Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

விரைவில் வருகிறது பைஜூஸ் ஆகாஷ் IPO - முழு விவரம் இதோ..!

எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் அதன் ஆஃப்லைன் கோச்சிங் துணை நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷன் சர்வீசஸ் லிமிடெட்டின் ஐபிஓ-வை அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விரைவில் வருகிறது பைஜூஸ் ஆகாஷ் IPO - முழு விவரம் இதோ..!

Tuesday June 06, 2023 , 2 min Read

எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் அதன் ஆஃப்லைன் கோச்சிங் துணை நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷன் சர்வீசஸ் லிமிடெட்டின் ஐபிஓ-வை அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பைஜூஸ் நிறுவனம் ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையால் தவித்து வருகிறது. எனவே, செலவினங்களை குறைப்பதற்காக பணிநீக்க நடவடிக்கைகளை அடுத்தடுத்து அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில், நிதி திரட்டுவதற்காக அடுத்த ஆண்டு மத்தியில் ஆகாஷ்-இன் ஐபிஓவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் நிதியானது ஆகாஷின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு தேவையான மூலதனத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BYJU'S Aakash

ஆகாஷ் எஜுகேஷன் சர்வீசஸ் லிமிடெட் வருவாய் 2023-24 நிதியாண்டில் ரூ.900 கோடி எபிட்டாவுடன் (வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை ஆகிய செலவீனங்களுக்கு முன் உள்ள வருவாய்) ரூ.4,000 கோடியை எட்டும் பாதையில் உள்ளதாக பைஜூஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

பைஜஸ் ஏப்ரல் 2021ல் ஆகாஷ் இன்ஸ்டிட்யூட்டை சுமார் $950 மில்லியனுக்கு வாங்கியது. அதன் பிறகு, நிறுவனத்தின் வருவாய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 24 நிதியாண்டில் ரூ.900 கோடி நிகர லாபத்தையும் ரூ.4000 கோடி வருவாயையும் எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

கொரோனா காலத்தின் போது பள்ளிகள் மூடப்பட்டதால் வேகம் பெற்ற ஆன்லைன் கல்வி, கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதால் எட் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனால், நிறுவனங்களின் நஷ்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"BYJU's... அதன் துணை நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷன் சர்வீசஸ் லிமிடெட்டின் ஆரம்ப பொதுப் பங்களிப்பை அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை பைஜூஸ் நிறுவனம் வழங்கியுள்ளது,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகாஷ் தற்போது நாடு முழுவதும் உள்ள 325 மையங்கள் மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சேவை செய்து வருகிறது. இதனால் பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது. ஆகாஷுக்கு சோதனை-தயாரிப்பு கல்வித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. பைஜூஸ் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் இத்தருணத்தில் ஆகாஷின் ஐபிஓ மிக முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.