2500 ஊழியர்கள் பணி நீக்கம்; லாபத்திற்காக பைஜூஸ் நிறுவனம் எடுக்கும் அதிரடி முடிவு!
எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் 2023ம் ஆண்டுக்கான லாபத்தை எட்டிப்பிடிப்பதற்காக புதிய டெக்னிக் ஒன்றை கையில் எடுத்துள்ளது அதன் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் 2023ம் ஆண்டுக்கான லாபத்தை எட்டிப்பிடிப்பதற்காக புதிய டெக்னிக் ஒன்றை கையில் எடுத்துள்ளது அதன் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட போது, இந்தியாவில் ஆன்லைன் கல்வி முறை அறிமுகமானது. இதனால் ஏற்கனவே முன்னணியில் இருந்த எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் அசுர வளர்ச்சி அடைந்தது.
ஆனால், கொரோனா லாக்டவுன் நடைமுறைகள் முடிவுக்கு வந்த பிறகு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை பலவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
தற்போது நாட்டின் முன்னணி இணையவழி கல்வி நிறுவனமான பைஜூஸ் () லாபத்தை அதிகரிப்பதற்காக அடுத்த ஆறு மாதத்திற்குள் 5 சதவீதம் அல்லது 2,500 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது.
2500 ஊழியர்கள் பணி நீக்கம்:
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வருவாய் அதிகரிக்கவும், லாபகரமான நிறுவனமாக பைஜூஸை மாற்றுவதும் திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
பைஜூஸ் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பணிநீக்கங்கள் மற்றும் ஒரே வேலையை பலர் செய்வதை தவிர்க்க 50 ஆயிரம் பணியாளர்களில் இருந்து 5% பேர் படிப்படியாக தயாரிப்பு, உள்ளடக்கம், ஊடகம் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களில் இருந்து கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவார்கள்,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, ஒரே வேலையை பலர் செய்வதை தடுப்பதற்காகவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் 50 ஆயிரம் பணியாளர்களில் இருந்து 5 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2,500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் அதே நேரத்தில் புதிதாக 10,000 ஆசிரியர்களை பணிக்கு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மார்க்கெட்டிங் செலவு அதிகரிப்பு:
லாப நோக்கத்திற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள பைஜூஸ், மார்க்கெட்டிங்கிற்கான செலவை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் பெரும்பாலான இடத்தை பைஜூஸ் விளம்பரம் மூலமாக பிடித்துள்ளது.
இதேபோல், உலகம் முழுவதும் விளம்பரப்படுத்துதலை அதிகரிப்பதற்காக அதிகம் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், பைஜூஸ்
, , , மற்றும் HashLearn போன்ற பல நிறுவனங்களை வாங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றாக ஒருங்கிணைத்து பிறகு அதில் இருக்கும் பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.2019-20ல் ரூ.232 கோடியாக இருந்த பைஜூஸ் நிறுவனம், 2020-2021ல் ரூ.4,588 கோடி இழப்பை சந்தித்துள்ளது. 2020 நிதியாண்டில் 2,511 கோடி ரூபாயாக இருந்த வருவாய் 21 நிதியாண்டில் 2,428 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்க, விற்பனை அழைப்புகள், மின்னஞ்சல், வீடியோ அழைப்புகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிதியாண்டில் தொடர்ந்து புதிய ஆசிரியர்களை பணியமர்த்தும் பணி தொடரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வரும் ஆண்டில் மொத்தம் 10,000 ஆசிரியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
லாபகரமான மற்றும் தொழில்நுட்ப ரீதியில் உலகின் மிகப்பெரிய எஜுடெக் நிறுவனவங்களுக்கான நட்சத்திர பட்டியலில் இடம் பெறுவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள பைஜூஸ், இது அதற்கான முதல் படி என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொகுப்பு - கனிமொழி
‘கடந்த 6 மாதங்களாக பைஜூ சரிவர தூங்கவில்லை’ - மனைவி திவ்யா உருக்கமான பதிவு!