவாய் ஈட்டலாம்.
வெற்றி ரகசியம்: புதுமையான ஐடியாவுடன் துவக்குவது தான் ஸ்டார்ட் அப்பில் வெற்றி பெறுவதற்கான வழி. தேர்ந்தெடுக்க பல வாய்ப்புகள் இருப்பதால் உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்து, அதை கொண்டு வருவாய்க்கான வழியை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரயான்.எம் | தமிழில்: சைபர் சிம்மன்
( பொறுப்பு துறப்பு: வாசகர் சமூகத்தின் பங்கேற்பை ஊக்குவிக்கும் யுவர்ஸ்டோரியின் மைஸ்டோரி பகுதி கீழ் இது வெளியாகிறது. இதில் உள்ள கருத்துகள், பார்வை, கட்டுரையாளருடையது, யுவர்ஸ்டோரி கருத்தை பிரதிபலிப்பது அல்ல.