குறைந்த முதலீட்டில் துவங்கக் கூடிய 10 எளிய வர்த்தகங்கள்!
குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் தொழில் துவங்க விரும்புகிறீர்களா? இந்தியாவில் பிஸினஸ் கன்சல்டெண்டாக விரும்பினால், இந்த கட்டுரை உங்களுக்கு வழிகாட்டும். பிரகாசமான வாய்ப்புள்ள வர்த்தக ஐடியாக்களை கண்டறிய உதவும்.
சரியான வர்த்தகத்தை தேர்வு செய்ய வேண்டும் என நாம் தீவிரமாக யோசிக்கிறோம். வர்த்தகத்தில் தலைமைப் பண்பும் மிகவும் முக்கியம். வர்த்தக முயற்சியில் தவறான தேர்வு எல்லாவற்றையும் பாழாக்கிவிடும். உங்கள் பொருளாதாரச் சூழல். சந்தை நிலை போன்றவற்றுக்கு ஏற்ப சரியான வர்த்தகத்தை தேர்வு செய்ய, மாற்று வாய்ப்புகளையும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.
இந்தியாவில் குறைந்த முதலீட்டில் துவங்கக் கூடிய வர்த்தகங்களுக்கான யோசனைகளை இங்கே பார்க்கலாம். இதோ உங்களுக்காக 10 வர்த்தக ஐடியாக்கள்:
1. மாசு முகமூடி
அனைத்து மெட்ரோ நகரங்களும் காற்று மாசு பிரச்சனையால் தடுமாறுகின்றன. குறிப்பாக தில்லி மிகப்பெரிய அளவில் இந்த பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறது. ஆக, காற்று மாசு முகமூடி தயாரித்தால் எளிதாக விற்கலாம்.
2. மொபைல் செயலிகள்
இந்தியாவில் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மொபைல் செயல் வர்த்தகத்திற்கு நல்ல வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. சந்தையின் தேவையை புரிந்து கொண்டு, உங்கள் வாடிக்கையாளர்களுக்கான நல்ல செயலியை உருவாக்குங்கள்.
3. நீரிழிவு கிளினிக்
இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உங்களிடம் கொஞ்சம் இடம் இருந்தால், நீரிழிவு நோய் பரிசோதனை மையம் அமைக்கலாம்.
4. 3D பிரிண்டிங்
3D பிரிண்டிங் நல்ல வர்த்தக வாய்ப்பாகும். மேம்பட்ட நவீன பிரிண்டிங் வசதியில் முதலீடு செய்ய விரும்பினால் இந்த வர்த்தகத்தை துவக்கலாம்.
ALSO READ
5. மறுசுழற்சி எரிசக்தி
மாற்று வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இயற்கை சார்ந்த வர்த்தகம், நீடித்த எரிசக்தி சார்ந்த வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு பிரகாசகமான வாய்ப்பு உள்ளது.
6. நகை வர்த்தகம்
இந்தியர்களுக்கு நகைகள் மீது ஆர்வம் அதிகம். பெரும்பாலான இந்தியர்கள், தங்க நகைகள் பாதுகாப்பாக கருதுகின்றனர். எனவே, தங்கம் மற்றும் வைர நகை வர்த்தக்த்திற்கு நல்ல வாய்ப்புள்ளது. முத்துகள் மற்றும் அலங்கார நகைகளுக்கும் வரவேற்பு உள்ளது. நகை வர்த்தகத்தை ஆர்வத்துடன் துவக்கலாம்.
7. மழலையர் பள்ளி
இந்தியாவில் தற்போதைய சூழலில், மழலையர் பள்ளி ரூ.4,000 கோடி வர்த்தகமாக கருதப்படுகிறது. கல்வி சார்ந்த வர்த்தகங்களில் தனித்தும் நிற்கிறது. சின்ன குழந்தைகளுடன் விளையாட பிடிக்கும் என்றால், மழலையர் பள்ளி உங்களுக்கு நல்ல வர்த்தகமாக இருக்கும்.
8. பேஷன் டிசைன்
பேஷன் டிசைன் வர்த்தகம், ஸ்டார்ட் அப் பிஸ்னஸ் கன்சல்டண்ட்ஸ் இந்தியாவுக்கு நல்ல வர்த்தகமாக அமைந்துள்ளது. நகர்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வசிப்பவர்கள் பேஷனை முக்கியமாக கருதத் துவங்கியுள்ளனர். உங்களிடம் பேஷன் துறை சார்ந்த சரியான திறன் இருந்தால், இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும்.
9. ஃபிட்னஸ் வல்லுனர்
யோகா அல்லது ஏரோபிக்சில் நிபுணத்துவம் உள்ளவர்கள் ஃபிட்னஸ் வர்த்தகத்தை துவக்கலாம். குறைந்த முதலீட்டில் இதைத் துவக்கலாம். இந்த வர்த்தகம் தேக்கநிலையால் பாதிக்கப்படுவதில்லை.
10. அழகு நிலையம்
அழகு நிலையம் அல்லது பியூட்டி பார்லர்கள், வாடிக்கையாளர்களுக்கு அழகுக் கலை சேவை அளிப்பதோடு, மனதை ரிலாக்ஸ் செய்யவும் உதவுகின்றன. தற்போது இந்த வர்த்தகம் வரவேற்பு மிக்கதாக இருக்கிறது. சரியான இடத்தை தேர்வு செய்து, நல்ல மார்க்கெட்டிங் உத்தியை வகுத்துக்கொண்டால் வெற்றி பெறலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: மனீஷ் வர்மா, தொழில்முனைவோர், வலைப்பதிவாளர்
தமிழில் : சைபர்சிம்மன்
(பொறுப்புத்துறப்பு: இது எங்கள் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட யுவர்ஸ்டோரி கம்யூனிட்டி பதிவு. இந்த பதிவில் உள்ள புகைப்படம் மற்றும் உள்ளடக்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரியது. இங்கு இடம்பெறும் உள்ளடக்கம் ஏதேனும், உங்கள் காப்புரிமையை மீறுவது என கருதினால் எங்களுக்கு தெரிவிக்கவும்.)